Thursday, October 13, 2011

ஆசை


உன் கை பிடித்து கடற்கரை மணலில் நடக்க ஆசை
பேருந்து பயணத்தில் ஜன்னலோர இருக்கையில் உன் தோள் சாய ஆசை
முடிவில்லா சாலையில் உன்னுடன் பயணம் செய்ய ஆசை
நீ உண்ட மிச்சத்தை நான் உன்ன ஆசை
கொட்டும் மழையில் ஒற்றை குடையில் நாம் நடக்க ஆசை
யாரும் இல்ல ஆத்தங்கரையில் உன் மடி சாய ஆசை
உன் கனவுகள் என்னை தினமும் எழுப்ப ஆசை
உன் நினைவுகளுடனே கண் மூட ஆசை
எனக்குள் வரும் கண்ணீரை உன் விரல் துடைக்க ஆசை
என் கரத்தை நீ மட்டும் பிடிக்க ஆசை
காற்றுக்கு கூட இடைவெளி விடாமல் நீ என்னை கட்டி அணைக்க ஆசை
உதட்டு சாயம் இல்லாமை என் இதழ்களை நீ சிவக்க வைக்க ஆசை
தொலைபேசியில் நீ கொடுத்த முதல் முத்தத்தை போல் இன்னொரு முத்தம் பெற ஆசை
நீ வங்கி தரும் பூக்களில் உன் வாசம் வீச ஆசை
மழை வராமலே உன் அன்பில் நான் நினைய ஆசை
உன் காதலில் நான் கரைய ஆசை
அடுத்த ஜென்மத்தில் அல்ல இந்த ஜென்மத்திலே நாம் திருமணம் செய்து கொள்ள ஆசை
இதில் எதுவுல் நடக்காது என்று தெரிந்தும்
ஏதோ ஒரு ஆசையில் காத்து கொண்டு இருக்கிறேன்
இந்த ஜென்மத்தில் தப்பி தவறி இதில்
எதாவது ஒன்று நடக்காத என்ற ஏக்கத்தில்

Sunday, August 21, 2011

சுகமான நினைவுகள்நான் உன்னிடம் பேசியதை
எல்லாம் நினைக்கும் போது
என் இதயம் வெடிப்பதை போல வலி.

நிஜமாகவே வெடித்திருந்தால் கூட
ஈவளவு வலி இருந்திருக்காது .

உனக்கும் எனககுமான எதிர்காலங்கள்
இனி சேர்ந்து வரபோவதில்லை என்று
அன்றே தேர்ந்திருந்தால் சத்தியமாக
சொல்கிறேன் உன்னிடம் சண்டை
போட்டு இருக்க மாட்டேன் .

இன்று உன் நினைவுகள் மட்டுமே
என் நிகழ்கலங்கலாகவும் எதிர்கலங்கலகவும்
சென்று கொண்டு இருக்கிறது .

காதல் நிராகரிப்பின் வலியை
இன்று நான் உணரும் போது தான் தெரிகிறது
அன்று உன் மனம் என்ன
பாடு பட்டு இருக்கும் என்று .

நீ என்னை மறப்பதற்காக
வேறு எவளிடமும் பேசி விடாதே
உன்னுடனான சந்தோசமும் துக்கமும்
எனக்கு மட்டுமே சொந்தமானது .

ஏன் இன்று என்னிடம் பேச மறுக்கிறாய்
மறுபடி பேசினால் விலக
முடியாது என்பதற்காகவா?
அல்லது என்னிடம் நீ பேசாமல் இருந்தால்
உன்னை நான் மறந்து விடுவேன் என்றா .

அட பைத்திய கார நீ என்னிடம் பேசினாலும்
பேசாமல் போனாலும்
உன் நினைவுகள் நான் கல்லறைக்கு
போன பிறகும் என் மனதில் எதாவது
ஒரு ஓரத்தில் இருந்து
கொண்டு தான் இருக்குமடா.

உன் நினைவுகளை சுகமாக தாங்கி
நிற்கின்றது என் விழிகள் கண்ணீர் துளிகளில் .
உன் நினைவுகள் என் கண்ணீரில்
கலந்திருப்பதால் தானோ என்னமோ
கண்ணீர் துளிகள் கூட இனிப்பாக இருக்கிறது .

அழுகின்ற சுகத்தை கொடுத்த
உன் நினைவுகளையும் காதலை
நினைத்து கொண்டு உன்னவள்.

gayathri.R

Friday, July 22, 2011

விடை கொடுத்தாய் விடை பெறுகிறேன்


அனைத்தையும் மறக்கும் எனக்கு
உன்னை மறக்கும் வழி தெரியாமல் போனது
அனைத்திற்கும் விட்டு கொடுத்து போகும் எனக்கு
உன்னை விட்டு போக மனம் வர வில்லை .

சுற்றமும் வேண்டாம் , நட்பும் வேண்டாம் ,
அன்பும் வேண்டாம், காதலும் வேண்டாம் ,

நீ என் மீது காட்டிய அன்பில் மயங்கி
உன் மீது நான் கொண்ட காதலால்
இங்கு தினம் தினம் ஒவ்வொரு நொடியும்
இறந்து கொண்டிருக்கிறேன் .

கர்ப்பிணிகளுக்கு கூட இறந்த பிறகு தான்
சுமைதாங்கிகளை கட்டுவார்களாம் .
ஆனால் நானோ உயிருடன் இருக்கும் போதே
உன்னை என் மனதில் சுமந்து கொண்டிருக்கிறேன்
நானும் ஒரு சுமை தாங்கி தான் .

நீயே என்னை விட்டு போன பிறகு
நான் உன் மீது வைத்துள்ள என் காதலை
நிறம் மாறிய என் கண்களை பார்த்து
நீயே தெரிந்து கொள் .

மனம் கொண்ட சுமையை கண்ணீரால் கரைத்தாலும் .
நீ சொன்ன வார்த்தையை நினைக்கும் போதெல்லாம்
மீண்டும் தண்ணிரில் ஊறிய மரக்கதவை
கனக்கிறது என் இதயம் .

Saturday, February 12, 2011

போங்கு பையன் கிறுக்கு பொண்ணு
"டேய் போங்கு பையா"
" என்னடி கிறுக்கு புள்ள "
" நேத்து பஸ்ல ஒரு பொண்ண பாத்தேன்னு சொன்னியே ? "
" ஆமா அதுக்கு என்னடி இப்ப ?"
" அழக இருந்தலா.."
" ம் "
"ரொம்ப அழக இருந்தலா .."
".................."
" டேய் போங்கு உன்னைய தான் டா கேக்குறேன் "
"என்னைய விட ரொம்ப அழக இருந்தலா ..."
" ஏன் டி இப்படி அகராதி பண்ற..."
" அகராதின என்னடா போங்கு ..."
" சண்டை டீ "
" சண்டைனா என்னடா ......"
" எனக்கு தெரியாது என்னைய விட்டுடுடி "
" ம் ம் முடியாது நீ சொல்லி தான் ஆகனும் "
இனி உன் இதழ்களை பதில் சொல்லி அடைக்க முடியாது என
ஒரு நூறு முத்தத்தால் பூட்டி விட்டாயட.
"டேய் போங்கு பையா இத வந்த ஒடனே செஞ்சி இருந்தா
இன்னும் ரெண்டு மூணு நிமிஷம் கூடி இருக்கும்ல ..."
"அடி திருட்டு புள்ள உன்னைய ......................"
" ஹி ஹி போடா கிறுக்கு மச்சான் ....."