நேசத்திற்கு எதிரியையும் வெறுக்க தெரியாது.. அதற்கு தெரிந்ததெல்லாம் அன்பு மட்டுமே..
Tuesday, March 31, 2009
ஊடல்களுக்குள் ஒரு காதல்
Thursday, March 26, 2009
காதல் கிறுக்கன்

"உங்க ஊர்ல பொண்ணுங்கல்லாம்
சனியனுங்களதான் காதலிப்பீங்களா.."
" கிறுக்கனாடா நீ.. "
"உன்ன மாதிரி கிறுக்கிய
காதலிச்சா கிறுக்கனாதானே
இருக்க முடியும்.."
"டேய்.. ஒழுங்கா பேசுடா..
எனக்கு கோபம் வருது.."
"எங்க ஊர்ல கோபம் வந்தா
கட்டிபுடிச்சு முத்தம் தருவாங்க.."
"ஹேய்ய்.. பொறுக்கி..
நீ அடங்கவே மாட்டியாடா.."
" அட.. சிறுக்கி..
நீதான் அடங்கவே விடமட்டேங்குறியே.."
"இதுக்கு மேல பேசுன..
மவனே நானே உன்ன கொன்னுடுவேன்டா.."
இதுக்கு மேல எதாவது பேசுன..
" அப்போ என்ன கொல்றதுக்கு முன்னாடி
ஒரு முத்தம் கொடுத்துட்டு என்னை
என்ன வேணும்னாலும் பண்ணிக்கோ.."
"சீ..போடா.."
" ஹையோ.. எவ்ளோ அழகா இருக்கு.."
"என்ன?"
" வேற ஒண்ணுமில்ல ..
உன்னோட 'சீ.. போடா'வை சொன்னேன்.."
என்னோடு நீ செல்லமாக
மல்லுகட்டும் அழகிற்காகவே
உன்னை அடிக்கடி சீண்ட
தோன்றுகிறது எனக்கு.
Wednesday, March 25, 2009
காத்திருக்கும் இதயம்

Sunday, March 22, 2009
உன் நினைவுகளை சுமந்தபடி
Wednesday, March 18, 2009
எனது ஆசைகள்
நீ எனக்கு கொடுத்த முத்தத்தில்
என் கன்னங்களும்
அந்தி வானமும் வெட்கத்தால்
சிவந்து விட்டது
உன் வருக்கைக்காக காத்திருக்கும்
என் இமைகளின் தேடலை
உன் முகம் காட்டும்
அதிசய கண்ணடி
நிலா
நான் உன்னக்காக எழுதிய
கவிதைகளை பார்த்து என்
கவிதையை தாங்கும்
மிகவும் ரசித்தேன்
நீ என்னுடம் இருக்கும் போது
இன்று அதே தனிமையை
mikavum வெறுக்கிறேன்
நீ என்னை விட்டு போனதை
உன் வருக்கைக்காக காத்திருந்து நிலவும்
தினம் தினம் தேய்கிறது
Monday, March 9, 2009
தில் தில் திகில் விடாது கருப்பு
கலைஞ்சர் டிவீல வர தில் தில் மனதில் ப்ரோக்ராம் மாதிரி
இந்த தில் தில் திகில் கதை எழுத மகா என்ன அழச்சி இருகாங்க அவங்களுக்கு நன்றி .
சரி கதைக்கு போகலாம் வாங்க
பாரதிராஜா சார் படத்துல வர மாதிரி எங்க பாத்தாலும் பச்ச பசேல்னு வயல் ,ரெண்டுஆல் உயரத்துக்கு பனைமரங்கள் , எட்டி பரிகுற மாதிரி மாந்தோப்புக்கள் ,இந்த மாதிரி அழகான கிராமத்துல தான் இருக்காரு நம்ப ஹீரோ ஈஸ்வர் .
முதல் முறையாக நம்ப ஹீரோ தான் காலேஜ் படிக்கர்த்துக்காக இந்த கிராமத்துல இருந்து பத்து கிலோ மீட்டர் வந்து பக்கத்து ஊர்ள இருக்க பச்சையப்பன் கல்லுரில படிகுறார்.
இன்னைக்கு ஈஸ்வரின் நண்பன் சிம்புவுக்கு பிறந்தநாள் என்பதால் நண்பர்கள் அனைவரும்இன்று இவினிங் சினிமாவுக்கு போகலாம் என்று முடிவு செய்தனர் .என்ன படத்துக்கு போகலாம் என்று அனைவரும் யோசித்து கொண்டு இருக்கும் போது ஈஸ்வர் மச்சி நாமா இனிக்கு எதாச்சி பேய் படத்துக்கு போகலாமாடானு kettka .
விக்கி : ஏன் மச்சி உனக்கு இந்த கொலைவெறி
ஈஸ்வர் : இல்லடா மச்சி நாமளும் எத்தன நாளைக்கு தான் இந்த காதல் படங்களையே பாக்கறதுஅதான் இனிக்கு ஏதாச்சி தேரரா பண்ணனும்டா ஓகே .
விக்கி : ஓகே மச்சி
இவேநிங் எல்லாரும் சிம்புவோட பைசால ராக்கி தியேட்டர்ல திகில் படம் பாக்க ரெடி ஆய்ட்டாங்க .
படமும் முடிஞ்சி எல்லாரும் நல்ல படிய வெளில வந்தாங்க .
ஈஸ்வர் முகத்துல மட்டும் ஒரு மாற்றம்
விக்கி : என்னடா மச்சான் ஈஸ்வர் பேய் படத்த பாத்துட்டு பேய் அறஞ்ச மாதிரி வாரான்
சிம்பு : ம்ம்ம்ம் அவன் அந்த பேய் கிட்ட போன் நம்பர் கேட்டு இருப்பான் . அதுக்கு அது நம்பர் கொடுக்க மாட்டேன் போட போரிகினு சொல்லி இருக்கும் அதான் மூடவுட்டோட வாரான் என்னடா மச்சி நான் சொல்றது சரிதானாட
ஈஸ்வர் : போங்கடா ஏன்தான் இந்த படம் பாத்தநோனு இருக்கு மனசு ஒரு மாதிரி இருக்குடா .
சிம்பு :என்னடா சரிவா புண் பட்ட மனதை புகைவிட்டு ஆத்து
ஒரு மாதிரி இருக்க மனச ஒரு கட்டிங் ஊ த்தி குளிப்பாட்டுனு பெரியவங்க சொல்லி இருகாங்க .
ஈஸ்வர் : இல்லடா மச்சான் நான் கெளம்புறேன் .எங்க ஊருக்கு போற கடைசி பஸ்சும் போயிட்டு இருக்கும் .நான் இங்க இருந்து பத்து கிலோ மீட்டர் நடந்து போகனும்டா நான் வரேண்டா .
சிம்பு & விக்கி : இல்லன இருடா நாங்க உன்ன கொண்டு போய் உங்க வீட்ல விட்டு வரோம்னு சொன்னாங்க .
ஈஸ்வர் : இல்லடா மச்சி நீங்க போங்கடா நாளைக்கு காலேஜ்ல பாக்கலாம் பாய்
சிம்பு & விக்கி : ஓகே பாய் மச்சி
மறுநாள் காலை சிம்பு , விக்கி காலேஜ் வந்துவிட்டனர்
சிம்பு : என்னடா மச்சி ஈஸ்வர பாத்தியாடா
விக்கி : இல்லடா மச்சி என்னனு தெரியல அவன் இன்னும் காலேஜ் வரலாட
சிம்பு : சரி இரு அவன் மொபைல்கு கால் பண்ணி பாக்கலாம்((இந்த என் தற்சமயம் தொடர்பு கொள்ள முடியாது தயவு செய்து சிறிது நேரம் கழித்து முயற்சிக்கவும் ))
என்னடா செல் ஆப் பண்ணி வச்சி இருக்கான்
விக்கி : சரி அவங்க விட்டு லேன்லைங்கு கால் பண்ணி பாருடா
சிம்பு : ( ட்ரிங் ட்ரிங் ட்ரிங் )
விக்கி : என்னடா
சிம்பு : இருடா இப்ப தான் ரிங் ஆகுது
ஈஸ்வர் அம்மா : ஹலோ யாருங்க சோகமான குரலில்
சிம்பு : ஹலோ அம்மா நான் ஈஸ்வர் பிரண்டு சிம்பு பேசுறேன்மா. ஈஸ்வர் இனிக்கு காலேஜ் வரல அதன் என்னனு கேக்கலாம்னு கால் பன்னேன்மா.
(ஈஸ்வர் அம்மா சொன்ன பதிலால் சிம்புவின் செல் தன்னை அறியாமல் கிலே விழுந்தது )
விக்கி : மச்சான் என்னடா என்னாச்சி ?
சிம்பு : ?????????
விடாது கருப்பு
தொடரும் .................................
Wednesday, March 4, 2009
பிறந்தநாள்
நீ கவிதை எழுதி
Sunday, March 1, 2009
மரணம்..

ஒரு அகால
மரணம்.
ஊரே ஒன்றாகி
கதறிக்கொண்டிருந்தது.
மெதுவாக எட்டி
பார்த்தேன்.
அத்தனை
கூச்சல்களுக்கு
மத்தியிலும்
சட்டென்று எனக்கு
தோன்றியது.
கொடுத்து வைத்தவன்
இவன்தான் என்று.
இப்போதெல்லாம்
மரணத்தை மிகவும்
அதிகமாக நேசிக்க
துவங்கிவிட்டேனோ
என தோன்றுகிறது எனக்கு.
யாருடைய கண்ணீரையும்
விலையாக பெற்றுக்கொள்ளாமல்
என் மரணம் கூட
மிக மிக
தனிமைபடுத்தப்பட்டதாகவே
இருக்க விரும்புகிறேன்.
அப்போதாவது
மௌனமாய் என் மீதான
உன் காதலை பற்றி
ஏதேனும்
சொல்லக்கூடும் நீ.