
அனைத்தையும் மறக்கும் எனக்கு
உன்னை மறக்கும் வழி தெரியாமல் போனது
அனைத்திற்கும் விட்டு கொடுத்து போகும் எனக்கு
உன்னை விட்டு போக மனம் வர வில்லை .
சுற்றமும் வேண்டாம் , நட்பும் வேண்டாம் ,
அன்பும் வேண்டாம், காதலும் வேண்டாம் ,
நீ என் மீது காட்டிய அன்பில் மயங்கி
உன் மீது நான் கொண்ட காதலால்
இங்கு தினம் தினம் ஒவ்வொரு நொடியும்
இறந்து கொண்டிருக்கிறேன் .
கர்ப்பிணிகளுக்கு கூட இறந்த பிறகு தான்
சுமைதாங்கிகளை கட்டுவார்களாம் .
ஆனால் நானோ உயிருடன் இருக்கும் போதே
உன்னை என் மனதில் சுமந்து கொண்டிருக்கிறேன்
நானும் ஒரு சுமை தாங்கி தான் .
நீயே என்னை விட்டு போன பிறகு
நான் உன் மீது வைத்துள்ள என் காதலை
நிறம் மாறிய என் கண்களை பார்த்து
நீயே தெரிந்து கொள் .
மனம் கொண்ட சுமையை கண்ணீரால் கரைத்தாலும் .
நீ சொன்ன வார்த்தையை நினைக்கும் போதெல்லாம்
மீண்டும் தண்ணிரில் ஊறிய மரக்கதவை
கனக்கிறது என் இதயம் .
11 comments:
என்னதான் ஆச்சி :(
enna peelingsu overra iruku sari illa
இது உண்மையா?? இல்ல கற்பனைக்காகவா?? :(
don't feelings...
இதுவும் கடந்துபோகும்...
ஆழ்மனதின் எண்ணங்கள் கவிதையாய்..
தலைப்பு அழகு
Nice one..nallarukku.
ஒவ்வொரு வரியும் வலிக்கிறது :-(
//அனைத்தையும் மறக்கும் எனக்கு
உன்னை மறக்கும் வழி தெரியாமல் போனது//
உண்மை நேசங்களை மறப்பது கடினம்தான்.
சோகம் கூட சுவாரசியமான வரிகளாய்..
Post a Comment