1.உங்களுக்கு ஏன் இந்தப் பெயர் வந்தது? உங்களுக்கு உங்க பெயர் பிடிக்குமா ?
என் ஜாதகப்படி முதல் எழுத்து “கா”வில் தொடங்குவதால் காயத்திரி என்ற இந்த பெயர் வந்தது.
ரொம்ப பிடிக்கும்.... எங்க அம்மா எனக்கு இன்னொரு பெயர் வச்சி இருக்காங்க அனிதான்னு அத பயன்படுத்திக் கொள்வேன்.
2.கடைசியாக அழுதது எப்பொழுது?
20/05/09 புதன்கிழமை மதியம் 1.45 க்கு அழுதேன்.:(((((
3.உங்களோட கையெழுத்து உங்களுக்கு பிடிக்குமா?
ம்ம்ம்ம்ம்ம்ம்ம் ரொம்ப பிடிக்கும்... அதான் 100 பக்கம் அசைன்மென்டுக்கு 125 பக்கம் எழுதி கொண்டுபோய் கொடுத்தேன் (ஆன நான் எழுதுனது அவங்களுக்கு புரியுமான்னு தெரியல?:)))))))))))
4.பிடித்த மதிய உணவு என்ன?
சாம்பார் சாதம் , அப்பளம் ( பிந்து அப்பளம் இல்ல எந்த அப்பளமா இருந்தாலும் ஒகே)
5.நீங்கள் வேறு யாருடனாவது உங்களோட நட்பை உடனே வச்சுக்குவீங்களா?
நம்ப கூட கடைசி வரைக்கும் வரப் போவது நட்பு தான் . அத வச்சிக யோசிக்கலாமா?
6.கடலில் குளிக்க பிடிக்குமா....அருவியில் குளிக்க பிடிக்குமா?
கடலில் அலையை இரசிக்க மட்டும் தான் பிடிக்கும் . அருவியில் குளிச்சா மூச்சி முட்டும் .அதனால எனக்கு ஆத்துல குளிக்க தான் பிடிக்கும் . (அதாவது எங்க ஆத்துல குளிக்கிறதை சொன்னேன் )
7.முதலில் ஒருவரைப் பார்க்கும் போது எதை கவனிப்பீர்கள்?
கண்கள் , முடி , உடை ,
8.உங்க கிட்ட உங்களுக்கு பிடிச்ச விஷயம் என்ன? பிடிக்காத விஷயம் என்ன ?
என் கை விரல்களில் நகம் வளர்ப்பது மிகவும் பிடிக்கும் .
என்னை பிடித்தவர்களை மிகவும் கோவப்படுத்துவது பிடிக்காது( இருந்தாலும் மாற்றிக்கொள்ள முடியவில்லை)
9.உங்க சரி பாதி கிட்ட உங்களுக்கு பிடித்த பிடிக்காத விசயம் எது?
என்னோட சரி பாதி என் கிட்ட முழுசா வந்ததுக்கு அப்பறம் இதப் பத்தி சொல்றேன்... ஒக்கே
10.யார் பக்கத்துல இல்லாம இருக்குறதுக்கு வருந்துகிறீர்கள் ?
என் ஃப்ரண்ஸ்
11.இதை எழுதும் போது என்ன வர்ண ஆடை அணிந்து உள்ளீர்கள்
மெரூன் கலர் சுடி
12.என்ன பார்த்து//கேட்டுக் கொண்டு இருக்குறீங்க ?
டைப் பண்ணறதால எங்க சார் வராரான்னு பாத்துக்கிட்டு இருகேன்.
அயன் படத்துல நெஞ்சே... நெஞ்சே...நீ எங்கே நானும் அங்கே( அந்த பாடல் கேட்டுகிட்டு இருக்கேன்)
13.வர்ணப் பேனாக்களாக உங்களை மாற்றினால் என்ன வர்ணமாக உங்களுக்கு ஆசை?
மெரூன் கலர் எனக்கு ரொம்ப பிடிச்ச நிறம். அப்பறம் எப்பவாவது கருப்பு
14. பிடித்த மணம் ?
மண் வாசம் இப்பவும் அத அனுபவிச்சுட்டு தான் இருக்கேன்..... அட இங்க மழை வருதுன்னு சொல்றேன் அவ்வளவு தான் .
அப்பறம் மாலை நேரம் மல்லிகை மலரும் வாசம்.புது புத்தக வாசம்
15.நீங்க அழைக்கப் போகும் பதிவரிடம் உங்களுக்கு பிடித்த விஷயம். அவரை அழைக்கக் காரணம் என்ன ?
சக்தி காதல் கவிதை மட்டும் இல்லாமல் மத்த எல்லா கவிதையும் அழகா எழுதுவாங்க.....வியா கவிதையில் இருந்து இப்ப புதுசா கதை எழுதுறாங்க... கொஞ்சம் நிஜம்... கொஞ்சம் ...கற்பனை கலந்து.
16.உங்களுக்கு இதை அனுப்பிய பதிவரின் பதிவில் உங்களுக்குப்பிடித்த பதிவு ?
என்னை இந்த பதிவிற்கு அழைத்தவர் அ.மு.செய்யது .அவருடைய பதிவில் எனக்கு பிடித்தது அந்த முதல் சந்திப்பு கதை எனக்கு ரொம்ப பிடித்து இருந்தது....
17. பிடித்த விளையாட்டு?
பிடித்த விளையாட்டுன்னு எதுவும் சொல்ல முடியாது. ஆன பாப்பாங்க கூட விளையாடறது பிடிக்கும்.
18.கண்ணாடி அணிபவரா?
இல்லை
19.எப்படிப் பட்ட திரைப் படம் பிடிக்கும்?
நல்ல காதல் திரைப் படங்கள், காமடி திரைப்படங்கள். ஜெயம் , கோவில், பருத்திவீரன், நெஞ்சிருக்கும்வரை.
20.கடைசியாகப் பார்த்த படம்?
வெண்ணிலா கபடி குழு அதுல கூட கடைசி சீன் பாக்கவில்லை...
21.பிடித்த பருவ காலம் எது?
இலையுதிர்க் காலம் முடிந்த பிறகு . மீண்டும் புதிதாக இலை வரும் காலம் . அத எப்படி சொல்றதுனு தெரியலை (நீங்க எல்லாம் ரொம்ப அறிவாளிங்க நீங்களே புரிந்துகொள்வீர்கள் என்று எனக்கு தெரியும்:)))))))))}]
22.என்ன புத்தகம் படித்துக் கொண்டு இருக்கீங்க?
இப்போதைக்கு பரிட்சைக்காக என்னோட புத்தகத்தை மட்டும் தான் படிச்சிட்டு இருக்கேன்.
23.உங்கள் டெஸ்க்டொப்-ல் இருக்கும் படத்தை எத்தனை நாளுக்கு ஒரு நாள் மாற்றுவீர்கள்?
எனக்கு எப்போதெல்லாம் தோனுகிறதோ அப்போதெல்லாம் மாற்றுவேன்.
24.பிடித்த சத்தம் ? பிடிக்காத சத்தம்?
பிடித்த சத்தம் : ஜெயம் படத்துல விசில் சத்தம் , வோடபோன் விளம்பரத்துல வர பொம்மைகள் பேசும் சத்தம் ரொம்ப பிடிக்கும்,
பிடிக்காத சத்தம் : நான் தூங்கன பிறகும் வர டிவி சத்தம்
25.வீட்டை விட்டு நீங்கள் சென்ற அதிக பட்ச தொலைவு?
5 நாள் அம்மாவையும் வீட்டையும் விட்டுட்டு ஊட்டி , கொடைக்கானல் போனது
26.உங்களுக்கு ஏதாவது தனித் திறமை இருக்கிறதா?
தனித்திறமைன்னு ஒன்றும் இல்லை ஆனால் நான் எழுதுற கவிதைகள் எப்படி வந்தது எங்க இருந்து வந்தது என்று தெரியலை (நீங்க ஒத்துக்கிட்டா வேணும்னா அத ஒரு திறமைனு வச்சிக்கலாம் என்ன சொல்றீங்க)
27.உங்களால் ஏற்றுக் கொள்ள முடியாத ஒரு விஷயம்?
அப்படி எல்லாம் எதுவும் இல்லை .எதா இருந்தாலும் அதன் போக்கிலேயே போய் பழகிட்டேன்.
28.உங்களுக்கு உள்ளே இருக்கும் சாத்தான்?
எல்லார் மேலேயும் அதிகமா அன்பா இருப்பது
29.உங்களுக்கு பிடித்த சுற்றுலா தலம்?
ஊட்டி , கொடைகானல், வேலுர் கோல்ட் டெம்புல்
30.எப்படி இருக்கணும்னு ஆசை?
இப்ப எனக்கு கிடச்சி இருக்க ஃப்ரண்ஸ் விட்டு போகாமல் எப்பவும் அவங்க கூடவே இருக்கனும் என்று ஆசை ( ஆசை பட்டதெல்லாம் நடக்குமா என்ன?)
31.மனைவி/ கணவர் இல்லாம செய்ய விரும்பும் ஒரே காரியம் ?
அதெல்லாம் அவங்க வந்ததுக்கு அப்பறம் பாக்கலாம!!!!!!
32)வாழ்வு பற்றி ஒரு வரி சொல்லுங்க?
நான் ரொம்ப சின்ன பொண்ணு நான் என்ன சொல்றது இதுக்கு......
ம்ம்ம்ம்ம்ம் கடவுள் கொடுத்த ஒரு லைப் அத நல்லா சந்தோஷமா வாழனும் அதான்.... .
213 comments:
«Oldest ‹Older 201 – 213 of 213நல்ல சிறப்பான பதில்கள்...
உங்களைப் பற்றி தெரிந்து கொண்டதில் மகிழ்ச்சி gayathri
100/100
குமரை நிலாவன் said...
நல்ல சிறப்பான பதில்கள்...
உங்களைப் பற்றி தெரிந்து கொண்டதில் மகிழ்ச்சி gayathri
nanriga குமரை நிலாவன்
கவிக்கிழவன் said...
100/100
nanriga கவிக்கிழவன் mendum varuga
S.A. நவாஸுதீன் said...
200
vazthukkal anna
200 மிஸ்ஸாகி போச்சு :)
ஆளவந்தான் said...
200 மிஸ்ஸாகி போச்சு :)
ok vedunganext time pathukalam
எல்லா பதில்களும் ரொம்ப இயல்பாக உள்ளன.. அருமை
இந்தத் தொடர்பதிவின் கேள்விகளில், நீங்கள் கண்ணாடி அணிபவரா? என்ற கேள்வி ஏன் வந்தது என்று தெரியவில்லை. இது ஒரு சம்பந்தமில்லாத கேள்விபோல் தோன்றுகிறது.
//எல்லார் மேலேயும் அதிகமா அன்பா இருப்பது//
ஒரு குடோனே வச்சிருக்கீங்க போல :-)
//வெண்ணிலா கபடி குழு அதுல கூட கடைசி சீன் பாக்கவில்லை...//
ஏன்?? சிடி ல கடைசி சீன் இல்லையா??
உழவன் " " Uzhavan " said...
எல்லா பதில்களும் ரொம்ப இயல்பாக உள்ளன.. அருமை
nanriga உழவன்
இந்தத் தொடர்பதிவின் கேள்விகளில், நீங்கள் கண்ணாடி அணிபவரா? என்ற கேள்வி ஏன் வந்தது என்று தெரியவில்லை. இது ஒரு சம்பந்தமில்லாத கேள்விபோல் தோன்றுகிறது.
illaiga anna ellarum sistem use panravangala than irupanga athan kettu irukanga ok
//எல்லார் மேலேயும் அதிகமா அன்பா இருப்பது//
ஒரு குடோனே வச்சிருக்கீங்க போல :-)
oru kudona apa methi enga vaikarthu
//வெண்ணிலா கபடி குழு அதுல கூட கடைசி சீன் பாக்கவில்லை...//
ஏன்?? சிடி ல கடைசி சீன் இல்லையா??
mmmmmmm netla pakkum pothu lost seen pakkum pothu enga sir vanthutaru athan pa
இயல்பான பதில்கள் தந்தாய் தங்காய், வாழ்த்துக்கள்
ஷஃபிக்ஸ் said...
இயல்பான பதில்கள் தந்தாய் தங்காய், வாழ்த்துக்கள்
nanringa ஷஃபிக்ஸ் ungal muthal varukkaikkum vaztherkkum mendum varuga
அன்பின் காயூ - இருபத்தாறு மணி நேரத்திக்ல் இரு நூறுக்கும் மேற்பட்ட மறுமொழிகள் - நீ பிரபல ப்திவர்தான் - ரவுடிதான் - நல்வாழ்த்துகள் காயூ
cheena (சீனா) said...
அன்பின் காயூ - இருபத்தாறு மணி நேரத்திக்ல் இரு நூறுக்கும் மேற்பட்ட மறுமொழிகள் - நீ பிரபல ப்திவர்தான் - ரவுடிதான் - நல்வாழ்த்துகள் காயூ
neengale solltinga ini naanum pirapalam thaan
Post a Comment