Monday, January 13, 2014

காதல் பண்டிகை





பழயன  எரித்தலும் ,புதியன  புகுத்தலும்  
தான்  போகி  பண்டிகை என்கிறார்கள் ,
ஆனால்  என்னுள் இருக்கும் 
உன் பழைய நினைவுகளை அழித்தாலும், 
மீண்டும் புதிதாய் உன் நினைவுகளே  பிறக்கின்றதே ,
ஒரு வேலை இதான் காதல் பண்டிகையா ???  

 

தாய்,  தந்தை , உற்றார் உறவினர் கூடி நின்று  
பொங்கலோ பொங்கல் என்று வேண்டிக்கொண்டிருக்கும்  போது 
என்னுள் இருக்கும்  உன் நினைவுகள் மட்டும் 
காதலோ காதல் என்று  கேலி செய்கிறது 
.உன் நினைவு  குறும்புகளின்  அழிசாட்டியம்  
தாங்க முடியவில்லையடா என்னால் 

   
    
 கரும்பின்  இனிப்பை விட   சுவையாக  இருக்கிறதடா,
  நீ என் இதழோடு  இதழ் முத்தமிட்டு  
விட்டு சென்ற  உன் இதழின்  ஈரம் ,  
தின்ன தின்ன   திகட்டாத அருஞ்சுவையும்  கலந்த  
ஒரு சுவையடா உன் முத்தம் :)


7 comments:

மகிழ்நிறை said...

அதிசயமாய் இருக்கிறது ஒரு பெண் இவ்வளவு துணிவாய் அகம் படுவது.ஆனால் என்னுல் என்பது என்னுள் என்றும் கோலி என்பது கேலி என்று இருப்பது தட்டச்சு பிழை தான் என்றாலும் படிக்கும் போது டிஸ்டர்ப் ஆகுது,கொஞ்சம் கவனிங்க தோழி !பொங்கல் வாழ்த்துக்கள் !!

அ.பாண்டியன் said...

சகோதரிக்கு வணக்கம்
மிக அற்புதமான வரிகள். மைதிலி சகோதரி கூறியது போல் அதிசயமாய் தான் நானும் பார்க்கிறேன். தொடர வாழ்த்துகளும் பாராட்டுகளும் தங்களுக்கு.
---------
தங்களுக்கும், இல்லத்தார் அனைவருக்கும்,நண்பர்களுக்கும் எனது அன்பான தமிழர் திருநாள் மற்றும் உழவர் திருநாள் வாழ்த்துகள்..

அ.பாண்டியன் said...

சகோதரிக்கு வணக்கம்
மிக அற்புதமான வரிகள். மைதிலி சகோதரி கூறியது போல் அதிசயமாய் தான் நானும் பார்க்கிறேன். தொடர வாழ்த்துகளும் பாராட்டுகளும் தங்களுக்கு.
---------
தங்களுக்கும், இல்லத்தார் அனைவருக்கும்,நண்பர்களுக்கும் எனது அன்பான தமிழர் திருநாள் மற்றும் உழவர் திருநாள் வாழ்த்துகள்..

http://bharathidasanfrance.blogspot.com/ said...


வணக்கம்!

திருவள்ளுவா் ஆண்டு 2045
இனிய தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்துக்கள்

பொங்கல் திருநாள் பொழியட்டும் நல்வளங்கள்
தங்கத் தமிழ்போல் தழைத்து!

பொங்கல் திருநாள் புகழட்டும் பூந்தமிழை
எங்கும் இனிமை இசைத்து!

பொங்கல் திருநாள் புனையட்டும் புத்துலகைச்
சங்கத் தமிழாய்ச் சமைத்து!

பொங்கல் திருநாள் புடைக்கட்டும் வேற்றுமையை!
கங்குல் நிலையைக் கழித்து!

பொங்கல் திருநாள் பொருத்தட்டும் ஒற்றுமையை!
எங்கும் பொதுமை இசைத்து!

பொங்கல் திருநாள் புதுக்கட்டும் சாதிமதம்
தொங்கும் உலகைத் துடைத்து!

கவிஞா் கி. பாரதிதாசன்
தலைவா்: கம்பன் கழகம் பிரான்சு

gayathri said...

எழுத்து பிழையை மாற்றி விட்டேன் தோழி, உங்களுக்கும் இனிய பொங்கல் நல வாழ்த்துக்கள் தோழி

gayathri said...

மிக்க நன்றி பாண்டியன் வாழ்திக்கும் வருகைக்கும் , உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்

gayathri said...

வணக்கம் பாரதிதாசன் அவர்களே உங்கள் கவி மிக அருமை , இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்