Monday, April 20, 2009

இனிய திருமண நல் வாழ்த்துக்கள்


இன்று மாலை திருமணம் செய்ய விருக்கும் என் தோழி சுஜிக்கு
புது இல்லறம் நல்லறமாய் அமைய என் வாழ்த்துக்கள் .

ஹாய் டி செல்லம் இனிய திருமண நல் வாழ்த்துக்கள்

புது இல்லத்தில் புது மணமகளாய் அடி எதுத்து வைக்கும் என் குல விளக்கே
.
அறிமுகம் இல்லாத மனிதர்கள் , பரிச்சய படாத குணங்கள் என எல்லாம் கலந்து இருக்கும் உன் புகுந்த வீட்டில் நியும் அவங்கள மாதிரி அவங்க குணத்துக்கு தகுந்த மாதிரி நடந்துக்கோ .
எப்பவும் சந்தோசமா இரு .
இனி உன்னில் பாதிய இருக்க போற உன் கணவர் கிட்ட அன்பா இரு .
எந்த விஷயமா இருந்தாலும் விட்டு கொடுத்து போ. அதுக்காக நீ எதுக்காகவும் உன் தன்மானத்த விட்டு கொடுக்காத .
கணவரோட அம்மாவ உன் அம்மாவ நினசிகோ பெரியவங்க கிட்ட மரியாதைய நடந்துக்கோ . உன் நாத்தனார் கிட்ட ஒரு தோழி போல நடந்துக்கோ .எப்பொழுதும் கவலை இல்லாமல் சந்தோசமா இரு
மற்றவை நேரில்

வாழையடி வாழையாய் பூமலரும் சோலையாய்
நல்லதொரு வேளையில் புதுமனங்கள் சேர்ந்திட
தேவர்களும் வாழ்த்துவர் மாந்தர்களும் வாழ்த்துவர்
உன் தோழியான நானும் வாழ்த்துவேன் என் தோழைமையான என் ப்லோக் உலக நண்பர்களும் உன்னை வாழ்த்த
வாழ்க நிவீர் பல்லாண்டு பல்லாய்ரத்தாண்டு என்று இந்த உலகும் உன்னை வாழ்த்தும்

Wednesday, April 15, 2009

நினைவெல்லாம் நியே


என்னவனே நீ என்னை மயக்கிய
இந்த மாலை வேளையில்
நான் உன் கை பிடித்து நடக்கும்
இந்த பயணம் முடிவில்லா இந்த
வானமும் பூமயும் போல் தொடர்ந்து
கொண்டே இருக்க
வேண்டும் .


என்னவனே நீ உன் கைகளால்
என் கன்னங்களை பிடித்து
நீஅருகினில் வந்து முத்தம்
இடும் நேரத்தில் என் கண்கள்
வெட்கத்தால் அதன் இமை கதவுகளை
பூட்டி கொள்ள என் இதழ் உனக்கு
கதவு திரக்க நீ கொடுத்த
முத்தம் நித்தம் நித்தம்
இனிக்குதடா


என்னவனே உன் பெயரை எழுதி

எழுதி உன் பெயரே எனக்கு

ஸ்ரீ ராமாஜெயமாய் மாறி

போனதடா

இறைவன் வந்து என்னிடம்

உனக்கு என்ன வரம் வேண்டும் என்று கேட்டால்

.ஒரே ஒரு நொடி மட்டும் உன் விரல்

பட்டு உன் இதழ் தொடும் புல்லாங்குழாலாய்

மாற வேண்டும் என்று கேட்பேனடா.

Saturday, April 11, 2009

கல்லறை



என்னவனே உன் முகம் எனக்கு
கனவில் மட்டுமே காட்டுவாய்
என்றால் சொல்
(நான் இப்பவே விழி மூடி
கல்லறைக்கு போகவும் தயார் )
நான் எப்பவும் விழி மூடி இருக்கவும் தயார்

கல்லறைமீது பூத்த பூக்கள்
கடவுளின் சன்னதி சேர
முடியாத சோகம் போல் தான்
.எனது ஆசைகளும் கல்லறை
பூக்களை போல உன்னை சேர
முடியாமல் என்னுளே
புதைந்து கொண்டு இருக்கிறது



என்னவனே நீ என்னை விட்டு
சென்று கொண்டு இருப்பதயை
பார்த்து கொண்டு நான் உயிருடன்
அணு அணுவாக சாவதை விட
நிம்மதியாக கல்லறையில்
உறங்குவதே மேல்



பசிக்கு அழும் குழ்ந்தையை போல்
தான். என் சோகங்களை உன்னிடம்
சொல்லவும் முடியாமல் என்னுளே
வைத்து கொள்ளவும் முடியாமல்
ஒரு குழ்ந்தையை போல் தினம்
தினம் அழுகிறேன்
தனிமையில்



அவனுள்ளே இருக்கும் காதலியாய் அவனும்
என்னை புரிந்து கொள்ள வில்லை
உண்ணுலே இருக்கும் தோழியாய்
நீயும் என்ன புரிந்து கொள்ள வில்லை
என்னை புரிந்து வைத்துள்ள ஒரே உயிர்
உயிரே இல்லாத அந்த கல்லறை மட்டுமே
எனக்காவே காத்து கொண்டு
இருக்கிறது .



எந்தன் திசை அறிய உனக்கு
என்றும் நான் திசை மாறும்
பறவை தான் .என் திசையை
நீ அறியும் வரை

Tuesday, April 7, 2009

முத்தம்




என்னவனே நீ எனக்கு கொடுத்த

முதல் முத்தத்தினை நினைக்கும்

போதெல்லாம் வானத்தில் இறக்கை

இல்லாமல் பறக்கிறேனடா.

நீ முத்தம் இட்டு என்னை கொஞ்சி

சாமதானம் படுத்தும் அழகிற்காகவே

உன்னிடம் எத்தனை முறை

வேண்டுமானாலும் வீண் சண்டைகள்

போடலமடா

என்னவனேஉன்னை கண்டதும்

என் இமைகளும்

சட்டென்று சந்தோஷத்தில்

முத்தம் இட்டு கொள்கின்றன

Friday, April 3, 2009

கனவு தேசம்











எப்படியும் உள்ளே விடக்கூடாதென்று
இறுக என் கண்களை பூட்டிக்கொண்டு
தூங்க சென்றாலும்
கள்ள(ச்)சாவி போட்டு இரவை
ஆட்கொண்டு விடுகின்றன
உன் கனவுகள்
****************************************************
இதுவரை இல்லாத அதிசயமாய்
ஒரு நூறு நிலவுகளை கொண்டு
என் இரவுகளை அலங்கரிக்கிறது
உன் கனவுகள்
நீ என்னுள் வந்ததனால்
******************************************************
இரவுக்கு அழகு நிலவு
நிலவுக்கு அழகு தனிமை
என் தனிமைக்கு அழகு உன் நினைவு
என் இரவுக்கு அழகு உன் கனவு
******************************************************
அதிகாலையில் காணும் கனவு பலிக்குமாமே
அப்படி என்றால் இப்பொழுது
நாம் பிள்ளைகளுக்கு கொள்ளு பேரன்
பிறந்திருக்க வேண்டும் .
*******************************************************
" செல்லமா "
"என்னடா "
"உனக்கு கனவெல்லாம் வருமா "
" ம்ம் வருமே நெறைய "
"அந்த கனவுல
நான் வருவானா ......?"
"ம்ம் ... வருவ "
" அப்ப உனக்கு
புடிச்ச கனவு சொல்லேன் ..."
"எனக்கு எல்லா கனவுமே
பிடிக்கும் டா ...."
" எல்லாம்னா ......?
" எல்லா கனவும் தான் "
" அப்ப நான் வராத கனவும் புடிக்குமா ...?
" அய்யோ மக்கு "
உன்னை தவிர என் கனவில் வேற
யாரையும் நான் அனுமதிப்பதில்லை அதனால
தான் என் எல்லா கனவும் எனக்கு புடிக்கும்னு சொன்னேட
அய்யோ வரமடி நீ எனக்கு
...............................................................................................................