Tuesday, May 26, 2009

உன்னிடமிருந்து விடை பெறுகிறேன்


விழி மூடி யோசிக்கையில் சித்திர‌மாய் நிற்கிறாய்
விழி திறந்து பார்க்கையில் நித்திறையை
போல் காற்றில் கரைகிறாய்.

நீ என்னை விட்டு விலகின பிறகு
என் நிழலும் எனக்கு அன்னியமாய் போனது.
நீ என்னை வெறுக்க உன் வீட்டு
பூனை குட்டியையும் அன்னியமாக்கதே.
உன் முழு அன்பு அதற்காவது கிடைக்கட்டும்

உன் மெளனத்தால் ஒவ்வொரு நாளும்
தீயில் விழுந்த புழுவாய் துடித்து கொண்டு இருக்கிறேன்.
உன்னை விட்டு பிரியும் நாள் நெருங்கி
கொண்டு இருப்பதை நினைக்கும் போதெலலாம்

வாழ்வின் கடைசி நொடியில் என் சந்தோசங்களை
நிறைவேற்றி கொள்வதை போல
உன்னிடம் என் ஆசைகளை சொல்ல நினைக்கிறேன்


என் மன‌ம் தாங்கிய சுமைகளை கண்ணீரால்
கரைத்து கொண்டு இருக்கிறேன்.
இதயமே இல்லாத மிருகமாய்
உன்னிடமிருந்து என் நினைவுகளையும் ,
உன்னிடமிருந்து உன் நினைவுகளையும்
எடுத்து கொண்டு விடை பெறுகிறேன்
விடை கொடு

Sunday, May 24, 2009

என்னை பற்றி உங்களுக்கு



1.உங்களுக்கு ஏன் இந்தப் பெயர் வந்தது? உங்களுக்கு உங்க பெயர் பிடிக்குமா ?


என் ஜாதகப்படி முதல் எழுத்து “கா”வில் தொடங்குவதால் காயத்திரி என்ற இந்த பெயர் வந்தது.
ரொம்ப பிடிக்கும்.... எங்க அம்மா எனக்கு இன்னொரு பெயர் வச்சி இருக்காங்க அனிதான்னு அத பயன்படுத்திக் கொள்வேன்.


2.கடைசியாக அழுதது எப்பொழுது?
20/05/09 புதன்கிழமை மதியம் 1.45 க்கு அழுதேன்.:(((((


3.உங்களோட கையெழுத்து உங்களுக்கு பிடிக்குமா?
ம்ம்ம்ம்ம்ம்ம்ம் ரொம்ப பிடிக்கும்... அதான் 100 பக்கம் அசைன்மென்டுக்கு 125 பக்கம் எழுதி கொண்டுபோய் கொடுத்தேன் (ஆன நான் எழுதுனது அவங்களுக்கு புரியுமான்னு தெரியல?:)))))))))))


4.பிடித்த மதிய உணவு என்ன?
சாம்பார் சாத‌ம் , அப்ப‌ள‌ம் ( பிந்து அப்ப‌ள‌ம் இல்ல‌ எந்த‌ அப்ப‌ள‌மா இருந்தாலும் ஒகே)


5.நீங்கள் வேறு யாருடனாவது உங்களோட நட்பை உடனே வச்சுக்குவீங்களா?
நம்‌ப‌ கூட‌ க‌டைசி வ‌ரைக்கும் வ‌ர‌ப் போவ‌து ந‌ட்பு தான் . அத‌ வ‌ச்சிக‌ யோசிக்க‌லாமா?


6.கடலில் குளிக்க பிடிக்குமா....அருவியில் குளிக்க பிடிக்குமா?
க‌ட‌லில் அலையை இர‌சிக்க‌ ம‌ட்டும் தான் பிடிக்கும் . அருவியில் குளிச்சா மூச்சி முட்டும் .அத‌னால‌ என‌க்கு ஆத்துல‌ குளிக்க‌ தான் பிடிக்கும் . (அதாவ‌து எங்க‌ ஆத்துல‌ குளிக்கிறதை சொன்னேன் )


7.முதலில் ஒருவரைப் பார்க்கும் போது எதை கவனிப்பீர்கள்?
க‌ண்க‌ள் , முடி , உடை ,


8.உங்க கிட்ட உங்களுக்கு பிடிச்ச விஷயம் என்ன? பிடிக்காத விஷயம் என்ன ?
என் கை விர‌ல்க‌ளில் ந‌க‌ம் வ‌ள‌ர்ப்ப‌து மிக‌வும் பிடிக்கும் .
என்னை பிடித்த‌வ‌ர்க‌ளை மிக‌வும் கோவ‌ப்ப‌டுத்துவ‌து பிடிக்காது( இருந்தாலும் மாற்றிக்கொள்ள முடிய‌வில்லை)


9.உங்க சரி பாதி கிட்ட உங்களுக்கு பிடித்த பிடிக்காத விசயம் எது?
என்னோட‌ ச‌ரி பாதி என் கிட்ட‌ முழுசா வ‌ந்த‌துக்கு அப்ப‌ற‌ம் இத‌ப் ப‌த்தி சொல்றேன்... ஒக்கே


10.யார் பக்கத்துல இல்லாம இருக்குறதுக்கு வருந்துகிறீர்கள் ?
என் ஃப்ர‌ண்ஸ்


11.இதை எழுதும் போது என்ன வர்ண ஆடை அணிந்து உள்ளீர்கள்
மெரூன் க‌ல‌ர் சுடி


12.என்ன பார்த்து//கேட்டுக் கொண்டு இருக்குறீங்க ?
டைப் பண்ணறதால எங்க‌ சார் வராரான்னு பாத்துக்கிட்டு இருகேன்.
அய‌ன் ப‌ட‌த்துல‌ நெஞ்சே... நெஞ்சே...நீ எங்கே நானும் அங்கே( அந்த‌ பாட‌ல் கேட்டுகிட்டு இருக்கேன்)


13.வர்ணப் பேனாக்களாக உங்களை மாற்றினால் என்ன வர்ணமாக உங்களுக்கு ஆசை?
மெரூன் க‌ல‌ர் என‌க்கு ரொம்ப‌ பிடிச்ச நிற‌ம். அப்ப‌ற‌ம் எப்ப‌வாவது க‌ருப்பு


14. பிடித்த மணம் ?
ம‌ண் வாச‌ம் இப்ப‌வும் அத‌ அனுப‌விச்சுட்டு தான் இருக்கேன்..... அட‌ இங்க‌ ம‌ழை வ‌ருதுன்னு சொல்றேன் அவ்வ‌ள‌வு தான் .
அப்ப‌ற‌ம் மாலை நேர‌ம் ம‌ல்லிகை ம‌ல‌ரும் வாச‌ம்.புது புத்த‌க வாச‌ம்


15.நீங்க அழைக்கப் போகும் பதிவரிடம் உங்களுக்கு பிடித்த விஷயம். அவரை அழைக்கக் காரணம் என்ன ?
ச‌க்தி காத‌ல் க‌விதை ம‌ட்டும் இல்லாமல் ம‌த்த‌ எல்லா க‌விதையும் அழ‌கா எழுதுவாங்க‌.....வியா க‌விதையில் இருந்து இப்ப‌ புதுசா க‌தை எழுதுறாங்க‌... கொஞ்சம் நிஜ‌ம்... கொஞ்சம் ...க‌ற்ப‌னை க‌ல‌ந்து.


16.உங்களுக்கு இதை அனுப்பிய பதிவரின் பதிவில் உங்களுக்குப்பிடித்த பதிவு ?
என்னை இந்த‌ ப‌திவிற்கு அழைத்த‌வர் அ.மு.செய்யது .அவ‌ருடைய‌ ப‌திவில் என‌க்கு பிடித்த‌து அந்த‌ முத‌ல் ச‌ந்திப்பு க‌தை என‌க்கு ரொம்ப‌ பிடித்து இருந்தது....


17. பிடித்த விளையாட்டு?
பிடித்த‌ விளையாட்டுன்னு எதுவும் சொல்ல‌ முடியாது. ஆன‌ பாப்பாங்க‌ கூட‌ விளையாடற‌து பிடிக்கும்.


18.கண்ணாடி அணிபவரா?
இல்லை


19.எப்படிப் பட்ட திரைப் படம் பிடிக்கும்?
ந‌ல்ல காத‌ல் திரைப் ப‌ட‌ங்க‌ள், காம‌டி திரைப்ப‌ட‌ங்க‌ள். ஜெய‌ம் , கோவில், ப‌ருத்திவீர‌ன், நெஞ்சிருக்கும்வ‌ரை.


20.கடைசியாகப் பார்த்த படம்?
வெண்ணிலா க‌ப‌டி குழு அதுல‌ கூட‌ க‌டைசி சீன் பாக்கவில்லை...


21.பிடித்த பருவ காலம் எது?
இலையுதிர்க் கால‌ம் முடிந்த‌ பிற‌கு . மீண்டும் புதிதாக‌ இலை வ‌ரும் கால‌ம் . அத‌ எப்ப‌டி சொல்ற‌துனு தெரிய‌லை (நீங்க எல்லாம் ரொம்ப‌ அறிவாளிங்க‌ நீங்க‌ளே புரிந்துகொள்வீர்கள் என்று என‌க்கு தெரியும்:)))))))))}]

22.என்ன புத்தகம் படித்துக் கொண்டு இருக்கீங்க?
இப்போதைக்கு ப‌ரிட்சைக்காக‌ என்னோட‌ புத்த‌க‌த்தை ம‌ட்டும் தான் ப‌டிச்சிட்டு இருக்கேன்.


23.உங்கள் டெஸ்க்டொப்-ல் இருக்கும் படத்தை எத்தனை நாளுக்கு ஒரு நாள் மாற்றுவீர்கள்?
என‌க்கு எப்போதெல்லாம் தோனுகிறதோ அப்போதெல்லாம் மாற்றுவேன்.


24.பிடித்த சத்தம் ? பிடிக்காத சத்தம்?
பிடித்த‌ சத்த‌ம் : ஜெய‌ம் ப‌ட‌த்துல‌ விசில் ச‌த்த‌ம் , வோட‌போன் விள‌ம்ப‌ர‌த்துல‌ வ‌ர‌ பொம்மைக‌ள் பேசும் ச‌த்த‌ம் ரொம்ப‌ பிடிக்கும்,
பிடிக்காத‌ ச‌த்த‌ம் : நான் தூங்க‌ன‌ பிற‌கும் வ‌ர‌ டிவி ச‌த்த‌ம்


25.வீட்டை விட்டு நீங்கள் சென்ற அதிக பட்ச தொலைவு?
5 நாள் அம்மாவையும் வீட்டையும் விட்டுட்டு ஊட்டி , கொடைக்கான‌ல் போன‌து


26.உங்களுக்கு ஏதாவது தனித் திறமை இருக்கிறதா?
த‌னித்திற‌மைன்னு ஒன்றும் இல்லை ஆனால் நான் எழுதுற‌ க‌விதைக‌ள் எப்ப‌டி வ‌ந்த‌து எங்க‌ இருந்து வ‌ந்த‌து என்று தெரியலை (நீங்க‌ ஒத்துக்கிட்டா வேணும்னா அத‌ ஒரு திற‌மைனு வ‌ச்சிக்கலாம் என்ன‌ சொல்றீங்க)


27.உங்களால் ஏற்றுக் கொள்ள முடியாத ஒரு விஷயம்?
அப்படி எல்லாம் எதுவும் இல்லை .எதா இருந்தாலும் அதன் போக்கிலேயே போய் ப‌ழ‌கிட்டேன்.


28.உங்களுக்கு உள்ளே இருக்கும் சாத்தான்?
எல்லார் மேலே‌யும் அதிக‌மா அன்பா இருப்பது


29.உங்களுக்கு பிடித்த சுற்றுலா தலம்?
ஊட்டி , கொடைகான‌ல், வேலுர் கோல்ட் டெம்புல்


30.எப்படி இருக்கணும்னு ஆசை?
இப்ப‌ என‌க்கு கிட‌ச்சி இருக்க‌ ஃப்ரண்ஸ் விட்டு போகாமல் எப்ப‌வும் அவ‌ங்க‌ கூட‌வே இருக்க‌னும் என்று ஆசை ( ஆசை ப‌ட்டதெல்லாம் ந‌ட‌க்குமா என்ன‌?)


31.மனைவி/ கணவர் இல்லாம செய்ய விரும்பும் ஒரே காரியம் ?
அதெல்லாம் அவ‌ங்க‌ வ‌ந்த‌துக்கு அப்ப‌ற‌ம் பாக்க‌லாம!!!!!!


32)வாழ்வு பற்றி ஒரு வரி சொல்லுங்க?
நான் ரொம்ப‌ சின்ன‌ பொண்ணு நான் என்ன‌ சொல்ற‌து இதுக்கு......
ம்ம்ம்ம்ம்ம் க‌ட‌வுள் கொடுத்த‌ ஒரு லைப் அத‌ ந‌ல்லா ச‌ந்தோஷமா வாழனும் அதான்.... .

Monday, May 18, 2009

நீயே வேண்டும் என்று வரம் கேட்பேன்



இறைவனிடம் போராடி மறுஜென்மம்
எடுத்து என்னை பெற்றெடுத்தாய்......
உன் இரத்தத்தையே எனக்கு உணவாக்கினாய்....

நான் உன் மார்பினில் எட்டி உதைக்கும் போதும்
பிஞ்சி பாதங்கள் என்று முத்தம் இட்டாய்.....
நான் நடை பழகும் போது கால் தடுமாறி
நான் கீழே விழ உன் மனம் பதறி...

என் கை பிடித்து நடை பழக கற்று கொடுத்தாய்
உன் ஆசைகளை துறந்து
என் சந்தோசங்களை நிறைவேற்றினாய்....
கண்கள் மோதலால் வந்த காதலால்
உனை மறந்து எண்ணவணை மணந்தேன்.....

உணை மறந்ததால் தான் என்னவோ
இன்று நூல் அறுந்த பட்டம் போல்
திசை தெறியாமல் தடுமாறி கொண்டு இருக்கிறேன்.....

இன்றும் என் கை பிடித்து
வாழ்கை பயணம் செய்ய
கற்றுக் கொடுத்து கொண்டு இருக்கிறாய்...

இந்த ஜென்மத்தில் மட்டுமல்ல
இனி என் எல்லா ஜென்மத்திலும்
நீயே என் தாயாக வேண்டும் என்று
இறைவனிடம் வரம் கேட்பேன்!!!!!!!

Friday, May 15, 2009

????


இரவெல்லாம் நான் கண் விழித்து படிக்க
உன் நினைவுகள் என்னுள் விளக்காய் எரிகின்றன .
இந்த தீ நீர் அணைத்தால் அணையாது
நீ அணைத்தால் அணைந்துவிடும்
கல்வி பாடம் எப்படி என்னுள்
காதல் பாடமாய் மாறியது?

Friday, May 8, 2009

நன்றி விகடன்


யூத்விகடனில் ஜுட் பகுதியில் என்னோட கவிதை இரண்டாவது முறையாக காத்திருந்த இதயம் வந்து இருக்கு .
http://youthful.vikatan.com/youth/gayathripoem05052009.asp
எனக்கு மிக மிக சந்தோஷமா இருக்கு.
என்னுடைய கவிதைகளுக்கு பின்னுட்டம் இட்டு என்னை ஊக்க படுத்திய என் நண்பர்களுக்கு நண்றியை தெரிவித்துகொள்கிறேன்
விகடனுக்கும் என் நண்றிகளை தெரிவித்துகொள்கிறேன்
என் கவிதைகூட வேற யாருடைய கவிதையோ ரெண்டு வந்து இருந்துச்சி அவங்க கவிதையும் நல்ல இருந்துச்சி அவங்க பெயர் இப்ப நியாபகம் இல்ல .இருந்தாலும் அவங்களுக்கும் நம்ப வாழ்த்துக்களை தெரிவிச்சுக்கலாம் என்ன் நான் சொல்றது சரிதானே. பெயர முக்கியம் கவிதை தானே முக்கியம்

Tuesday, May 5, 2009

சொல்லாத காதலும் காதல் தானே


உன்னோடு நான் கொண்ட
காதல் உன்னிடம் சொல்ல
முடியாமல் தவிக்கிறேன்.
உன் பெயரை சொல்லி யார் அழைத்தாலும்
உடனே திரும்பி பார்க்கிறேன்.
சொல்லாத காதலும் காதல் தானே
உன்னுடன் நான் பேச நினைத்து
உன்னை அழைக்கும் போது சம்மந்தமே
இல்லாமல் யாரே ஒரு பெண்
the person your call has not replayed plese try again latter thank u
என்று சொல்லும் போதும் என்னையும்
அறியாமல் கோவம் வருகிறது
சொல்லாத காதலும் காதல் தானே
உனக்கு பிடித்த உடையில் கண்களில்
காதலுடன் வழி மீது விழி வைத்து
காத்து இருக்கிறேன்இதையும் மீறி
என் சொல்லாத காதலை எப்படியடா
சொல்லா முடியும் என்னால்

Monday, May 4, 2009

இதற்கு என்ன பெயர்


என்றும் இல்லாத அதிசயமாய் இன்று
உன் நினைவுகள் என்னை எழுப்ப
இன்று என்னுல் எதோ ஒரு மாட்றம்
காலையில் கணினி திறையில்
உன் புகை படத்தை தேடினேன்.
உன் முகம் பார்த்ததில் 1000 பட்டாம்பூச்சிகள்
பறந்தன என் நெஞ்சில்
நடை பாதை கடைகளில்
உன் பெயர் படிக்க என்னையும்
அறியாமல் ஒரு சிரு
புன்னகையை சிந்திவிட்டு போகிறேன்
உன் குரல் கேட்க்கும் ஆசையில்
10 எண்களுக்குள்ளே 10 எண்களை கண்டுபிடித்து
உன்னை அழைக்க அது திசைமாறி போக.
என் தோழிகளிடமெல்லாம் உன்னை
பற்றி மஹாபாரதம் பாடா.
அழகுக்கு மேலும் அழகு செய்து கொண்டு
உன்னிடம் எப்படி பேச வேண்டும்
என்று கண்ணாடி முன் நின்று 10 முறை
ஒத்திகை பார்க்க . இரவு உணவு உண்ணும்
வேளையில் உன் நினைவுகள் என்
மன‌தினில் நிறைந்துஇருக்க அங்கு
உணவுக்கும் வேலை கொடுக்காமல்.
இரவின் கை பிடித்து அதனுடன் கதை
பேசிகொண்டு இருக்கிறேன்.
என்றும் இல்லாத அதிசயமாய் இன்று
என்னுள் வந்த இந்த மாற்றத்திற்கு
என்ன பெயர் தெரிந்தால் நீயாவது
சொல்லாடா

Friday, May 1, 2009

யூத் ஃபுல் ஜூட் பிரிவில் என்னேடா கவிதை


வலை உலகில் முதன் முறையாக என்னேடா இதழ் தொட்ட பட்டாம்பூச்சி இந்த கவிதை யூத் ஃபுல் விகடனில் வந்து இருக்கு என்ன சொல்றதுனு தெரியல ரொமப ரொம்ப ரொம்ப சந்தோஷமா இருக்கு இந்த டைம்லா நான் யூத் ஃபுல் விகடனுக்கு என் நன்றிகளை தொறிவித்து கொள்கிறேன்.

அது மட்டும் இல்லாமா நீ எழுதுற கவிதைகளை யூத் ஃபுல் விகடனுக்கு அனுபுன்னு விகடன் ஐடி கொடுத்த சக்திக்கும். என்னோடா கவிதை விகடனில் பாத்து என்க்கு சொன்ன‌ த‌மிழர‌சி அம்மாவுக்கும் என்னோட‌ ந‌ண்றிக‌ளை தெறிவித்து கொள்கிறேன்.


நான் எழுதுற கவிதைகளை படித்து எனக்கு ஊக்கம் அளித்த என் வலை உலக நண்பர்களுக்கும் தோழிகளுக்கும் நண்றிகளை தெறிவித்து கொள்கிறேன்.

இதுல எனக்கு இனொரு சந்தோஷமும் இருக்கு.

புதியவன்.... (மெல்லிய பூக்களிலெல்லாம்)
இங்கே..(மெல்லிய பூக்களிலெல்லாம)

அபுஅஃப்ஸர் ........ ( (நிர்வாண இரவுகள்)
(நிர்வாண இரவுகள்)

இவங்க கவிதைகள் கூட என் இதழ் தொட்ட பட்டாம்பூச்சி வந்தது ரொம்பா சந்தோஷமா இறுக்கு


என்னுடைய இதழ் தொட்ட பட்டாம்பூச்சி
இங்கே.. (இதழ் தொட்ட பட்டாம்பூச்சி)

புதியவன் மட்றும் அபுஅஃப்ஸர்க்கு என் வாழ்த்துக்களை தெறிவித்து
கொள்கிறேன்

மறுபடியும் ஒரு முறை யூத் ஃபுல் விகடனுக்கு என் நண்றிகளை தெறிவித்து கொள்கிறேன்