Tuesday, April 28, 2009

இதழ் தொட்ட பட்டாம்பூச்சி

என்றும் பூக்களளையே சுற்றி வரும்
பட்டாம்பூச்சி ஏனோ இன்று
என்னவளையே சுற்றி வந்தது .
எந்தன் இந்த புரியாத பார்வைக்கு
இன்று பூமியில்புதிதாக பூத்த இந்த
பூவின் இதழிலிருந்து தேன் எடுக்காமல்
போக மாட்டேன் என்று என் எதிரிலேயே
என்னவளிடம் மல்லுகட்டுகிறது .
என்னவளின் வெட்கத்தை பார்த்தே
வண்ணத்து பூச்சிகளுக்கு வண்ணங்களை
பூசினான் அந்த இறைவன் .
என்னவளின் மென்மையான பரிசத்தை
பார்த்தே ரோஜாக்களை படைதான்
அந்த இறைவன் .
என்னவளின் கொடி இடை அழகை
பார்த்தே சிற்பியை படைத்தான்
என்னவளின் அன்பை பார்த்தே என்னை
படைத்தான் அவளிடம் ஆயுள்
கைதியை கணவனாக இருக்க .
என்னவனே நீ என்னிடம் உன் முதல்
காதலை சொல்ல வரும்போது
உன் இமைகளின் பட படப்பை
பார்த்து பட்டாம் பூச்சி பறக்கவும்
நீ என்னை விட்டு போன பிறகு
என் இதய துடிப்பை பார்த்து
மீன்கள் தரையில் துடிக்கவும்
கற்றுகொண்டதடா

Friday, April 24, 2009

நாளை விடியலாவது நல்ல விடியலாய் அமையுமா இலங்கை தமிழ் மக்களுக்கு...என் சகோதர சகோதரிகளே இன்னும்
எதனை நாள்கள் தான் நீங்கள்
அங்கே கஷ்டத்தில் இருக்க
போகிரிகள் மரணத்தை விடவும்
கொடியது மரண பயம் இன்னும்
எத்தனை நாட்கள் தான் ஒவொரு
மணி துளிகளையும் மரணத்தோடு
போராட போகிரிகள் இன்னும் எத்தனை
நாள் தான் உங்கள் இரவுகளை
பகலுக்கு காணிக்கை
ஆக்கிஉங்கள் மானத்தையும் கர்புக்களை
paathu காக்க போகிரிகள் இன்னும்
எதனை நாள் தான் விடியல் காலையில்
உன் பிள்ளைகளின் பிணங்களையும் உன்
சுற்றத்தின் பிணங்களையும் தேடி
கொண்டு இருக்க போகிறாய்
விலங்குகள் குடா தன் இனத்தை தானே அழிக்காது
ஏனோ மனிதர்கள் ரத்த வெறி பிடித்த
பேய்களாய் மாறி போனார்கள்
இலங்கை ராணுவமே
உங்களுக்கு மட்டும் இறைவன் இதயத்தை
கல்லால படைத்தது விட்டன என்ன ?
இறைவானால் வரமளிக்க பட்டு
பூமில் நடக்கும் ஒரே பூ குழைந்தைகள்
தான் அதையும் உன்னால் எப்படியடா அழிக்க முடிகிறது ?.
உங்களின் ரத்தவெறி அந்த பிஞ்சு குழ்ந்தைகளை பார்த்துமா உங்களால் கொள்ள முடிகிறது
ஆயிரம் கனவுகளோடு vaytril kuzanthaiyai சுமந்து
கொண்டு உங்களிடம் போராடி கொண்டு
இருக்கும் கர்பிநிகளை எப்படியடா
உங்களால் தாக்க முடிகிறது
இல்லங்கை தமிழ் மக்களே உங்களை எண்ணி
எங்களால் தினம் தினம் கையாளகமல்
கண்ணிற் மட்டுமே விட்டு கொண்டு இருக்கிறோம்
இந்திய அரசாங்கமே இதற்கு நீ தான்
ஒரு முடிவு கட்ட வேண்டும்
உன் அரசியல் போதைக்கு நம் மக்களையே
பலி ஆக்காதிர்கள்
நீங்கள் எடுக்கும் முயற்சி எதுவானாலும்
விரைந்து செயல்பாடு
அங்கே கூட்டம் கூடமாக எரிக்க படுவது
நம் சகோதர சகோதரிகள் என்று மனதில் கொள்
தமிழன் என்று சொல்லுடா தலை
நிமிர்ந்து நில்லுடா என்று சொன்னதால்
தலை இல்லாமல் இருக்கும் நம் தமிழ்ர்களுக்கு
நாம் தமிழன் என்ற முறையில் என்ன செய்ய போகிறோம்
ஒரு நாள் நாடு தழுவிய வேலை நிறுத்தால் ithanaal
இல்லங்கை தமிழ் மக்களுக்கு நம்மால்
எதாவது செய்ய முடிந்ததா
இப்போது இல்லங்கைக்கு அனுப்பி வைக்க
பட்டுள்ள நம் தூதூவர்கல் மூலமாவது
நாளைய விடியலாவது இலங்கை தமிழ் மக்களுக்கு நல்ல விடியலாய் அமையுமா என்று கடவுளிடம் பிராத்திப்போம்

Wednesday, April 22, 2009

என்ன சுற்றி வரும் பட்டாம்பூச்சி

என்னபா இந்த அவோர்ட் எங்கயோ பாத்தா மாதிரி இருக்க . இதுக்கு முன்னாடி ஒரு முறை என் ப்லோக்லையே பாத்து இருக்கலாம் .இந்த ப்லோக் உலகத்தையே ஒரு சுத்து சுத்திட்டு என்ன விட்டு பிரிய மனசு இல்லாம மருபடயும் என் கிட்டயே வந்துடிச்சி . அட இன்னுமாபா புரியல நம்ப மீசைக்காரி ராம். சி எம் அண்ணா இந்த அன்பு தங்கச்சிக்கு பட்டாம்பூச்சி அவோர்ட் கொடுத்து இருக்காரு . இந்த அவோர்ட் கொடுத்த அண்ணாக்கு என் நன்றிகளை தெரிவித்து கொள்கிறேன் .அண்ணா என்னபத்தி உங்க ப்ளோக்ல நீங்க எழுதி இருகர்த்த பாக்கும் போது எனக்கு வெக்க வெக்கமா வருது அண்ணா சோ அதுக்கு ஒரு நன்றிகள் .


இந்த அவோர்ட் பாத்தா ஒடனே எல்லார் மனசுலயும் பட்டாம்பூச்சி பறக்குதா
ஓகே நான் பெற்ற இந்த சந்தோசத்த மற்றவர்களுடன் பகிர்ந்துக்க போறேன் அவங்க யார்னா

தமிழுக்கே அரசியான தமிழரசி அம்மா
http://ezhuthoosai.blogspot.com/ இவங்கள பத்தி நான் சொல்லறத விட நீங்களே போய் பாருங்களேன் கவிதை எல்லாம் அழக எழுதுவாங்க

வியா புதுசா கதை எழுத ஆரம்பிச்சி இருகாங்க
http://viyaa-ninaivugal.blogspot.com/ அவங்க இன்னும் நெறைய கதை கவிதை எழுத என் வாழ்த்துக்கள்

Monday, April 20, 2009

இனிய திருமண நல் வாழ்த்துக்கள்


இன்று மாலை திருமணம் செய்ய விருக்கும் என் தோழி சுஜிக்கு
புது இல்லறம் நல்லறமாய் அமைய என் வாழ்த்துக்கள் .

ஹாய் டி செல்லம் இனிய திருமண நல் வாழ்த்துக்கள்

புது இல்லத்தில் புது மணமகளாய் அடி எதுத்து வைக்கும் என் குல விளக்கே
.
அறிமுகம் இல்லாத மனிதர்கள் , பரிச்சய படாத குணங்கள் என எல்லாம் கலந்து இருக்கும் உன் புகுந்த வீட்டில் நியும் அவங்கள மாதிரி அவங்க குணத்துக்கு தகுந்த மாதிரி நடந்துக்கோ .
எப்பவும் சந்தோசமா இரு .
இனி உன்னில் பாதிய இருக்க போற உன் கணவர் கிட்ட அன்பா இரு .
எந்த விஷயமா இருந்தாலும் விட்டு கொடுத்து போ. அதுக்காக நீ எதுக்காகவும் உன் தன்மானத்த விட்டு கொடுக்காத .
கணவரோட அம்மாவ உன் அம்மாவ நினசிகோ பெரியவங்க கிட்ட மரியாதைய நடந்துக்கோ . உன் நாத்தனார் கிட்ட ஒரு தோழி போல நடந்துக்கோ .எப்பொழுதும் கவலை இல்லாமல் சந்தோசமா இரு
மற்றவை நேரில்

வாழையடி வாழையாய் பூமலரும் சோலையாய்
நல்லதொரு வேளையில் புதுமனங்கள் சேர்ந்திட
தேவர்களும் வாழ்த்துவர் மாந்தர்களும் வாழ்த்துவர்
உன் தோழியான நானும் வாழ்த்துவேன் என் தோழைமையான என் ப்லோக் உலக நண்பர்களும் உன்னை வாழ்த்த
வாழ்க நிவீர் பல்லாண்டு பல்லாய்ரத்தாண்டு என்று இந்த உலகும் உன்னை வாழ்த்தும்

Wednesday, April 15, 2009

நினைவெல்லாம் நியே


என்னவனே நீ என்னை மயக்கிய
இந்த மாலை வேளையில்
நான் உன் கை பிடித்து நடக்கும்
இந்த பயணம் முடிவில்லா இந்த
வானமும் பூமயும் போல் தொடர்ந்து
கொண்டே இருக்க
வேண்டும் .


என்னவனே நீ உன் கைகளால்
என் கன்னங்களை பிடித்து
நீஅருகினில் வந்து முத்தம்
இடும் நேரத்தில் என் கண்கள்
வெட்கத்தால் அதன் இமை கதவுகளை
பூட்டி கொள்ள என் இதழ் உனக்கு
கதவு திரக்க நீ கொடுத்த
முத்தம் நித்தம் நித்தம்
இனிக்குதடா


என்னவனே உன் பெயரை எழுதி

எழுதி உன் பெயரே எனக்கு

ஸ்ரீ ராமாஜெயமாய் மாறி

போனதடா

இறைவன் வந்து என்னிடம்

உனக்கு என்ன வரம் வேண்டும் என்று கேட்டால்

.ஒரே ஒரு நொடி மட்டும் உன் விரல்

பட்டு உன் இதழ் தொடும் புல்லாங்குழாலாய்

மாற வேண்டும் என்று கேட்பேனடா.

Saturday, April 11, 2009

கல்லறைஎன்னவனே உன் முகம் எனக்கு
கனவில் மட்டுமே காட்டுவாய்
என்றால் சொல்
(நான் இப்பவே விழி மூடி
கல்லறைக்கு போகவும் தயார் )
நான் எப்பவும் விழி மூடி இருக்கவும் தயார்

கல்லறைமீது பூத்த பூக்கள்
கடவுளின் சன்னதி சேர
முடியாத சோகம் போல் தான்
.எனது ஆசைகளும் கல்லறை
பூக்களை போல உன்னை சேர
முடியாமல் என்னுளே
புதைந்து கொண்டு இருக்கிறதுஎன்னவனே நீ என்னை விட்டு
சென்று கொண்டு இருப்பதயை
பார்த்து கொண்டு நான் உயிருடன்
அணு அணுவாக சாவதை விட
நிம்மதியாக கல்லறையில்
உறங்குவதே மேல்பசிக்கு அழும் குழ்ந்தையை போல்
தான். என் சோகங்களை உன்னிடம்
சொல்லவும் முடியாமல் என்னுளே
வைத்து கொள்ளவும் முடியாமல்
ஒரு குழ்ந்தையை போல் தினம்
தினம் அழுகிறேன்
தனிமையில்அவனுள்ளே இருக்கும் காதலியாய் அவனும்
என்னை புரிந்து கொள்ள வில்லை
உண்ணுலே இருக்கும் தோழியாய்
நீயும் என்ன புரிந்து கொள்ள வில்லை
என்னை புரிந்து வைத்துள்ள ஒரே உயிர்
உயிரே இல்லாத அந்த கல்லறை மட்டுமே
எனக்காவே காத்து கொண்டு
இருக்கிறது .எந்தன் திசை அறிய உனக்கு
என்றும் நான் திசை மாறும்
பறவை தான் .என் திசையை
நீ அறியும் வரை

Tuesday, April 7, 2009

முத்தம்
என்னவனே நீ எனக்கு கொடுத்த

முதல் முத்தத்தினை நினைக்கும்

போதெல்லாம் வானத்தில் இறக்கை

இல்லாமல் பறக்கிறேனடா.

நீ முத்தம் இட்டு என்னை கொஞ்சி

சாமதானம் படுத்தும் அழகிற்காகவே

உன்னிடம் எத்தனை முறை

வேண்டுமானாலும் வீண் சண்டைகள்

போடலமடா

என்னவனேஉன்னை கண்டதும்

என் இமைகளும்

சட்டென்று சந்தோஷத்தில்

முத்தம் இட்டு கொள்கின்றன

Friday, April 3, 2009

கனவு தேசம்எப்படியும் உள்ளே விடக்கூடாதென்று
இறுக என் கண்களை பூட்டிக்கொண்டு
தூங்க சென்றாலும்
கள்ள(ச்)சாவி போட்டு இரவை
ஆட்கொண்டு விடுகின்றன
உன் கனவுகள்
****************************************************
இதுவரை இல்லாத அதிசயமாய்
ஒரு நூறு நிலவுகளை கொண்டு
என் இரவுகளை அலங்கரிக்கிறது
உன் கனவுகள்
நீ என்னுள் வந்ததனால்
******************************************************
இரவுக்கு அழகு நிலவு
நிலவுக்கு அழகு தனிமை
என் தனிமைக்கு அழகு உன் நினைவு
என் இரவுக்கு அழகு உன் கனவு
******************************************************
அதிகாலையில் காணும் கனவு பலிக்குமாமே
அப்படி என்றால் இப்பொழுது
நாம் பிள்ளைகளுக்கு கொள்ளு பேரன்
பிறந்திருக்க வேண்டும் .
*******************************************************
" செல்லமா "
"என்னடா "
"உனக்கு கனவெல்லாம் வருமா "
" ம்ம் வருமே நெறைய "
"அந்த கனவுல
நான் வருவானா ......?"
"ம்ம் ... வருவ "
" அப்ப உனக்கு
புடிச்ச கனவு சொல்லேன் ..."
"எனக்கு எல்லா கனவுமே
பிடிக்கும் டா ...."
" எல்லாம்னா ......?
" எல்லா கனவும் தான் "
" அப்ப நான் வராத கனவும் புடிக்குமா ...?
" அய்யோ மக்கு "
உன்னை தவிர என் கனவில் வேற
யாரையும் நான் அனுமதிப்பதில்லை அதனால
தான் என் எல்லா கனவும் எனக்கு புடிக்கும்னு சொன்னேட
அய்யோ வரமடி நீ எனக்கு
...............................................................................................................