Wednesday, October 21, 2009

செல்லுடன் சேட்டை

நான் உன்னோடு சண்டை இட்டு
பேசாமல் இருக்கும் போது
என் செல்லில் Received மெசேஜ்
பார்க்கும் போதெல்லாம்
நீ தான் என்று ஒவ்வொரு
முறையும் ஏமாறுகிறேன்

நீ என்றோ அனுப்பிய குறுஞ்செய்தியை
நான் தினமும் நூறு முறை
புரியாமல் படிக்கிறேன் அது
என்ன மந்திர சொல் ஐ லவ் யூ

உனக்காக குறுஞ்செய்திகளை அனுப்பி
அனுப்பி தேய்ந்து என் செல்லின்
கீ போர்ட் மட்டும் அல்ல
என் விரல்களின் ரேகைகளும்
தான்

Thursday, October 1, 2009

என்னை மறந்துவிடு


உயிரோடு நான் இருக்க
உணர்வோடு நீ கலந்தாய் .
தென்றலென என்னை தொட்டு சென்று.
சுறாவளியாய் என்னை விழ்த்தி விட்டாய் .
மறக்க வேண்டும் என்று
முடிவு செய்த பிறகு.
என்னை மறக்க வேண்டும் என்று
நினைத்து கொண்டே இருக்காதே .
என்னை மறக்க நினைக்கும் போதெல்லாம்
நீ என்னை தான் நினைக்கிறாய்
என்னபதை மறந்துவிடாதே .
நீ என்னை மறந்து விட வேண்டும்
என்பதையே மறந்து விடு .
அப்பொழுது தான் நீ என்
நினைவுகளையாவது முழுவதுமாக மறப்பாய் .
தன் நிழலை தானே தாங்கும்
தஞ்சை கோபுரத்தை போல
உனக்கான என் காதலையும் ,
எனக்கான உன் காதலையும்
நானே சுமந்து கொள்கிறேன்
கடைசி வரை

Wednesday, September 23, 2009

இனிய பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள்




எனக்கு இந்த வலை உலகில் கிடைத்த என் அம்மு செல்லம்,அப்பு செல்லம் , புஜ்ஜிசெல்லம்
தமிழரசி அம்மாவுக்கு இனிய பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள்

Friday, September 18, 2009

தேவதைக்கே வரம் கொடுக்க வந்த தேவதை




( யாரும் ஹெட்லைன் பாத்து டென்ஷன் ஆக கூடாது ஓகே )

எனக்கு இந்த தேவதைய அனுப்புவாங்க இயற்கை ராஜி இத‌ய‌ப்பூக்க‌ள்

தேவதை என்றால் கேட்ட வரதை கொடுக்க வேண்டும்

முதல் வரம் : இந்த 10 வரம் இல்லாமல் எனக்கு இன்னும் 10 வரம் எக்ஸ்ட்ரா வேண்டும் (இது எப்படி )

இரண்டாம் வரம் : நான் காதலித்த அந்த முதல் மூன்று மாதம் வேண்டும்

மூன்றாம் வரம் : எந்த வகைளும் என்னால் யார் மனதும் புண் பட கூடாது

நான்காம் வரம் : இழத்தில் இருக்கும் என் சகோதர சகோதரிகளுக்கு விரைவில் விடுதலை கிடைக்க வேண்டும்

ஐந்தாம் வரம் : என் நண்பனுக்கு இந்த தேவதையை போலவே அழகான அன்பான மனைவி கிடைக்க வேண்டும்

ஆறாம் வரம் : இனி வரும் எல்லா ஜென்மங்களும் என் அம்மாவுக்கே நான் மகளாக பிறக்க வேண்டும்

எழாம் வரம் : என்னவனிடம் நான் தொலைபேசில் பேசி கொண்டு இருக்கும் போது சார்ஜ் குறைய கூடாது, நேரம் போகக்கூடாது , பைசாவும் கட் ஆக கூடாது ( ஹ ஹ ஹ ஹ )

எட்டாம் வரம் : எனது பள்ளி படிப்பு ஐ.டி.ஐ இரண்டாம் ஆண்டு முழுவதும் திரும்ம கிடைக்க வேண்டும்

ஒன்பதாம் வரம் : உலகத்தில் சாதி, மதம் ஒழிக்க பட வேண்டும்

பத்தாம் வரம் : இனி வரும் எல்லா ஜென்மங்களிலும் என்னவனே எனக்கு இனியவனாய் அமைய வேண்டும்

(இன்னும் எக்ஸ்ட்ரா 10 வரம் இருக்குல ம்ம்ம்ம்ம்ம்ம்ம் )

என்னவன் என்னிடம் கேட்ட10 வரங்களும் நிறைவேற வாழ்த்துக்கள் ( அவங்களுக்கு நான் தானே தேவதை ஹ ஹ ஹ )

என் கிட்ட வந்த தேவதைய நான் யார் யாருக்கு அனுப்ப போறேன்

ஜமால் அண்ணன்
நிஜமா நல்லவர் அண்ணன்
abu அண்ணன்
சந்ரு
சத்ரியன்
viyaa

Tuesday, September 15, 2009

நினைத்தாலே இனிக்கும்


24-08-08 அன்று தொடங்கிய நம் நட்பு
ஹாய் good morning have a nice day என்று
காலை ஒரு மெயிலும் good afternoon என்று
மதிய வேளையில் ஒரு மெயிலும்
gd nt with sweet dreams என்று இரவு மெயில்

என்று அப்படியேஒரு சில நாள் மட்டும்
போய்கொண்டு இருந்த நம் நட்பு
ஹே என்னப்பா... சாரி காலைல
மெயில் பண்ண முடியல

என்ன பண்றீங்க?சாப்டீங்களா?
உடம்பு எப்படி இருக்கு?
என்று கேட்டு கொண்டு இன்னும்
கொஞ்சம் நெருக்கமாய் ஹே என்னடி
இன்னிக்கு gd mornig கூட

அனுப்பல‌அவளவு பிஸியா?
சீக்கிரம் gd morning சொல்லு என‌
நீ சொல்லலன்னா எனக்கு காலைல பொழுது
விடியாது என்று சொல்லிக்கொண்டு
என்னிடம் அளவிலாப் பாசம் காட்டினாய்


செல்லமா என்று எனக்கு ஒரு
செல்ல பெயர் வைத்தாய்
எனக்கு மெரும் கலர் ரோஜா
புடிக்கும் என்று என்னை மெருன் ரோஜா
தேசத்துக்கு ராணி ஆக்கினாய்


சிறு தயக்கத்துடன் சேட் செய்ய
தெர்யுமா என்று கேட்டாய்ஒரு
நாள் மெயில் பண்ணவில்லை என்றாலும்
மறுநாள் என்னாச்சி ஒடம்பு சரியாயிடிச்ச
இல்லன்னா டாக்டர் அனுப்பலாம்ன்னு
பாத்தேன் என்று பாசத்துடன் விசாரிக்கிராய்

சாரி டா சொல்லாம போனதுக்கு என்று
செல்லமாய் சொல்கிறேன்
உன்னை பற்றி நானும்
என்னை பற்றி நீயும் நன்கு
புரிந்து கொண்டோம்
காலை வணக்கத்தில் ஆரம்பித்து
இரவு வணக்கம்
சொல்லும் வரை கதை பேசினோம்

ஒரு வருடம் 17 நாட்கள்
கடந்து விட்டது இன்று சொல்கிறாய் நான்
வேறு இடம் வேலைக்கு போகிறேன் என்று
இது தான் நான் உன்னோடு பேசும்
கடைசி நாள் என்று

நீ என்னிடம் பேசிய அந்த நாட்கள் எல்லாம்
நினைத்தாலே இனிக்கும்
என்னை விட்டு பிரியும் என் நட்புக்கு
வாழ்த்துக்கள்