
ஒரு அகால
மரணம்.
ஊரே ஒன்றாகி
கதறிக்கொண்டிருந்தது.
மெதுவாக எட்டி
பார்த்தேன்.
அத்தனை
கூச்சல்களுக்கு
மத்தியிலும்
சட்டென்று எனக்கு
தோன்றியது.
கொடுத்து வைத்தவன்
இவன்தான் என்று.
இப்போதெல்லாம்
மரணத்தை மிகவும்
அதிகமாக நேசிக்க
துவங்கிவிட்டேனோ
என தோன்றுகிறது எனக்கு.
யாருடைய கண்ணீரையும்
விலையாக பெற்றுக்கொள்ளாமல்
என் மரணம் கூட
மிக மிக
தனிமைபடுத்தப்பட்டதாகவே
இருக்க விரும்புகிறேன்.
அப்போதாவது
மௌனமாய் என் மீதான
உன் காதலை பற்றி
ஏதேனும்
சொல்லக்கூடும் நீ.