Sunday, March 22, 2009

உன் நினைவுகளை சுமந்தபடி

என்னவனே உன் கை பிடித்து
நடக்கையிலே ஒரு
புதிய உலகை கண்டேன்
நீ கொடுத்த மல்லிகையில்
உன் வாசத்தை உணர்ந்தேன்
எதிரில் வருபவரையும்
ஒரு முறை நீ என
கற்பனை செய்தேன்
உன்னிடம் பேசும் போதெலாம்
இரவையும் தூங்க விடாமல்
என்னுடன் விழித்திருக்க வைத்தாய்
பகலில் உன்னிடம் பேசியதை
எல்லாம் நினைத்து தனியாக
சிரிக்கும் பைத்தியம் ஆக்கினாய்
ஏனோ இன்று என்னை வெறுக்கிறாய்
உன் மனதால் என்னை
பிடிக்கவில்லை என்று சொல்
என் நிழால் மட்டும் அல்ல
என் முச்சு காற்றும் உன்மீது படாதாபடி
எங்கயாவது போய் விடுகிறேன்
உன் நினைவுகளை மட்டுமாவது
சுமந்தபடி


Wednesday, March 18, 2009

எனது ஆசைகள்


நீ எனக்கு கொடுத்த முத்தத்தில்

என் கன்னங்களும்

உதடுகளும் மட்டும் அல்ல

அந்தி வானமும் வெட்கத்தால்

சிவந்து விட்டது


நீ வர மாட்டாய் என் தெரிந்தும்

உன் வருக்கைக்காக காத்திருக்கும்

என் இமைகளின் தேடலை

என்ன செய்ய




நான் மிகவும் ரசிக்கும் கவிதை
எனக்காக நி நிலவினில்
தூதூ அனுப்பிய குட் நைட்



எனக்கு மட்டும்

உன் முகம் காட்டும்

அதிசய கண்ணடி

நிலா



நான் உன்னக்காக எழுதிய

கவிதைகளை பார்த்து என்

கவிதையை தாங்கும்

காகிதமும் உன்னை காதலிக்கிறது




தனிமையை

மிகவும் ரசித்தேன்

நீ என்னுடம் இருக்கும் போது

இன்று அதே தனிமையை

mikavum வெறுக்கிறேன்

நீ என்னை விட்டு போனதை

நினைவு படுத்துவதால்





என்னுடன் சேர்ந்து

உன் வருக்கைக்காக காத்திருந்து நிலவும்

தினம் தினம் தேய்கிறது

Monday, March 9, 2009

தில் தில் திகில் விடாது கருப்பு

கலைஞ்சர் டிவீல வர தில் தில் மனதில் ப்ரோக்ராம் மாதிரி

இந்த தில் தில் திகில் கதை எழுத மகா என்ன அழச்சி இருகாங்க அவங்களுக்கு நன்றி .

சரி கதைக்கு போகலாம் வாங்க

பாரதிராஜா சார் படத்துல வர மாதிரி எங்க பாத்தாலும் பச்ச பசேல்னு வயல் ,ரெண்டுஆல் உயரத்துக்கு பனைமரங்கள் , எட்டி பரிகுற மாதிரி மாந்தோப்புக்கள் ,இந்த மாதிரி அழகான கிராமத்துல தான் இருக்காரு நம்ப ஹீரோ ஈஸ்வர் .

முதல் முறையாக நம்ப ஹீரோ தான் காலேஜ் படிக்கர்த்துக்காக இந்த கிராமத்துல இருந்து பத்து கிலோ மீட்டர் வந்து பக்கத்து ஊர்ள இருக்க பச்சையப்பன் கல்லுரில படிகுறார்.

இன்னைக்கு ஈஸ்வரின் நண்பன் சிம்புவுக்கு பிறந்தநாள் என்பதால் நண்பர்கள் அனைவரும்இன்று இவினிங் சினிமாவுக்கு போகலாம் என்று முடிவு செய்தனர் .என்ன படத்துக்கு போகலாம் என்று அனைவரும் யோசித்து கொண்டு இருக்கும் போது ஈஸ்வர் மச்சி நாமா இனிக்கு எதாச்சி பேய் படத்துக்கு போகலாமாடானு kettka .

விக்கி : ஏன் மச்சி உனக்கு இந்த கொலைவெறி

ஈஸ்வர் : இல்லடா மச்சி நாமளும் எத்தன நாளைக்கு தான் இந்த காதல் படங்களையே பாக்கறதுஅதான் இனிக்கு ஏதாச்சி தேரரா பண்ணனும்டா ஓகே .

விக்கி : ஓகே மச்சி

இவேநிங் எல்லாரும் சிம்புவோட பைசால ராக்கி தியேட்டர்ல திகில் படம் பாக்க ரெடி ஆய்ட்டாங்க .

படமும் முடிஞ்சி எல்லாரும் நல்ல படிய வெளில வந்தாங்க .

ஈஸ்வர் முகத்துல மட்டும் ஒரு மாற்றம்
விக்கி : என்னடா மச்சான் ஈஸ்வர் பேய் படத்த பாத்துட்டு பேய் அறஞ்ச மாதிரி வாரான்

சிம்பு : ம்ம்ம்ம் அவன் அந்த பேய் கிட்ட போன் நம்பர் கேட்டு இருப்பான் . அதுக்கு அது நம்பர் கொடுக்க மாட்டேன் போட போரிகினு சொல்லி இருக்கும் அதான் மூடவுட்டோட வாரான் என்னடா மச்சி நான் சொல்றது சரிதானாட

ஈஸ்வர் : போங்கடா ஏன்தான் இந்த படம் பாத்தநோனு இருக்கு மனசு ஒரு மாதிரி இருக்குடா .

சிம்பு :என்னடா சரிவா புண் பட்ட மனதை புகைவிட்டு ஆத்து

ஒரு மாதிரி இருக்க மனச ஒரு கட்டிங் ஊ த்தி குளிப்பாட்டுனு பெரியவங்க சொல்லி இருகாங்க .


ஈஸ்வர் : இல்லடா மச்சான் நான் கெளம்புறேன் .எங்க ஊருக்கு போற கடைசி பஸ்சும் போயிட்டு இருக்கும் .நான் இங்க இருந்து பத்து கிலோ மீட்டர் நடந்து போகனும்டா நான் வரேண்டா .


சிம்பு & விக்கி : இல்லன இருடா நாங்க உன்ன கொண்டு போய் உங்க வீட்ல விட்டு வரோம்னு சொன்னாங்க .


ஈஸ்வர் : இல்லடா மச்சி நீங்க போங்கடா நாளைக்கு காலேஜ்ல பாக்கலாம் பாய்

சிம்பு & விக்கி : ஓகே பாய் மச்சி

மறுநாள் காலை சிம்பு , விக்கி காலேஜ் வந்துவிட்டனர்

சிம்பு : என்னடா மச்சி ஈஸ்வர பாத்தியாடா

விக்கி : இல்லடா மச்சி என்னனு தெரியல அவன் இன்னும் காலேஜ் வரலாட

சிம்பு : சரி இரு அவன் மொபைல்கு கால் பண்ணி பாக்கலாம்((இந்த என் தற்சமயம் தொடர்பு கொள்ள முடியாது தயவு செய்து சிறிது நேரம் கழித்து முயற்சிக்கவும் ))

என்னடா செல் ஆப் பண்ணி வச்சி இருக்கான்

விக்கி : சரி அவங்க விட்டு லேன்லைங்கு கால் பண்ணி பாருடா

சிம்பு : ( ட்ரிங் ட்ரிங் ட்ரிங் )

விக்கி : என்னடா

சிம்பு : இருடா இப்ப தான் ரிங் ஆகுது

ஈஸ்வர் அம்மா : ஹலோ யாருங்க சோகமான குரலில்


சிம்பு : ஹலோ அம்மா நான் ஈஸ்வர் பிரண்டு சிம்பு பேசுறேன்மா. ஈஸ்வர் இனிக்கு காலேஜ் வரல அதன் என்னனு கேக்கலாம்னு கால் பன்னேன்மா.


(ஈஸ்வர் அம்மா சொன்ன பதிலால் சிம்புவின் செல் தன்னை அறியாமல் கிலே விழுந்தது )

விக்கி : மச்சான் என்னடா என்னாச்சி ?

சிம்பு : ?????????

விடாது கருப்பு


தொடரும் .................................

Wednesday, March 4, 2009

பிறந்தநாள்





நீ கவிதை எழுதி
வாழ்த்து சொல்லும்
அழகிற்காகவே
தினம் தினம்
பிறந்தநாள்
கொண்டாடலாம் நான்
நீ என் மீதான
உன் ஆசைகளை
சொல்லும் போதெல்லாம்
ஒவ்வொரு முறையும்
புதிதாக பிறக்கிறேன்
உன் காதலியாக
நீ என் மிது
காட்டிய பாசங்கள்
எல்லாம்
இன்று என்னுள்
பிறந்து இருக்கிறது
காதல் குழ்ந்தையாய்
வெட்கம் என்றால்
என்னவென்றேதெரியாதவள்
நீ என் கை பிடித்தது
முத்தம் கொடுத்து
மடியில் தலைசாய்த்து
என் மார்போடு
உன் முகம் புதைக்கும்
போது பிறந்தது
எனக்கான முதல் வெட்க்கம்

Sunday, March 1, 2009

மரணம்..


ஒரு அகால
மரணம்.
ஊரே ஒன்றாகி
கதறிக்கொண்டிருந்தது.

மெதுவாக எட்டி
பார்த்தேன்.

அத்தனை
கூச்சல்களுக்கு
மத்தியிலும்
சட்டென்று எனக்கு
தோன்றியது.

கொடுத்து வைத்தவன்
இவன்தான் என்று.

இப்போதெல்லாம்
மரணத்தை மிகவும்
அதிகமாக நேசிக்க
துவங்கிவிட்டேனோ
என தோன்றுகிறது எனக்கு.

யாருடைய கண்ணீரையும்
விலையாக பெற்றுக்கொள்ளாமல்
என் மரணம் கூட
மிக மிக
தனிமைபடுத்தப்பட்டதாகவே
இருக்க விரும்புகிறேன்.

அப்போதாவது
மௌனமாய் என் மீதான
உன் காதலை பற்றி
ஏதேனும்
சொல்லக்கூடும் நீ.