Sunday, August 21, 2011

சுகமான நினைவுகள்



நான் உன்னிடம் பேசியதை
எல்லாம் நினைக்கும் போது
என் இதயம் வெடிப்பதை போல வலி.

நிஜமாகவே வெடித்திருந்தால் கூட
ஈவளவு வலி இருந்திருக்காது .

உனக்கும் எனககுமான எதிர்காலங்கள்
இனி சேர்ந்து வரபோவதில்லை என்று
அன்றே தேர்ந்திருந்தால் சத்தியமாக
சொல்கிறேன் உன்னிடம் சண்டை
போட்டு இருக்க மாட்டேன் .

இன்று உன் நினைவுகள் மட்டுமே
என் நிகழ்கலங்கலாகவும் எதிர்கலங்கலகவும்
சென்று கொண்டு இருக்கிறது .

காதல் நிராகரிப்பின் வலியை
இன்று நான் உணரும் போது தான் தெரிகிறது
அன்று உன் மனம் என்ன
பாடு பட்டு இருக்கும் என்று .

நீ என்னை மறப்பதற்காக
வேறு எவளிடமும் பேசி விடாதே
உன்னுடனான சந்தோசமும் துக்கமும்
எனக்கு மட்டுமே சொந்தமானது .

ஏன் இன்று என்னிடம் பேச மறுக்கிறாய்
மறுபடி பேசினால் விலக
முடியாது என்பதற்காகவா?
அல்லது என்னிடம் நீ பேசாமல் இருந்தால்
உன்னை நான் மறந்து விடுவேன் என்றா .

அட பைத்திய கார நீ என்னிடம் பேசினாலும்
பேசாமல் போனாலும்
உன் நினைவுகள் நான் கல்லறைக்கு
போன பிறகும் என் மனதில் எதாவது
ஒரு ஓரத்தில் இருந்து
கொண்டு தான் இருக்குமடா.

உன் நினைவுகளை சுகமாக தாங்கி
நிற்கின்றது என் விழிகள் கண்ணீர் துளிகளில் .
உன் நினைவுகள் என் கண்ணீரில்
கலந்திருப்பதால் தானோ என்னமோ
கண்ணீர் துளிகள் கூட இனிப்பாக இருக்கிறது .

அழுகின்ற சுகத்தை கொடுத்த
உன் நினைவுகளையும் காதலை
நினைத்து கொண்டு உன்னவள்.

gayathri.R

5 comments:

Yaathoramani.blogspot.com said...

எழுத நினைக்கும் உள்ளத்து உணர்வை சிலரால்தான்
சொற்களில் அப்படியே கொணர முடிகிறது
அந்த வகையில் பிரிவையும் நேசிக்கும்
குணமுடயவளை மிகச் சிறப்பாகச் சித்தரித்துச் செல்லும்
இந்தப் பதிவு அருமையிலும் அருமை
தொடர வாழ்த்துக்கள்

logu.. said...

mm.. nallarukku.

Anisri said...

nice ma

சித்தாரா மகேஷ். said...

//உன்னுடனான சந்தோசமும் துக்கமும்
எனக்கு மட்டுமே சொந்தமானது//

வலிமிகு வரிகள்.

ரிஷபன் said...

எழுத நினைப்பதை சரளமாய்ச் சொல்லிச் செல்லும் அழகு..