Saturday, April 11, 2009

கல்லறை



என்னவனே உன் முகம் எனக்கு
கனவில் மட்டுமே காட்டுவாய்
என்றால் சொல்
(நான் இப்பவே விழி மூடி
கல்லறைக்கு போகவும் தயார் )
நான் எப்பவும் விழி மூடி இருக்கவும் தயார்

கல்லறைமீது பூத்த பூக்கள்
கடவுளின் சன்னதி சேர
முடியாத சோகம் போல் தான்
.எனது ஆசைகளும் கல்லறை
பூக்களை போல உன்னை சேர
முடியாமல் என்னுளே
புதைந்து கொண்டு இருக்கிறது



என்னவனே நீ என்னை விட்டு
சென்று கொண்டு இருப்பதயை
பார்த்து கொண்டு நான் உயிருடன்
அணு அணுவாக சாவதை விட
நிம்மதியாக கல்லறையில்
உறங்குவதே மேல்



பசிக்கு அழும் குழ்ந்தையை போல்
தான். என் சோகங்களை உன்னிடம்
சொல்லவும் முடியாமல் என்னுளே
வைத்து கொள்ளவும் முடியாமல்
ஒரு குழ்ந்தையை போல் தினம்
தினம் அழுகிறேன்
தனிமையில்



அவனுள்ளே இருக்கும் காதலியாய் அவனும்
என்னை புரிந்து கொள்ள வில்லை
உண்ணுலே இருக்கும் தோழியாய்
நீயும் என்ன புரிந்து கொள்ள வில்லை
என்னை புரிந்து வைத்துள்ள ஒரே உயிர்
உயிரே இல்லாத அந்த கல்லறை மட்டுமே
எனக்காவே காத்து கொண்டு
இருக்கிறது .



எந்தன் திசை அறிய உனக்கு
என்றும் நான் திசை மாறும்
பறவை தான் .என் திசையை
நீ அறியும் வரை

Tuesday, April 7, 2009

முத்தம்




என்னவனே நீ எனக்கு கொடுத்த

முதல் முத்தத்தினை நினைக்கும்

போதெல்லாம் வானத்தில் இறக்கை

இல்லாமல் பறக்கிறேனடா.

நீ முத்தம் இட்டு என்னை கொஞ்சி

சாமதானம் படுத்தும் அழகிற்காகவே

உன்னிடம் எத்தனை முறை

வேண்டுமானாலும் வீண் சண்டைகள்

போடலமடா

என்னவனேஉன்னை கண்டதும்

என் இமைகளும்

சட்டென்று சந்தோஷத்தில்

முத்தம் இட்டு கொள்கின்றன

Friday, April 3, 2009

கனவு தேசம்











எப்படியும் உள்ளே விடக்கூடாதென்று
இறுக என் கண்களை பூட்டிக்கொண்டு
தூங்க சென்றாலும்
கள்ள(ச்)சாவி போட்டு இரவை
ஆட்கொண்டு விடுகின்றன
உன் கனவுகள்
****************************************************
இதுவரை இல்லாத அதிசயமாய்
ஒரு நூறு நிலவுகளை கொண்டு
என் இரவுகளை அலங்கரிக்கிறது
உன் கனவுகள்
நீ என்னுள் வந்ததனால்
******************************************************
இரவுக்கு அழகு நிலவு
நிலவுக்கு அழகு தனிமை
என் தனிமைக்கு அழகு உன் நினைவு
என் இரவுக்கு அழகு உன் கனவு
******************************************************
அதிகாலையில் காணும் கனவு பலிக்குமாமே
அப்படி என்றால் இப்பொழுது
நாம் பிள்ளைகளுக்கு கொள்ளு பேரன்
பிறந்திருக்க வேண்டும் .
*******************************************************
" செல்லமா "
"என்னடா "
"உனக்கு கனவெல்லாம் வருமா "
" ம்ம் வருமே நெறைய "
"அந்த கனவுல
நான் வருவானா ......?"
"ம்ம் ... வருவ "
" அப்ப உனக்கு
புடிச்ச கனவு சொல்லேன் ..."
"எனக்கு எல்லா கனவுமே
பிடிக்கும் டா ...."
" எல்லாம்னா ......?
" எல்லா கனவும் தான் "
" அப்ப நான் வராத கனவும் புடிக்குமா ...?
" அய்யோ மக்கு "
உன்னை தவிர என் கனவில் வேற
யாரையும் நான் அனுமதிப்பதில்லை அதனால
தான் என் எல்லா கனவும் எனக்கு புடிக்கும்னு சொன்னேட
அய்யோ வரமடி நீ எனக்கு
...............................................................................................................

Tuesday, March 31, 2009

ஊடல்களுக்குள் ஒரு காதல்

என்னவனே என் நாளேட்டில்
உன் நினைவுகளை நிரப்பி
கொண்டிருக்கும் போதே
என் செல் பேசியில் உன் பெயர் சிணுங்க
அதை பார்த்து நான் சிணுங்க
என் மனதிலும் உன் நினைவுகளை
நிரப்பி விடுகிறாயடா

என்னவனே நீ என்னை வேண்டாம்
என்றதும் என் இதயம் கிழே விழுந்து
இரண்டாகி போனதடா
நன்றாக பார் என் இதயத்தில்
இருக்கும் குட்டி இதயம் உன்னுடையது தான்
உன் இதயம் உனக்கு வேண்டும் என்றால்
என் இதயத்தை கிழித்து
உன் இதயத்தை எடுத்து கொள்
உன்னால் முடிந்தால்


என்னவனே நீ என் கை பிடித்து
போட்ட மோதிரத்தை
பார்க்கும் போதெலாம்
உனக்கும் எனக்குமான
ஊடல்களும் மறந்து
போகிறேனடா



நான் உன் மார்போடு
சாய்ந்து கொண்டு இருக்கும்
போது எப்படியடா என் மன
சுமைகளையும் நீயே சுமக்கிறாய் .
உன்னால் மட்டும் எப்படியடா
என் மீது பாசத்தை மட்டும்
காட்ட முடிகிறது .
நான் என்ன தவம் செயதேனட
நீ எனக்கு வரமாய் கிடைத்து
இருகிறாய்




கஷ்டங்கள் வரும் போது தான்
கடவுளை நினைபார்கலாம் மனிதர்கள் .
ஆனால் நானோ எனக்கு எந்த
கஷ்டமும் சந்தோசம் வந்தாலும்
முதலில் உன்னை நினைகிறேனடா
ஒரு வேலை நீ தன் என் காதலனோ ?


Thursday, March 26, 2009

காதல் கிறுக்கன்

"செல்லம்மா.."
"ம்.."
"செல்லம்மா.. செல்லம்மா"
"என்னடா.."
"ஒண்ணுமில்ல..
சும்மா கூப்டலாம்னு தோனுச்சு ..
அதான் கூப்டேன்"
"ஏய்.. சனியண்டா நீ.."
"உங்க ஊர்ல பொண்ணுங்கல்லாம்
சனியனுங்களதான் காதலிப்பீங்களா.."
" கிறுக்கனாடா நீ.. "
"உன்ன மாதிரி கிறுக்கிய
காதலிச்சா கிறுக்கனாதானே
இருக்க முடியும்.."
"டேய்.. ஒழுங்கா பேசுடா..
எனக்கு கோபம் வருது.."
"எங்க ஊர்ல கோபம் வந்தா
கட்டிபுடிச்சு முத்தம் தருவாங்க.."
"ஹேய்ய்.. பொறுக்கி..
நீ அடங்கவே மாட்டியாடா.."
" அட.. சிறுக்கி..
நீதான் அடங்கவே விடமட்டேங்குறியே.."
"இதுக்கு மேல பேசுன..
மவனே நானே உன்ன கொன்னுடுவேன்டா.."
"உன்னால முடியாதுடி"
"ஏன்?"
"என்ன விட்டுட்டு
உன்னால இருக்க முடியாதுடி"
"அப்படியெல்லாம் ஒண்ணுமில்ல..
இதுக்கு மேல எதாவது பேசுன..
நெஜமாலுமே உன்ன கொன்னுடுவேன்டா.."
" அப்போ என்ன கொல்றதுக்கு முன்னாடி
ஒரு முத்தம் கொடுத்துட்டு என்னை
என்ன வேணும்னாலும் பண்ணிக்கோ.."
"சீ..போடா.."
" ஹையோ.. எவ்ளோ அழகா இருக்கு.."
"என்ன?"
" வேற ஒண்ணுமில்ல ..
உன்னோட 'சீ.. போடா'வை சொன்னேன்.."
" ஐயோ.. ஆண்டவா.."
"அட .. இதுவும் நல்லாத்தான் இருக்கு."
என்னோடு நீ செல்லமாக
மல்லுகட்டும் அழகிற்காகவே
உன்னை அடிக்கடி சீண்ட
தோன்றுகிறது எனக்கு.
டிஸ்கி : இது என் பிரண்டு லோகு எழுதுன கவிதை எப்படி இருக்கு (எனக்கு ரொம்ப புடிச்சி இருக்கு அதன் இங்க போட்டேன் )