Thursday, October 13, 2011

ஆசை


உன் கை பிடித்து கடற்கரை மணலில் நடக்க ஆசை
பேருந்து பயணத்தில் ஜன்னலோர இருக்கையில் உன் தோள் சாய ஆசை
முடிவில்லா சாலையில் உன்னுடன் பயணம் செய்ய ஆசை
நீ உண்ட மிச்சத்தை நான் உன்ன ஆசை
கொட்டும் மழையில் ஒற்றை குடையில் நாம் நடக்க ஆசை
யாரும் இல்ல ஆத்தங்கரையில் உன் மடி சாய ஆசை
உன் கனவுகள் என்னை தினமும் எழுப்ப ஆசை
உன் நினைவுகளுடனே கண் மூட ஆசை
எனக்குள் வரும் கண்ணீரை உன் விரல் துடைக்க ஆசை
என் கரத்தை நீ மட்டும் பிடிக்க ஆசை
காற்றுக்கு கூட இடைவெளி விடாமல் நீ என்னை கட்டி அணைக்க ஆசை
உதட்டு சாயம் இல்லாமை என் இதழ்களை நீ சிவக்க வைக்க ஆசை
தொலைபேசியில் நீ கொடுத்த முதல் முத்தத்தை போல் இன்னொரு முத்தம் பெற ஆசை
நீ வங்கி தரும் பூக்களில் உன் வாசம் வீச ஆசை
மழை வராமலே உன் அன்பில் நான் நினைய ஆசை
உன் காதலில் நான் கரைய ஆசை
அடுத்த ஜென்மத்தில் அல்ல இந்த ஜென்மத்திலே நாம் திருமணம் செய்து கொள்ள ஆசை
இதில் எதுவுல் நடக்காது என்று தெரிந்தும்
ஏதோ ஒரு ஆசையில் காத்து கொண்டு இருக்கிறேன்
இந்த ஜென்மத்தில் தப்பி தவறி இதில்
எதாவது ஒன்று நடக்காத என்ற ஏக்கத்தில்