Thursday, August 26, 2010

சொல்லாமல் போன என் காதல்


உன்னோடோ கை கோர்த்து நடக்க பழக
ஆசை பட்டதிலிருந்து தெரிந்திருக்க வேண்டும் ,
உனக்கான என் கோபங்களை விட்டு கொடுத்ததிலிருந்து
தெரிந்திருக்க வேண்டும் ,

உன்னோடு உரையடுவதகாக என் நொடிகளை
எண்ணி கொண்டு இருக்கும் போதாவது
தெரிந்திருக்க வேண்டும்,
இன்னொரு பெண்ணை பற்றி என்னிடம்
பேசும் போது எனக்கு வந்த கோபத்தில்லாவது
தெரிந்திருக்க வேண்டும்,

உனக்கு பிடித்த பாடல் என்பதால் அதே படலை
ஒன்றுக்கு பாத்து முறை
நான் கேட்ட போதாவது தெரிந்திருக்க வேண்டும் ,


அப்பொழுதெல்லாம் தெரியாத
உன் மீதான என் காதல்
இதோ இப்பொழுது தெரிந்து விட்டது,

இனி நீயும் நானும் பேச போவதில்லை
என்று தெரிந்து பிரியும் போது ,

என்றும் உன்னை மறவாமல் உன் நிழலென
தொடரும் உன் கண்மணி காதலுடன் .

13 comments:

sakthi said...

அப்பொழுதெல்லாம் தெரியாத உன் மீதான என் காதல் இதோ இப்பொழுது தெரிந்து விட்டது,

தெரிந்து விட்டதா நல்லது

sakthi said...

என்றும் உன்னை மறவாமல் உன் நிழலென தொடரும் உன் கண்மணி காதலுடன்

வாழ்க வளமுடன்!!!

அன்பரசன் said...

காதல் அருமை

vinthaimanithan said...

இனிமே பொலம்பி என்னத்த!

நட்புடன் ஜமால் said...

நல்லாத்தானே போய்கிட்டு இருந்திச்சி

Anonymous said...

இந்த கவிதையை ஜீரணிக்கவே முடியலை அதனால் என்னால் கருத்திடமுடியாது....

logu.. said...

\\ தமிழரசி said...
இந்த கவிதையை ஜீரணிக்கவே முடியலை அதனால் என்னால் கருத்திடமுடியாது....\\

Unmaithanga..

rakasiyamaanathu kathal said...

உன் முகம் தெரியாது எனக்கு
ஆனால் உன் "முக"வரி தெரியும் எனக்கு
கலகலவென சிரிக்கும்
உன்
எழுத்துக்களைப் பார்த்து படித்ததுண்டு
படபடவென பாயும்
உன்
வார்த்தைகளை (or) குரலோசை கேட்டதுண்டு
உன் பாதம் செல்லும்
தடம் பார்த்ததில்லை
காற்றில் எங்கும் உன் குரலோசை
ஆனால்
காற்றே இல்லாமல் சுவாசிக்கிறேன்
என் உயிர் நாடித்துடிப்பில் நீ என்பதால்
தடம் பார்த்து கூட்டி செல்கிறாய் என
வருகிறேன் நானும் காதலெனும் உலகிற்கு ...

vinu said...

இனி நீயும் நானும் பேச போவதில்லை
என்று தெரிந்து பிரியும் போது ,



இது சரி தவறு எனும் விவாதத்திற்கோ இல்லை நல்லது கேட்டது என்னும் அறிவுரை வழங்கவோ நான் வரவில்லை நடந்தவைகளை நடந்தவைகள்லாகவே எடுத்துக் கொள்வது நலம் என்பது மட்டுமே என் ஆசை

Annam said...

mmmmm

தமிழ்த்தோட்டம் said...

காதல் வரிகள் அருமை

சித்தாரா மகேஷ். said...

//உனக்கான என் கோபங்களை விட்டு கொடுத்ததிலிருந்து
தெரிந்திருக்க வேண்டும் ,
உன்னோடு உரையடுவதகாக என் நொடிகளை
எண்ணி கொண்டு இருக்கும் போதாவது
தெரிந்திருக்க வேண்டும்,//

சொல்லாத காதல் செல்லாத காசாய் ஆகாமல் மனமே சொல்லிவிடு.....

சிந்திக்க வேண்டிய சில விடயங்கள்.I

சித்தாரா மகேஷ். said...

தங்கள் கவி எல்லாமே அருமை.