
ஃபிப் 14 அன்று காதலர் தினமாமே
அன்று என்ன ஸ்பெஷல்
என கேட்கிறார்கள் என் தோழிகள்
அவர்களுக்கு எப்படி புரிய வைப்பேன்
என் காதலின் தினம் மார்ச் 17 என்று
கரும்பு தின்றதால் உதடு எறிகிறது என்கிறாய்
நான் கொடுக்கும் முத்தம் மட்டும்
இனிக்கிறது என்கிறாயே அது எப்படி!
மூச்சு விடவும் சிரமமாத்தான் இருக்கிறது
உன் சுவாசக் காற்று என் சுவாசமாய் மாறும் போழுது
உன் இதழ்களால் என் இதழ்களை தீண்டும் போது மட்டும்
என் இமைகள் மூடி திறக்கின்றன.
ஒரு நாளைக்கு எத்தனை முறை தான்
என் இமைகள் மூடி மூடி திறக்கும்
நீயே சொல்
நீ காதலோடு அனைத்தால்
மட்டுமல்ல
அடித்தாலும் சுகமே எனக்கு