
உன்னை பற்றிய ஆயிரம் ஆசைகள்
மனதில் சுமந்து கொண்டு
என்னை கடந்து செல்லும் ஒவ்வொரு
நொடியிலும் இந்தநொடி நீ
என்ன செய்து கொண்டு இருப்பாய் என்று
என் நிமிடங்களையும் உனக்காய்
செலவழித்து கொண்டு இருக்கிறேன்
நாளைய விடியலிலாவது உன்
முகம் காண மாட்டேனா
என்ற ஏக்கங்களுடன் விழி மூடுகிறேன்
உனக்காய் காத்திருந்த நொடிகள்
வீண் போகாமல் மாமன் மகன்
நி வர
நீ என்னை கட்டி அணைத்ததில்
காற்றுக்கும் மூச்சி திணறல்
ஏற்பட்டு விட்டது .
குளிர் காற்றும் என்னை திண்ட விடாமல்
உன்னையே எனக்கு
போர்வையாய் மாற்றினாய்
உன்னோடு நான் கொண்ட காதல்
நான் மண்ணோடு மறையும் வரை
என்னோடு கலந்திருக்க வேண்டும்