Saturday, April 11, 2009

கல்லறை



என்னவனே உன் முகம் எனக்கு
கனவில் மட்டுமே காட்டுவாய்
என்றால் சொல்
(நான் இப்பவே விழி மூடி
கல்லறைக்கு போகவும் தயார் )
நான் எப்பவும் விழி மூடி இருக்கவும் தயார்

கல்லறைமீது பூத்த பூக்கள்
கடவுளின் சன்னதி சேர
முடியாத சோகம் போல் தான்
.எனது ஆசைகளும் கல்லறை
பூக்களை போல உன்னை சேர
முடியாமல் என்னுளே
புதைந்து கொண்டு இருக்கிறது



என்னவனே நீ என்னை விட்டு
சென்று கொண்டு இருப்பதயை
பார்த்து கொண்டு நான் உயிருடன்
அணு அணுவாக சாவதை விட
நிம்மதியாக கல்லறையில்
உறங்குவதே மேல்



பசிக்கு அழும் குழ்ந்தையை போல்
தான். என் சோகங்களை உன்னிடம்
சொல்லவும் முடியாமல் என்னுளே
வைத்து கொள்ளவும் முடியாமல்
ஒரு குழ்ந்தையை போல் தினம்
தினம் அழுகிறேன்
தனிமையில்



அவனுள்ளே இருக்கும் காதலியாய் அவனும்
என்னை புரிந்து கொள்ள வில்லை
உண்ணுலே இருக்கும் தோழியாய்
நீயும் என்ன புரிந்து கொள்ள வில்லை
என்னை புரிந்து வைத்துள்ள ஒரே உயிர்
உயிரே இல்லாத அந்த கல்லறை மட்டுமே
எனக்காவே காத்து கொண்டு
இருக்கிறது .



எந்தன் திசை அறிய உனக்கு
என்றும் நான் திசை மாறும்
பறவை தான் .என் திசையை
நீ அறியும் வரை