
உன் கை பிடித்து கடற்கரை மணலில் நடக்க ஆசை
பேருந்து பயணத்தில் ஜன்னலோர இருக்கையில் உன் தோள் சாய ஆசை
முடிவில்லா சாலையில் உன்னுடன் பயணம் செய்ய ஆசை
நீ உண்ட மிச்சத்தை நான் உன்ன ஆசை
கொட்டும் மழையில் ஒற்றை குடையில் நாம் நடக்க ஆசை
யாரும் இல்ல ஆத்தங்கரையில் உன் மடி சாய ஆசை
உன் கனவுகள் என்னை தினமும் எழுப்ப ஆசை
உன் நினைவுகளுடனே கண் மூட ஆசை
எனக்குள் வரும் கண்ணீரை உன் விரல் துடைக்க ஆசை
என் கரத்தை நீ மட்டும் பிடிக்க ஆசை
காற்றுக்கு கூட இடைவெளி விடாமல் நீ என்னை கட்டி அணைக்க ஆசை
உதட்டு சாயம் இல்லாமை என் இதழ்களை நீ சிவக்க வைக்க ஆசை
தொலைபேசியில் நீ கொடுத்த முதல் முத்தத்தை போல் இன்னொரு முத்தம் பெற ஆசை
நீ வங்கி தரும் பூக்களில் உன் வாசம் வீச ஆசை
மழை வராமலே உன் அன்பில் நான் நினைய ஆசை
உன் காதலில் நான் கரைய ஆசை
அடுத்த ஜென்மத்தில் அல்ல இந்த ஜென்மத்திலே நாம் திருமணம் செய்து கொள்ள ஆசை
இதில் எதுவுல் நடக்காது என்று தெரிந்தும்
ஏதோ ஒரு ஆசையில் காத்து கொண்டு இருக்கிறேன்
இந்த ஜென்மத்தில் தப்பி தவறி இதில்
எதாவது ஒன்று நடக்காத என்ற ஏக்கத்தில்
6 comments:
ஆசைகள் அத்தனையும் நிறைவேற ஆசை!!
//உன் கனவுகள் என்னை தினமும் எழுப்ப ஆசை
உன் நினைவுகளுடனே கண் மூட ஆசை
எனக்குள் வரும் கண்ணீரை உன் விரல் துடைக்க ஆசை
என் கரத்தை நீ மட்டும் பிடிக்க ஆசை//
அருமையான ஆழமான வரிகள் சகோதரி.
hummmmmmmmm...
kuttiuuundu manasukulla ethanai aasaigal..
அடுத்த ஜென்மத்தில் அல்ல இந்த ஜென்மத்திலே நாம் திருமணம் செய்து கொள்ள ஆசை
இதில் எதுவுல் நடக்காது என்று தெரிந்தும்
ஏதோ ஒரு ஆசையில் காத்து கொண்டு இருக்கிறேன்
இந்த ஜென்மத்தில் தப்பி தவறி இதில்
எதாவது ஒன்று நடக்காத என்ற ஏக்கத்தில்
nice expression of feelings
தமிழ் போஸ்ட்
அருமையான பதிவு
தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள்
இந்த தமிழ் புத்தாண்டில் உங்கள் பதிவுகளை தமிழ் போஸ்டில் இணைத்து பயன் பெறுங்கள்
தமிழ் போஸ்ட் செய்தி தாள் வடிவமைப்பு உங்கள் பதிவுகளை அழகாக வெளிகாட்டும்
தமிழ் போஸ்ட்
To get the Vote Button
தமிழ் போஸ்ட் Vote Button
உங்கள் வலைப்பூவை இணைத்து உங்கள் ஆதரவைதருமாறு வேண்டுகிறோம் …
நன்றி
தமிழ் போஸ்ட்
ஆசைப்பட்டியலில் இருக்கும் அத்தனையும் ரசமான ஆசைகள் !
Post a Comment