Thursday, December 31, 2009

நினைவெல்லாம் நீயே

தான் துணையோடு சேர்ந்து இருக்கும் அந்த ஒரு நொடிக்காக வேக வேகமாக இரவு 12 மணியை நெருங்கி கொண்டிருக்கிறது கடிகார முள். கடிகாரம் 12 மணியை நெருங்க நெருங்க வினிதாவிற்கு ஏதோ நெஞ்சில் ஒரு படபடப்பு . கடிகார முள்ளைவிட மிக வேகமாக துடித்து கொண்டிருந்தது அவள் இதயம் .தன் கைபேசியை எடுத்து கொண்டு இரவு 11 .30 .௦ ௦ மணிக்கு தன் வீட்டின் மொட்டை மாடிக்கு செல்கிறாள் .இன்னும் அரை மணி நேரம் தான் இருக்கிறது இன்று முடிந்து நாளை புதிய நாள் பிறக்க போகிறது .புதிய நாள் புதிய நாளுக்கு மட்டும் இல்லை அவளுக்கும் தான்..ஏனோ அன்று மட்டும் நிலா யாருக்காகவோ காத்து கொண்டு இருப்பது போலவும் , விண்மீன்கள் எல்லாம் கையில் பூவுடன் அவளை பார்த்து சிரிப்பதை போலவும் உணர்ந்தாள். லேசாக கண்களை மூடி தன் கடந்த காலத்திற்கு சென்றாள்.
ஹே வினிதா இந்த சில்லென்ற பனிகாற்றில் உன் கூட கை பிடிச்சிட்டு இந்த அலையை ரசிக்க எவ்ளவு சந்தோசமா இருக்கு தெரியுமாடி . என் காலம் முழுவதும் இதே மாதிரி உன் கை பிடிச்சிட்டு இங்கயே இருக்க சொன்னா கூட இருப்பேன்.என்னமா வந்ததுல இருந்து நானே பேசிட்டு இருக்கேன் நீ எதுவும் பேசாம இருக்க ஏன் ஒரு மாதிரி இருக்க என்னாச்சி ?.
நிஜமா காலம் பூரா என் கூடவே இருக்கணும்னு ஆசைய
ஏன்மா இப்படி சந்தேகத்தோட கேக்குர பின்ன என்னடா 5 .30௦ கு வர சொன்னா 6 .30 க்கு வந்து இருக்க . உன் மொபைல்க்கு கால் பண்ணாலும் சுவிட்ச் ஆப்னு வருது . என்ன சாமதானம் பண்றதுக்கு காலம் பூரா என் கூட இருகண்ணும் அப்படி இப்படின்னு கதவிடற அப்படி தானே என்று கண்களில் நீருடன் அவனை பார்க்கிறாள் .
ஹே என்னடி லூசு மாதிரி பேசுற என்னாச்சி உனக்கு இன்னைக்கு . நீ எப்பவும் இப்படி என் கூட பேசினது இல்லையே என்னே ப்ரோப்ளம்மா உனக்கு ?
எனக்கு பயமா இருக்கு சிம்பு நீயும் நானும் சேராம போயிடுவோமோனு.

என்னைக்கும் இல்லாம இன்னைக்கு மட்டும் என்ன பயம் உனக்கு .
இது வரைக்கும் எங்க வீட்ல கல்யாண பேச்சை எடுக்கல . ஆனா அம்மா இப்ப எனக்கு கல்யாணம் பண்ணியே ஆகனும்னு முடிவா இருக்காங்க .

சரி நீ என்ன முடிவு பண்ணி இருக்க
இதுலநான் முடிவு பண்ண என்ன இருக்கு . நம்ப காதல பத்தி நான் வீட்ல சொல்லிட்டேன் . எனக்கு வேற வழி தெரியல .
சரி வீட்ல என்ன சொன்னாங்க ?
என்ன கட்டி புடிச்சி முத்தம் கொடுத்து சரிடி செல்லம் நீ லவ் பண்ணுனு சொன்னாங்க .என்ன விளயாடுரியா நான் எவ்வளவு பெரிய விசயம் சொல்லிட்டு இருக்கேன் . நீ கொஞ்சம் கூட டென்ஷன் இல்லாம கூலா கேள்வி கேட்டுட்டு இருக்க .
வேற என்ன பண்ண சொல்ற உன்னைய எங்கயாச்சி கூப்பிட்டு ஓட சொல்றியா அதெல்லாம் என்னால முடியாது .
என்னைய கூப்பிட்டு ஓடணும்னு ஒன்னும் சொல்லல . உங்க அம்மா, அப்பாவ கூப்பிட்டு வந்து எங்க விட்ல பேசுன்னு தான் சொல்லுறேன் . வர வெள்ளிகிழமை நீ வந்து எங்க வீட்ல பேசுவேன்னு நான் அப்பா கிட்ட சொல்லி இருக்கேன் .நீ இல்லாம என்னால இருக்க முடியாது சிம்பு .

இந்த சினிமா டைலாக்க எல்லாம் என் கிட்ட பேசாத. ஏதோ பேசணும்னு தோனிச்சி பேசினேன் . லவ் பண்ணனும்னு தோனிச்சி லவ் பண்ணேன் அவ்வளவு தான் .; இப்ப கல்யாணம் பண்ணனும்னு தோனல சோ கல்யாணம் பண்ண முடியாது .உங்க வீட்ல பாக்குற பையன கல்யாணம் பண்ணிட்டு சந்தோசமா இரு ஓகே . நான் வரேன் சாரி நான்
போறேன்உன்னைய போய் லவ் பண்ணேன் பாரு அதுக்கு நான் இந்த கடல்ல குதிச்சி தற்கொலை பண்ணிக்கிறேன் போடா போ
ஏய் போடி …….
அண்ணா கடலை வாங்கிகோங்க அண்ணா , 5 ரூபாய் தான் வாங்கிகோங்க அண்ணா .
எனக்கு வேண்டாம்டா நானே இத்தன நாள் கடலை போட்டுட்டு இருந்த பிகர விட்டுட்டு போறேன், என் கிட்ட வந்து கடலை வாங்கிகோனு சொல்ற எனக்கு வேண்டாம் போடா .
அண்ணா அங்க பாருங்க உங்க கூட பேசிட்டு இருந்த அக்கா தண்ணிகுள்ள போறாங்க
ஏய் என்னடா சொல்ற ஆமா அண்ணா அங்க பாருங்க .
ஏய்வினிதா போவாதடி நில்லு சொன்னா கேளு போவாதடி நில்லு ,நான் சும்மா விளையாட்டுக்கு தான் சொன்னேன் வாடி ,
இல்ல நீ போய் சொல்லற .லூசு வா வந்து உக்காரு பேசலாம்
ம்ம்
லுசாடி நீ . உன்னைய பிடிக்காம தான் 2 வருசமா உன்ன லவ் பண்ணிட்டு , 24 மணி நேரமும் போன்ல பேசிட்டு , காலைல இருந்து நைட் வரைக்கும் என்னக்கு என்ன என்ன நடக்குதுன்னு . உன் கிட்ட சொல்லிட்டு , என் சந்தோசம் துக்கம் எல்லாம் உன்கிட்ட ஷேர் பண்ணிட்டு இருக்கேன் இதெல்லாம் யோசிக்கவே மாட்டியா நீ .
இப்ப இவ்வளவு பேசுற அப்ப மட்டும் ஏன் அப்படி பேசின
சரி வெள்ளிகிழமை வீட்டுக்கு வர சொன்னய்யே . சொல்லாம கொள்ளாம போய் ஒரு இன்ப அதிர்ச்சி கொடுக்கலாம்னு இருந்தேன்சரிடி வெள்ளிகிழமை முதல்ல நான் மட்டும் வந்து உங்க அம்மா அப்பா கிட்ட பேசுறேன். அவங்களுக்கு என்னைய புடிச்சி கல்யாணத்துக்கு சரின்னு சொல்லிட்டா நான் மறுபடியும் அம்மா அப்பா கூட வந்து பேசுறேன் சரியா.சரி நான் ஒன்னு சொல்றேன் கேளு . நான் ஏற்கனவே சொன்ன மாதிரி US போற விஷயமா பாஸ்போர்ட் எல்லாம் ரெடி ஆகிடிச்சி . ஜனவரி லாஸ்ட் போனாலும் போவேன் . அதுக்குள்ள உங்க வீட்ல சம்மதம் வாங்கிட்டு ரெண்டு பேரும் கல்யாணம் கட்டிட்டு அங்கேயே போய்டலாம் என்ன சரியா
.ம்ம் சரி போடா லூசு கொஞ்ச நேரத்துல என்ன எப்படி பயமுறுத்திட்ட.

காதல்ல இதெல்லாம் சகஜமடி என் செல்லமா ........
சரி சரி வீட்டுக்கு கிளம்பு நேரம் ஆகிடிச்சி அம்மா அப்பா கிட்ட சொல்லு நான் வெள்ளிகிழமை வரேன்னு . வா நானே உன்ன உங்க வீட்டு பக்கத்துல டிராப் பண்ணிட்டு போறேன் .
இல்ல வேண்டாம் நானே வீட்டுக்கு போறேன் .இப்பவே ட்ராபிக் அதிகமா இருக்கும் நீ இப்ப கிளம்பினா தான் வீட்டுக்கு சிக்கிரம் போக முடியும் .
சரிங்க மேடம் நான் கிளம்புறேன் நீங்க விட்டுக்கு போய்ட்டு கால்
பண்ணுங்க
என்னமா வினிதா அந்த தம்பிய பார்த்தியா பேசினியா என்ன சொன்னாரு.
வர வெள்ளிகிழமை வீட்டுக்கு வந்து உங்க கிட்ட பேசுறேன்னு சொல்லியிருக்காருங்க அப்பா.
அப்படியா, சரிமா நீ போய் சாப்ட்டு தூங்கு
சரிங்க அப்பா .
என்னங்க அவ தான் எதோ பேசுறானா நீங்களும் அவகூட சேர்ந்து பேசிட்டு இருக்கீங்க . அந்த பையன் யாரு என்ன, ஜாதி , மதம்னு தெரியாம வர சொல்லிடீங்க . அவனுக்கு எப்படி நம்ப பொண்ண கொடுக்கறது .

என்னமா சொல்றிங்க நீங்க என்ன கடைசி வரைக்கும் சந்தோசமா வச்சிட்டு இருக்க போறது அவன் என் மேல வச்சிட்டு இருக்க அன்பு காதல் மட்டும் தான் நீங்க சொல்ற ஜாதி, மதம் இல்லநீங்க மட்டும் சொல்றிங்களா அந்த பையன பத்தி எதுவும் தெரியாம எப்படி நம்ப பொண்ண கொடுக்குர்துன்னு . நீங்க பாக்குற பையன பத்தி எதுவுமே தெரியாம நான் மட்டும் எப்படி கல்யாணம் பண்ணிப்பேன்.
உனக்கு வாய் ரொம்ப அதிகமாய்டிச்சிடி . கூட கூட பேசிட்டு இருந்த அறைஞ்சிடுவேன் .
இப்ப ஏன் நீங்க ரெண்டு பேரும் சண்ட போடறிங்க அந்த தம்பி வர வரைக்கும் இனி இத பத்தி யாரும் பேசாதீங்க போய் தூங்குக போங்க.
வெள்ளிகிழமை காலை 7 மணிக்கு வினிதாவின் அலைபேசி சிணுங்குகிறது .ஹெலோ வினிதா நான் சிம்பு பேசுறேன் .
என்னடா இந்த டைம்க்கு கால் பண்ணி இருக்க என்ன?
நான் எவ்வளவு டென்ஷனா இருக்கேன் நீ இவ்வளவு கூல இருக்க .
நீ தானடா சொல்லி இருக்க எப்பவும் டென்சன இருக்க கூடாதுன்னு சொன்ன அதான் .
போடி லூசு உங்க அப்பா என்ன சொல்லுவரோன்னு பயமா இருக்குடி .
நீ பயபடாதடா என் செல்லாத யாருக்கு தான் புடிக்காது . நான் வெளில வந்து நிக்குறேன் நீ வா ஓகே .
ம்ம் வா
வா ராசா வா இதான் எங்க வசந்த மாளிகை நல்லா பாத்துக்க.
நாய் எதுவும் இல்லலடி உங்க வீட்ல .
இல்லப்பா தைரியமா வரலாம் வா .
அதானே பாத்தேன் அப்படியே இருந்து இருந்தாலும் உன் தொல்ல தாங்க முடியாம வீட்ட விட்டே வெளில ஓடி போய் இருக்கும் .
ஏய் சும்மா இருடா உள்ள வந்து அடக்க ஒடக்கமான பையனா இருக்கனும் என்ன சரியாசரிங்க மேடம் போங்க .
அப்பா , இவங்க தான் சிம்பு, சிலம்பரசன்
வாங்க தம்பி உக்காருங்க
நன்றிங்க சார்
வினிதா அம்மா கிட்ட சொல்லி காபி போட்டு எடுத்துட்டு வாமா.
ம்ம் சரிங்க அப்பா
,அம்மா......, அப்பா உங்கள கூப்டாரு நீங்க போங்க நான் காபி போட்டு எடுத்துட்டு வரேன்
ம்ம் சரிவா
சொல்லுங்க தம்பி உங்கள பத்தியும் உங்க குடும்பத்த பத்தியும்.
நான் அம்மா , அப்பா ஒரு தங்கச்சி மட்டும் தாங்க சார் , தங்கச்சிக்கு கல்யாணம் ஆகிடிச்சி.எனக்கு உங்க பொண்ண ரொம்ப புடிச்சி இருக்கு கல்யாணம் பண்ணிக்கணும்னு ஆசை பட்றேன்.நீங்க சரின்னு சொன்னிங்கனா நான் ஜனவரி 27 u .s போறேன் . அதுக்குள்ளே கல்யாணம் முடிச்சிட்டு உங்க பொன்னையும் என் கூட கூப்பிட்டு போயடுவேன் சார்
சரிபா என் பொண்ண புடிச்சி இருக்குனு சொல்ற காதலிக்கிறேன்னு சொல்லற நீ என் பொண்ண எந்த அளவுக்கு காதலிக்கிறேன்னு எனக்கு தெரியனும் .
சொல்லுங்க சார் நான் என்ன செஞ்சா நீங்க நம்புவீங்க ?
எத்தன வருஷம் என் பொண்ண தெரியும் உங்களுக்கு
2 வருஷமா தெரியும் சார்
சரிபா எனக்கு என் பொண்ணு சந்தோசம் தான் முக்கியம் அதுக்க நான் என்ன வேணும்னாலும் பண்ணுவேன் .உங்களோட காதல் உண்மையானதா இருந்தா நானே உங்கள சேத்து வைக்கிறேன் .நீங்க லவ் பண்ண இந்த ரெண்டு வருஷத்துல தினமும் பேசி இருப்பீங்க . வாரத்துக்கு 2 முறையாவது பாத்து இருப்பீங்க .இதனால சண்டை வந்தாலும் சாமதானாமா போய் இருப்பீங்க .உங்க காதல் உண்மையனதுனா நீ u .s போய்ட்டு வர வரைக்கும் என் பொண்ணு கூட பேச கூடாது , பாக்க கூடாது. நீ இங்க இருந்து போகும் போது எப்படி என் பொண்ண நெனச்சிட்டு போறியோ அதே மாதிரி வரும் போதும் அவளையே நெனச்சிட்டு வந்தா நானே என் பொண்ண உனக்கு கல்யாணம் பண்ணி வைக்கிறேன் .
சரிங்க சார் உங்க பொண்ணுகிட்ட 5 நிமிஷம் தனியா பேசணும் உங்க விருப்பத்தோட
ம்ம்ம்ம் சரிபா பேசிட்டு வா
.என்ன வினிதா உங்க அப்பா பேசினத எல்லாம் கேட்டல இப்ப என்ன பண்ண சொல்ற.
எனக்கு என் மேலும் உன் காதல் மேலும் நம்பிக்கை இருக்கு சிம்பு .
சரி வினிதா தினமும் பாத்து , தினமும் பேசுறது தான் காதல்னு நெனச்சிட்டு இருக்காரு உங்க அப்பா. அதையும் மீறி என் காதல் புனிதமானதுன்னு அவருக்கு புரிய வைக்கிறேன் நான் .இன்னிக்கு உன் கூட பேசறது தான் கடைசி வினிதா .இதோட நான் u .s போய்ட்டு வந்து தான உன் கூட பேசுவேன் . நீ இன்னைக்கே உன் மொபைல் நம்பர் மாத்திடு நானும் மாத்திடுவேன்நான் இந்தியாக்கு 2010 தான் வருவேன் .நான் வர அன்னிக்கே நம்ப நிச்சய தார்த்தம் வச்சிக்கலாம் ஓகே .
சரி சிம்பு என்னனே தெரியல மனசு ரொம்ப கஷ்டமா இருக்கு அழுக அழுகையா வருதுடா .
ஏய் செல்லமா அழாதடி 3 வருஷம் தானே . நீ என்ன பண்ணுவியாம் 2010 புது வருஷ அன்னைக்கு நைட் உன் பழைய சிம் கார்டு உன் செல்ல போட்டு வைப்பியாம் . அந்த வருஷம் நான் தான் உனக்கு முதல் கால் பண்ணி விஷ் பண்ணுவேனாம் அன்னிக்கே நான் சென்னை வந்து எங்க அம்மா அப்பாவ உங்க வீட்டுக்கு கூப்பிட்டு வந்து பேசி என் ராசாத்திய நான் எனக்கு சொந்தமாகிட்டு போய்டுவேன் என்ன ஓகே வா
ம்ம் சரிடா நீ எப்பவும் என்னைய மட்டும் தான் நெனச்சிட்டு இருக்கனும்

ம்ம் சரிடி செல்லம் உன்னைய நினைக்காம வேற யார நினைக்க போறேன்
வா போகலாம் .
சார் நீங்க சொன்னது எனக்கு சம்மதம் 2007 இந்த வருஷம் u .s போறேன் 2010 எப்ப வேணும்னாலும் சென்னை வருவேன் . அப்ப எங்க அம்மாவும் , அப்பவும் கூப்பிட்டு வந்து பொண்ணு கேக்குறேன் .இந்நிலை இருந்து உங்க பொண்ணு கூட நான் பேச மாட்டேன் சரிங்களா சார்
சரிபா ஆல் தே பெஸ்ட்
போய்ட்டு வரேன் வினிதா
ம்ம் பாய் சிம்பு
(இப்ப புரியுதா நம்ப வினிதா எதுக்காக போன் வச்சிட்டு மாடில இருக்காங்கனு சரி வாங்க இனி என்ன நடக்குதுன்னு பாக்கலாம் )

வினிதா , வினிதா என்னங்க வினிதாவ பாத்தீங்களா
இல்லையேமா வீட்ல தான் இருப்பா தேடி பாரு
இல்லைங்க நான் வீடு முழுக்க தேடிட்டேன் இல்ல .
சரி மாடில பாத்தியா இல்லையே .
சரி வா போய் பாக்கலாம் வினிதா ஏய் வினிதா எழுந்துறுடி ஏன் மாடில வந்து படுத்துட்டு இருக்க .
என்னமா விடிஞ்சிடிச்சா சிம்பு இன்னிக்கு நைட் கால் பண்ணுவான்னு காத்து இருந்தேன் அப்படியே தூங்கிட்டேன் .
சரி வா இன்னிக்கு கோவிலுக்கு எங்கயாச்சி போய்ட்டு வரலாம் .
இல்லமா இன்னைக்கு சிம்பு நம்ப வீட்டுக்கு வருவான் அதனால யாரும் எங்கும் போக வேண்டாம் .
என்னமா சொல்ற 3 வருஷம் உன் கூட பேசாதவன் இனி வந்து உன்ன கல்யாணம் கட்ட வா போறான்
நீங்க தானே அப்பா அவன் கிட்ட சொன்னீங்க பேச கூடாதுன்னு அதான் பேசாம இருக்கான் எனக்கு நம்பிக்கை இருக்கு அப்பா .
சரி வா கீழ போகலாம் .
வாங்க சார் வாங்க, இங்க வினிதா யாரு?
என் பொண்ணு இவங்க தான்
வாமா வந்து பக்கத்துல உக்காரு
என்னங்க சார் அப்படி பாக்குரீங்க .யாரு இவங்க அவங்களா பேசிட்டு இருக்காங்கனு பாக்குரீங்களா .என் பையன் வெளில போன் பேசிட்டு இருக்கான் அவன் வந்தா உங்களுக்கே எல்லாம் புரியும் .
யாரு சார் நீங்க கொஞ்சம் புரயுற மாதிரி சொல்லுங்க.
சிம்பு இங்க வாபா உன் மாமனாரு உன் கூட பேசணுமாம் .
என்னங்க மாமா என்ன நியாபகம் இருக்கா இல்ல மறந்துடிங்களா . நான் தான் சிம்பு 3 வருஷம் முன்னாடி உங்க பொண்ண கேட்டு வந்தேன்ல அதே சிம்பு தான் . இப்பயும் அவள , அவள மட்டும் தான் நெனச்சிட்டு இருக்கேன் . இப்ப நான் உங்க பொண்ணு மேல வச்சிட்டு இருக்குற காதல் எவ்வளவுனு உங்களுகே புரயும்னு நெனைக்கிறேன்.இப்ப உங்க பொண்ண எனக்கு கொடுப்பிங்கனு நெனைக்கிறேன் .
நிச்சயமா இவ்வளவு உண்மையா காதலிக்கிற உங்கள பிரிக்க யாருக்கு தான் மனசு வரும் .
சரிங்க மாப்ள நீங்களும் வினிதாவும் பேசிட்டு இருங்க .
நாங்களும் சம்மந்தியும் கல்யானத்த எப்ப வச்சிக்கலாம்னு பேசிட்டு இருக்கோம் .
என்னங்க மேடம் இத்தன நாள் மாமாவ பாக்காம பேசாம எப்படி இருந்தீங்க .

ம்ம் நீங்க எப்படி இருந்திங்களோ அப்படி தான் நாங்களும் இருந்தோம் . போடா லூசு எவ்வளவு கஷ்ட பட்டுட்டேன் தெரியுமா i love you da செல்லம் ..

அதான் வந்துட்டேன்லமா .இந்த புது வருசத்துல இருந்து நம்ப புது வாழ்க்கை தொடரலாம் . wish you happy new year .
same to you da செல்லம்.
(சரிங்க ரொம்ப நாள் கழிச்சி ரெண்டு பேரும் பேசிட்டு இருக்காங்க இனி நமக்கு அது வேண்டாம் )
அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் --