Sunday, February 8, 2009

இதயத்தை கடன் கொடு

அன்பாய் பழகும்
அன்னையிடம் கூட
சொல்ல முடியவில்லை
என் வேதனைகளை..

உடன் பிறப்புகளாக
பழகும் தோழிகளிடம் கூட
சொல்ல முடியவில்லை
என் வலிகளை..

ஆறுதல் தரும்
கவிதைகளில் கூட
சொல்ல முடியவில்லை
என் கண்ணீரை..

புரிந்தும் புரியாதது
போல் பார்க்கிறாய்
அனைத்தையும்
சொல்லும் உன்னிடம்
கூட சொல்ல முடியவில்லை
உனக்கான என் காதலை . .

காத்திரு..
கடவுளால்
நிச்சையிக்கப்பட்ட
பிப்ரவரி பதினான்கு
அன்று உனக்கான
என் இதயத்தை தருகிறேன்..

ஏற்க மனம் இருந்தால்
ஏற்று கொடுக்கிறேன்
இல்லையேல்
உன் இதயத்தை
எனக்கு கடன் கொடு..

அடுத்த வருடம்
திருப்பி தரும்போது
உன் இதயத்தை சேர்த்து
மூன்று இதயமாக தருகிறேன்.


Saturday, February 7, 2009

காத்திருப்புகள்


உன் நினைவுகள்
என்னுடன் இருப்பின்
பிரிவுகள் நிரந்தரம்
அல்ல எனக்கு
நீ வேண்டாம் என்று
முற்று புள்ளி வைத்த
என் காதல்.
என்றாவது ஒரு நாள்
மீண்டும் சில
புள்ளிகள் வைத்து
தொடரும் என்ற நம்பிக்கையல்
காத்திருக்கிறேன் ......

Thursday, February 5, 2009

பிரிவு

உன்னை மறக்க நினைக்கும்
ஒவ்வொரு நொடியும்
உன்னை தான் நினைக்கிறேன்
என்பதை மறந்து
விடுகிறது என் இதயம் .
நீ என் மீது
காட்டிய அன்பால்,
அன்பை நேசிக்க துவங்கினேன் .
நீ என் மீது
காட்டிய கோபத்தால்
கோபத்தை நேசிக்க துவங்கினேன்.
நேற்று நீ என்னை
விட்டு பிரிந்ததால்
இன்று நான்
பிரிவையும் நேசிப்பவளாய்
மாறிவிட்டேன்

Friday, January 30, 2009

நம் காதல்

கண்மணி..
இனி நீ சூடும் பூக்களெல்லாம்
பூக்களாக இருக்காது..
அது என் காதலாகத்தான் இருக்கும்..
ஆம்.. உலகத்தில் உள்ள
அத்தனை பூக்களிலும்
என் காதலை நிரப்பி வைக்க போகிறேன் ..
என்றேனும் நீ பூக்கள் சூட..
என் காதலோடு என் நெஞ்சமும்
நிறைந்து போகும்.
............................................
நமக்கான உலகத்தில்
உன்னை மட்டும்
வெளியே அனுப்பிவிட்டு
இருந்த ஒரு
வழியையும் இறுக
அடைத்துக்கொண்டு விட்டது
நம் காதல்..
இனி உன் புன்னகைகளின்
சாரலோடும்..
உன் நினைவுகளின்
தூரலோடும் . .
வாழ்வதை தவிர
வேறென்ன செய்ய முடியும் நான்.
.....................................

Friday, January 23, 2009

வாங்க விளையாடலாம்







yaru

யாரு எவ்ளவு ஸ்கோர் எடுத்ததுன்னு கமெண்ட்ல போட்டு போங்க ஓகே

அந்த தாத்தா யாரு தெர்யுமா