நேசத்திற்கு எதிரியையும் வெறுக்க தெரியாது.. அதற்கு தெரிந்ததெல்லாம் அன்பு மட்டுமே..
Thursday, December 31, 2009
நினைவெல்லாம் நீயே
ஹே வினிதா இந்த சில்லென்ற பனிகாற்றில் உன் கூட கை பிடிச்சிட்டு இந்த அலையை ரசிக்க எவ்ளவு சந்தோசமா இருக்கு தெரியுமாடி . என் காலம் முழுவதும் இதே மாதிரி உன் கை பிடிச்சிட்டு இங்கயே இருக்க சொன்னா கூட இருப்பேன்.என்னமா வந்ததுல இருந்து நானே பேசிட்டு இருக்கேன் நீ எதுவும் பேசாம இருக்க ஏன் ஒரு மாதிரி இருக்க என்னாச்சி ?.
நிஜமா காலம் பூரா என் கூடவே இருக்கணும்னு ஆசைய
ஏன்மா இப்படி சந்தேகத்தோட கேக்குர பின்ன என்னடா 5 .30௦ கு வர சொன்னா 6 .30 க்கு வந்து இருக்க . உன் மொபைல்க்கு கால் பண்ணாலும் சுவிட்ச் ஆப்னு வருது . என்ன சாமதானம் பண்றதுக்கு காலம் பூரா என் கூட இருகண்ணும் அப்படி இப்படின்னு கதவிடற அப்படி தானே என்று கண்களில் நீருடன் அவனை பார்க்கிறாள் .
ஹே என்னடி லூசு மாதிரி பேசுற என்னாச்சி உனக்கு இன்னைக்கு . நீ எப்பவும் இப்படி என் கூட பேசினது இல்லையே என்னே ப்ரோப்ளம்மா உனக்கு ?
எனக்கு பயமா இருக்கு சிம்பு நீயும் நானும் சேராம போயிடுவோமோனு.
என்னைக்கும் இல்லாம இன்னைக்கு மட்டும் என்ன பயம் உனக்கு .
இது வரைக்கும் எங்க வீட்ல கல்யாண பேச்சை எடுக்கல . ஆனா அம்மா இப்ப எனக்கு கல்யாணம் பண்ணியே ஆகனும்னு முடிவா இருக்காங்க .
சரி நீ என்ன முடிவு பண்ணி இருக்க
இதுலநான் முடிவு பண்ண என்ன இருக்கு . நம்ப காதல பத்தி நான் வீட்ல சொல்லிட்டேன் . எனக்கு வேற வழி தெரியல .
சரி வீட்ல என்ன சொன்னாங்க ?
என்ன கட்டி புடிச்சி முத்தம் கொடுத்து சரிடி செல்லம் நீ லவ் பண்ணுனு சொன்னாங்க .என்ன விளயாடுரியா நான் எவ்வளவு பெரிய விசயம் சொல்லிட்டு இருக்கேன் . நீ கொஞ்சம் கூட டென்ஷன் இல்லாம கூலா கேள்வி கேட்டுட்டு இருக்க .
வேற என்ன பண்ண சொல்ற உன்னைய எங்கயாச்சி கூப்பிட்டு ஓட சொல்றியா அதெல்லாம் என்னால முடியாது .
என்னைய கூப்பிட்டு ஓடணும்னு ஒன்னும் சொல்லல . உங்க அம்மா, அப்பாவ கூப்பிட்டு வந்து எங்க விட்ல பேசுன்னு தான் சொல்லுறேன் . வர வெள்ளிகிழமை நீ வந்து எங்க வீட்ல பேசுவேன்னு நான் அப்பா கிட்ட சொல்லி இருக்கேன் .நீ இல்லாம என்னால இருக்க முடியாது சிம்பு .
இந்த சினிமா டைலாக்க எல்லாம் என் கிட்ட பேசாத. ஏதோ பேசணும்னு தோனிச்சி பேசினேன் . லவ் பண்ணனும்னு தோனிச்சி லவ் பண்ணேன் அவ்வளவு தான் .; இப்ப கல்யாணம் பண்ணனும்னு தோனல சோ கல்யாணம் பண்ண முடியாது .உங்க வீட்ல பாக்குற பையன கல்யாணம் பண்ணிட்டு சந்தோசமா இரு ஓகே . நான் வரேன் சாரி நான்
போறேன்உன்னைய போய் லவ் பண்ணேன் பாரு அதுக்கு நான் இந்த கடல்ல குதிச்சி தற்கொலை பண்ணிக்கிறேன் போடா போ
ஏய் போடி …….
அண்ணா கடலை வாங்கிகோங்க அண்ணா , 5 ரூபாய் தான் வாங்கிகோங்க அண்ணா .
எனக்கு வேண்டாம்டா நானே இத்தன நாள் கடலை போட்டுட்டு இருந்த பிகர விட்டுட்டு போறேன், என் கிட்ட வந்து கடலை வாங்கிகோனு சொல்ற எனக்கு வேண்டாம் போடா .
அண்ணா அங்க பாருங்க உங்க கூட பேசிட்டு இருந்த அக்கா தண்ணிகுள்ள போறாங்க
ஏய் என்னடா சொல்ற ஆமா அண்ணா அங்க பாருங்க .
ஏய்வினிதா போவாதடி நில்லு சொன்னா கேளு போவாதடி நில்லு ,நான் சும்மா விளையாட்டுக்கு தான் சொன்னேன் வாடி ,
இல்ல நீ போய் சொல்லற .லூசு வா வந்து உக்காரு பேசலாம்
ம்ம்
லுசாடி நீ . உன்னைய பிடிக்காம தான் 2 வருசமா உன்ன லவ் பண்ணிட்டு , 24 மணி நேரமும் போன்ல பேசிட்டு , காலைல இருந்து நைட் வரைக்கும் என்னக்கு என்ன என்ன நடக்குதுன்னு . உன் கிட்ட சொல்லிட்டு , என் சந்தோசம் துக்கம் எல்லாம் உன்கிட்ட ஷேர் பண்ணிட்டு இருக்கேன் இதெல்லாம் யோசிக்கவே மாட்டியா நீ .
இப்ப இவ்வளவு பேசுற அப்ப மட்டும் ஏன் அப்படி பேசின
சரி வெள்ளிகிழமை வீட்டுக்கு வர சொன்னய்யே . சொல்லாம கொள்ளாம போய் ஒரு இன்ப அதிர்ச்சி கொடுக்கலாம்னு இருந்தேன்சரிடி வெள்ளிகிழமை முதல்ல நான் மட்டும் வந்து உங்க அம்மா அப்பா கிட்ட பேசுறேன். அவங்களுக்கு என்னைய புடிச்சி கல்யாணத்துக்கு சரின்னு சொல்லிட்டா நான் மறுபடியும் அம்மா அப்பா கூட வந்து பேசுறேன் சரியா.சரி நான் ஒன்னு சொல்றேன் கேளு . நான் ஏற்கனவே சொன்ன மாதிரி US போற விஷயமா பாஸ்போர்ட் எல்லாம் ரெடி ஆகிடிச்சி . ஜனவரி லாஸ்ட் போனாலும் போவேன் . அதுக்குள்ள உங்க வீட்ல சம்மதம் வாங்கிட்டு ரெண்டு பேரும் கல்யாணம் கட்டிட்டு அங்கேயே போய்டலாம் என்ன சரியா
.ம்ம் சரி போடா லூசு கொஞ்ச நேரத்துல என்ன எப்படி பயமுறுத்திட்ட.
காதல்ல இதெல்லாம் சகஜமடி என் செல்லமா ........
சரி சரி வீட்டுக்கு கிளம்பு நேரம் ஆகிடிச்சி அம்மா அப்பா கிட்ட சொல்லு நான் வெள்ளிகிழமை வரேன்னு . வா நானே உன்ன உங்க வீட்டு பக்கத்துல டிராப் பண்ணிட்டு போறேன் .
இல்ல வேண்டாம் நானே வீட்டுக்கு போறேன் .இப்பவே ட்ராபிக் அதிகமா இருக்கும் நீ இப்ப கிளம்பினா தான் வீட்டுக்கு சிக்கிரம் போக முடியும் .
சரிங்க மேடம் நான் கிளம்புறேன் நீங்க விட்டுக்கு போய்ட்டு கால்
பண்ணுங்க
என்னமா வினிதா அந்த தம்பிய பார்த்தியா பேசினியா என்ன சொன்னாரு.
வர வெள்ளிகிழமை வீட்டுக்கு வந்து உங்க கிட்ட பேசுறேன்னு சொல்லியிருக்காருங்க அப்பா.
அப்படியா, சரிமா நீ போய் சாப்ட்டு தூங்கு
சரிங்க அப்பா .
என்னங்க அவ தான் எதோ பேசுறானா நீங்களும் அவகூட சேர்ந்து பேசிட்டு இருக்கீங்க . அந்த பையன் யாரு என்ன, ஜாதி , மதம்னு தெரியாம வர சொல்லிடீங்க . அவனுக்கு எப்படி நம்ப பொண்ண கொடுக்கறது .
என்னமா சொல்றிங்க நீங்க என்ன கடைசி வரைக்கும் சந்தோசமா வச்சிட்டு இருக்க போறது அவன் என் மேல வச்சிட்டு இருக்க அன்பு காதல் மட்டும் தான் நீங்க சொல்ற ஜாதி, மதம் இல்லநீங்க மட்டும் சொல்றிங்களா அந்த பையன பத்தி எதுவும் தெரியாம எப்படி நம்ப பொண்ண கொடுக்குர்துன்னு . நீங்க பாக்குற பையன பத்தி எதுவுமே தெரியாம நான் மட்டும் எப்படி கல்யாணம் பண்ணிப்பேன்.
உனக்கு வாய் ரொம்ப அதிகமாய்டிச்சிடி . கூட கூட பேசிட்டு இருந்த அறைஞ்சிடுவேன் .
இப்ப ஏன் நீங்க ரெண்டு பேரும் சண்ட போடறிங்க அந்த தம்பி வர வரைக்கும் இனி இத பத்தி யாரும் பேசாதீங்க போய் தூங்குக போங்க.
வெள்ளிகிழமை காலை 7 மணிக்கு வினிதாவின் அலைபேசி சிணுங்குகிறது .ஹெலோ வினிதா நான் சிம்பு பேசுறேன் .
என்னடா இந்த டைம்க்கு கால் பண்ணி இருக்க என்ன?
நான் எவ்வளவு டென்ஷனா இருக்கேன் நீ இவ்வளவு கூல இருக்க .
நீ தானடா சொல்லி இருக்க எப்பவும் டென்சன இருக்க கூடாதுன்னு சொன்ன அதான் .
போடி லூசு உங்க அப்பா என்ன சொல்லுவரோன்னு பயமா இருக்குடி .
நீ பயபடாதடா என் செல்லாத யாருக்கு தான் புடிக்காது . நான் வெளில வந்து நிக்குறேன் நீ வா ஓகே .
ம்ம் வா
வா ராசா வா இதான் எங்க வசந்த மாளிகை நல்லா பாத்துக்க.
நாய் எதுவும் இல்லலடி உங்க வீட்ல .
இல்லப்பா தைரியமா வரலாம் வா .
அதானே பாத்தேன் அப்படியே இருந்து இருந்தாலும் உன் தொல்ல தாங்க முடியாம வீட்ட விட்டே வெளில ஓடி போய் இருக்கும் .
ஏய் சும்மா இருடா உள்ள வந்து அடக்க ஒடக்கமான பையனா இருக்கனும் என்ன சரியாசரிங்க மேடம் போங்க .
அப்பா , இவங்க தான் சிம்பு, சிலம்பரசன்
வாங்க தம்பி உக்காருங்க
நன்றிங்க சார்
வினிதா அம்மா கிட்ட சொல்லி காபி போட்டு எடுத்துட்டு வாமா.
ம்ம் சரிங்க அப்பா
,அம்மா......, அப்பா உங்கள கூப்டாரு நீங்க போங்க நான் காபி போட்டு எடுத்துட்டு வரேன்
ம்ம் சரிவா
சொல்லுங்க தம்பி உங்கள பத்தியும் உங்க குடும்பத்த பத்தியும்.
நான் அம்மா , அப்பா ஒரு தங்கச்சி மட்டும் தாங்க சார் , தங்கச்சிக்கு கல்யாணம் ஆகிடிச்சி.எனக்கு உங்க பொண்ண ரொம்ப புடிச்சி இருக்கு கல்யாணம் பண்ணிக்கணும்னு ஆசை பட்றேன்.நீங்க சரின்னு சொன்னிங்கனா நான் ஜனவரி 27 u .s போறேன் . அதுக்குள்ளே கல்யாணம் முடிச்சிட்டு உங்க பொன்னையும் என் கூட கூப்பிட்டு போயடுவேன் சார்
சரிபா என் பொண்ண புடிச்சி இருக்குனு சொல்ற காதலிக்கிறேன்னு சொல்லற நீ என் பொண்ண எந்த அளவுக்கு காதலிக்கிறேன்னு எனக்கு தெரியனும் .
சொல்லுங்க சார் நான் என்ன செஞ்சா நீங்க நம்புவீங்க ?
எத்தன வருஷம் என் பொண்ண தெரியும் உங்களுக்கு
2 வருஷமா தெரியும் சார்
சரிபா எனக்கு என் பொண்ணு சந்தோசம் தான் முக்கியம் அதுக்க நான் என்ன வேணும்னாலும் பண்ணுவேன் .உங்களோட காதல் உண்மையானதா இருந்தா நானே உங்கள சேத்து வைக்கிறேன் .நீங்க லவ் பண்ண இந்த ரெண்டு வருஷத்துல தினமும் பேசி இருப்பீங்க . வாரத்துக்கு 2 முறையாவது பாத்து இருப்பீங்க .இதனால சண்டை வந்தாலும் சாமதானாமா போய் இருப்பீங்க .உங்க காதல் உண்மையனதுனா நீ u .s போய்ட்டு வர வரைக்கும் என் பொண்ணு கூட பேச கூடாது , பாக்க கூடாது. நீ இங்க இருந்து போகும் போது எப்படி என் பொண்ண நெனச்சிட்டு போறியோ அதே மாதிரி வரும் போதும் அவளையே நெனச்சிட்டு வந்தா நானே என் பொண்ண உனக்கு கல்யாணம் பண்ணி வைக்கிறேன் .
சரிங்க சார் உங்க பொண்ணுகிட்ட 5 நிமிஷம் தனியா பேசணும் உங்க விருப்பத்தோட
ம்ம்ம்ம் சரிபா பேசிட்டு வா
.என்ன வினிதா உங்க அப்பா பேசினத எல்லாம் கேட்டல இப்ப என்ன பண்ண சொல்ற.
எனக்கு என் மேலும் உன் காதல் மேலும் நம்பிக்கை இருக்கு சிம்பு .
சரி வினிதா தினமும் பாத்து , தினமும் பேசுறது தான் காதல்னு நெனச்சிட்டு இருக்காரு உங்க அப்பா. அதையும் மீறி என் காதல் புனிதமானதுன்னு அவருக்கு புரிய வைக்கிறேன் நான் .இன்னிக்கு உன் கூட பேசறது தான் கடைசி வினிதா .இதோட நான் u .s போய்ட்டு வந்து தான உன் கூட பேசுவேன் . நீ இன்னைக்கே உன் மொபைல் நம்பர் மாத்திடு நானும் மாத்திடுவேன்நான் இந்தியாக்கு 2010 தான் வருவேன் .நான் வர அன்னிக்கே நம்ப நிச்சய தார்த்தம் வச்சிக்கலாம் ஓகே .
சரி சிம்பு என்னனே தெரியல மனசு ரொம்ப கஷ்டமா இருக்கு அழுக அழுகையா வருதுடா .
ஏய் செல்லமா அழாதடி 3 வருஷம் தானே . நீ என்ன பண்ணுவியாம் 2010 புது வருஷ அன்னைக்கு நைட் உன் பழைய சிம் கார்டு உன் செல்ல போட்டு வைப்பியாம் . அந்த வருஷம் நான் தான் உனக்கு முதல் கால் பண்ணி விஷ் பண்ணுவேனாம் அன்னிக்கே நான் சென்னை வந்து எங்க அம்மா அப்பாவ உங்க வீட்டுக்கு கூப்பிட்டு வந்து பேசி என் ராசாத்திய நான் எனக்கு சொந்தமாகிட்டு போய்டுவேன் என்ன ஓகே வா
ம்ம் சரிடா நீ எப்பவும் என்னைய மட்டும் தான் நெனச்சிட்டு இருக்கனும்
ம்ம் சரிடி செல்லம் உன்னைய நினைக்காம வேற யார நினைக்க போறேன்
வா போகலாம் .
சார் நீங்க சொன்னது எனக்கு சம்மதம் 2007 இந்த வருஷம் u .s போறேன் 2010 எப்ப வேணும்னாலும் சென்னை வருவேன் . அப்ப எங்க அம்மாவும் , அப்பவும் கூப்பிட்டு வந்து பொண்ணு கேக்குறேன் .இந்நிலை இருந்து உங்க பொண்ணு கூட நான் பேச மாட்டேன் சரிங்களா சார்
சரிபா ஆல் தே பெஸ்ட்
போய்ட்டு வரேன் வினிதா
ம்ம் பாய் சிம்பு
(இப்ப புரியுதா நம்ப வினிதா எதுக்காக போன் வச்சிட்டு மாடில இருக்காங்கனு சரி வாங்க இனி என்ன நடக்குதுன்னு பாக்கலாம் )
வினிதா , வினிதா என்னங்க வினிதாவ பாத்தீங்களா
இல்லையேமா வீட்ல தான் இருப்பா தேடி பாரு
இல்லைங்க நான் வீடு முழுக்க தேடிட்டேன் இல்ல .
சரி மாடில பாத்தியா இல்லையே .
சரி வா போய் பாக்கலாம் வினிதா ஏய் வினிதா எழுந்துறுடி ஏன் மாடில வந்து படுத்துட்டு இருக்க .
என்னமா விடிஞ்சிடிச்சா சிம்பு இன்னிக்கு நைட் கால் பண்ணுவான்னு காத்து இருந்தேன் அப்படியே தூங்கிட்டேன் .
சரி வா இன்னிக்கு கோவிலுக்கு எங்கயாச்சி போய்ட்டு வரலாம் .
இல்லமா இன்னைக்கு சிம்பு நம்ப வீட்டுக்கு வருவான் அதனால யாரும் எங்கும் போக வேண்டாம் .
என்னமா சொல்ற 3 வருஷம் உன் கூட பேசாதவன் இனி வந்து உன்ன கல்யாணம் கட்ட வா போறான்
நீங்க தானே அப்பா அவன் கிட்ட சொன்னீங்க பேச கூடாதுன்னு அதான் பேசாம இருக்கான் எனக்கு நம்பிக்கை இருக்கு அப்பா .
சரி வா கீழ போகலாம் .
வாங்க சார் வாங்க, இங்க வினிதா யாரு?
என் பொண்ணு இவங்க தான்
வாமா வந்து பக்கத்துல உக்காரு
என்னங்க சார் அப்படி பாக்குரீங்க .யாரு இவங்க அவங்களா பேசிட்டு இருக்காங்கனு பாக்குரீங்களா .என் பையன் வெளில போன் பேசிட்டு இருக்கான் அவன் வந்தா உங்களுக்கே எல்லாம் புரியும் .
யாரு சார் நீங்க கொஞ்சம் புரயுற மாதிரி சொல்லுங்க.
சிம்பு இங்க வாபா உன் மாமனாரு உன் கூட பேசணுமாம் .
என்னங்க மாமா என்ன நியாபகம் இருக்கா இல்ல மறந்துடிங்களா . நான் தான் சிம்பு 3 வருஷம் முன்னாடி உங்க பொண்ண கேட்டு வந்தேன்ல அதே சிம்பு தான் . இப்பயும் அவள , அவள மட்டும் தான் நெனச்சிட்டு இருக்கேன் . இப்ப நான் உங்க பொண்ணு மேல வச்சிட்டு இருக்குற காதல் எவ்வளவுனு உங்களுகே புரயும்னு நெனைக்கிறேன்.இப்ப உங்க பொண்ண எனக்கு கொடுப்பிங்கனு நெனைக்கிறேன் .
நிச்சயமா இவ்வளவு உண்மையா காதலிக்கிற உங்கள பிரிக்க யாருக்கு தான் மனசு வரும் .
சரிங்க மாப்ள நீங்களும் வினிதாவும் பேசிட்டு இருங்க .
நாங்களும் சம்மந்தியும் கல்யானத்த எப்ப வச்சிக்கலாம்னு பேசிட்டு இருக்கோம் .
என்னங்க மேடம் இத்தன நாள் மாமாவ பாக்காம பேசாம எப்படி இருந்தீங்க .
ம்ம் நீங்க எப்படி இருந்திங்களோ அப்படி தான் நாங்களும் இருந்தோம் . போடா லூசு எவ்வளவு கஷ்ட பட்டுட்டேன் தெரியுமா i love you da செல்லம் ..
அதான் வந்துட்டேன்லமா .இந்த புது வருசத்துல இருந்து நம்ப புது வாழ்க்கை தொடரலாம் . wish you happy new year .
same to you da செல்லம்.
(சரிங்க ரொம்ப நாள் கழிச்சி ரெண்டு பேரும் பேசிட்டு இருக்காங்க இனி நமக்கு அது வேண்டாம் )
அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் --
Saturday, December 19, 2009
பிரிவையும் நேசிப்பவள்

ஒவ்வொரு நொடியும் இருந்தும்
இறந்து கொண்டு இருகிறாய்
மாற்றம் மட்டுமே மாறாத இந்த உலகத்தில்
நிச்சயம் உன் கவலைகளும் ஒரு நாள் மாறும்
கலங்காதே தோழா தோல் கொடுக்க
தோழி நான் இருக்கிறேன்

உனக்கும் எனக்குமான இந்த இடைவெளியில்
உன் மீதான என் காதல்
அதிகரித்துகெண்டே இருப்பதால் தான்
நான் இன்னும் பிரிவை நேசித்து
கொண்டே இருக்கிறேன்

உன் மடி மீது தலை சாய்த்து
நீ தலை கோதும் அழகிற்காகவே
காதலித்தவன் என்னோ இன்று
பஞ்சு தலையணையில் கூட
தலை சாய்க்க மறுக்கிறேன்
உன் நினைவு வருவதனால்

நீ இல்லாத நேரத்து என் தனிமையில்
பெய்யும் மழை துளிகள் அனைத்தும்
எனக்கு மண் வாசத்திற்கு பதிலாக
உன் வாசத்தை தந்துவிட்டு போகின்றன
Wednesday, October 21, 2009
செல்லுடன் சேட்டை
Thursday, October 1, 2009
என்னை மறந்துவிடு

Wednesday, September 23, 2009
இனிய பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள்
எனக்கு இந்த வலை உலகில் கிடைத்த என் அம்மு செல்லம்,அப்பு செல்லம் , புஜ்ஜிசெல்லம்
தமிழரசி அம்மாவுக்கு இனிய பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள்
Friday, September 18, 2009
தேவதைக்கே வரம் கொடுக்க வந்த தேவதை

( யாரும் ஹெட்லைன் பாத்து டென்ஷன் ஆக கூடாது ஓகே )
எனக்கு இந்த தேவதைய அனுப்புவாங்க இயற்கை ராஜி இதயப்பூக்கள்
தேவதை என்றால் கேட்ட வரதை கொடுக்க வேண்டும்
முதல் வரம் : இந்த 10 வரம் இல்லாமல் எனக்கு இன்னும் 10 வரம் எக்ஸ்ட்ரா வேண்டும் (இது எப்படி )
இரண்டாம் வரம் : நான் காதலித்த அந்த முதல் மூன்று மாதம் வேண்டும்
மூன்றாம் வரம் : எந்த வகைளும் என்னால் யார் மனதும் புண் பட கூடாது
நான்காம் வரம் : இழத்தில் இருக்கும் என் சகோதர சகோதரிகளுக்கு விரைவில் விடுதலை கிடைக்க வேண்டும்
ஐந்தாம் வரம் : என் நண்பனுக்கு இந்த தேவதையை போலவே அழகான அன்பான மனைவி கிடைக்க வேண்டும்
ஆறாம் வரம் : இனி வரும் எல்லா ஜென்மங்களும் என் அம்மாவுக்கே நான் மகளாக பிறக்க வேண்டும்
எழாம் வரம் : என்னவனிடம் நான் தொலைபேசில் பேசி கொண்டு இருக்கும் போது சார்ஜ் குறைய கூடாது, நேரம் போகக்கூடாது , பைசாவும் கட் ஆக கூடாது ( ஹ ஹ ஹ ஹ )
எட்டாம் வரம் : எனது பள்ளி படிப்பு ஐ.டி.ஐ இரண்டாம் ஆண்டு முழுவதும் திரும்ம கிடைக்க வேண்டும்
ஒன்பதாம் வரம் : உலகத்தில் சாதி, மதம் ஒழிக்க பட வேண்டும்
பத்தாம் வரம் : இனி வரும் எல்லா ஜென்மங்களிலும் என்னவனே எனக்கு இனியவனாய் அமைய வேண்டும்
(இன்னும் எக்ஸ்ட்ரா 10 வரம் இருக்குல ம்ம்ம்ம்ம்ம்ம்ம் )
என்னவன் என்னிடம் கேட்ட10 வரங்களும் நிறைவேற வாழ்த்துக்கள் ( அவங்களுக்கு நான் தானே தேவதை ஹ ஹ ஹ )
என் கிட்ட வந்த தேவதைய நான் யார் யாருக்கு அனுப்ப போறேன்
ஜமால் அண்ணன்
நிஜமா நல்லவர் அண்ணன்
சத்ரியன்
Friday, September 11, 2009
தொடர் பதிவு

என்னை இந்த தொடர் பதிவுக்கு அழைத்தவர் லோகு
1. A – Avatar (Blogger) Name / Original Name : /பிரிவையும் நேசிப்பவள் /காயத்ரி
2. B – Best friend? : butterfuly குய்
3. C – Cake or Pie? : இரண்டும் பிடிக்காது
4. D – Drink of choice? : இரண்டும் பிடிக்காது
5. E – Essential item you use every day? : மொபைல்
6. F – Favorite color? : மெருன்
7. G – Gummy Bears Or Worms : புரியவில்லை
8. H – Hometown? : சென்னை (ஆவடி)
9. I – Indulgence? : என்னவனை கோப படுத்துவது
10. J – January or February? : பிப்ரவரி
11. K – Kids & their names?::)))))))
12. L – Life is incomplete without?: காதல்
13. M – Marriage date? - கல்யாணம் ஆனதுக்கு அப்பறம் சொல்கிறேன்
14. N – Number of siblings? : ஒரே செல்ல பொண்ணு நான் மட்டும் தான்
15. O – Oranges or Apples? ஆப்பிள்..
16. P – Phobias/Fears? : புழு
17. Q – Quote for today? : அன்றைய வேலைகளை அன்றைக்கே செய்து முடிக்க வேண்டும்
18. R – Reason to smile? : சோகத்தை மறைப்பதற்கு
19. S – Season? குளிர் காலம்
20. T – Tag 4 People?-: யாரும் இல்லை
21. U – Unknown fact about me? இது வரைக்கும் எதுவும் இல்ல
22. V – Vegetable you don't like? கேரட், பீட்ரூட், முள்ளாங்கி......... இன்னும் நிறைய இருக்கு
23. W – Worst habit? : நண்பனின் மனதை எப்பவும் காய படுத்தி கொண்டே இருப்பது
24. X – X-rays you've had? இது வரை இல்லை
25. Y – Your favorite food? : சாம்பார் சாதம்
26. Z – Zodiac sign? மகரம்

1அன்புக்குரியவர்கள்: குழந்தைகள்
13(அ)ஃறிணையில் பிடித்தது: புஜ்ஜி குட்டி அதாங்க பூனைக்குட்டி
எப்படியோ கொடுத்த வேலையே முடிச்சிட்டேன் :))))))))))
Thursday, September 10, 2009
காதல் தந்த வலி

Thursday, August 27, 2009
“And, Now…”
எப்பொழுதும் மிஸ்ஸுடு கால் மட்டுமே
கொடுக்கும் செல் ஒன்று
என்னிடம் இருந்தது.
இரவு நேரத்தில் வீட்டுக்கு வந்ததும்
அவனுக்கு மிஸ்ஸுடு கால் கொடுத்து
நன்றாக மொக்கை போடுவேன்
வெகு சுவாரஸ்யமாக இருந்தது அந்த வாழ்க்கை!
ஒரு நாள் அவனுக்கு ராங் நம்பர் ஒன்று வர
ராங்க நம்பரோடு ஸ்ட்ராங் ஆகிவிட்டான்
அன்றிலிருந்து அவுட்கோயிங் மட்டுமே
போன என் செல்லில்
இன்கமீங் வருவதும் நின்றுவிட்டது
Tuesday, August 25, 2009
நண்பர் சிங்கைநாதனுக்காக பிரார்த்திப்போம்
எல்லோருமாக அவருக்காக பிரார்த்திப்போம்.
இங்கும் பாருங்கள்
முடிந்த அளவு இவ்விடயத்தை உங்கள் வலையின் மூலம் உங்கள் நட்புகளுக்கு கொண்டு செல்லுங்கள்.
அன்புடனும் நட்புடனும் …
காயூ
Saturday, August 22, 2009
சொர்கத்திற்கு செல்ல

அந்தி மாலை நேரம்,
Sunday, August 2, 2009
நண்பர்கள் தினத்தில் நண்பர்களுக்கு விருது

எனக்கு இந்த விருது கொடுத்த சந்ரு மற்றும் அபுஅஃப்ஸர் அண்ணாக்கு மிக்க நன்றி
நண்பர்கள் தினத்தில் என் நண்பர்களுக்கு இந்த விருதை கொடுப்பதில் மிக்க மகிழ்ச்சி
மறவாதே கண்மணியே.. லோகு
Honey ரோஸ்
http://vinupragadeesh.blogspot. வின்னு
காடுவெட்டி சுப்பு
உங்களில் ஒருவன் "ஷஃபி"
அச்சம் தவிர்... லோகு
மீசைக்காரி ராம் அண்ணா
அனைத்து நண்பர்களுக்கும் நண்பர்கள் தின வாழ்த்துக்கள்
Wednesday, July 29, 2009
Monday, July 27, 2009
Wednesday, July 22, 2009
சுவாரஸ்ய பதிவர் விருது

நாங்களும் வங்கிடோம்ள ஆவார்டு
எனக்கு இந்த ஆவார்து கொடுத்த தமிழக அரசி (சாரி) தமிழரசி அம்மாவுக்கும் , ஷஃபிக்ஸ்கும் எனது நன்றிகள்
என்னை பெருமை படுத்திய இந்த ஆவார்டு மற்றவர்களையும் சந்தோஷ படுத்தட்டும் .
http://pappakudi.blogspot.com/. ராம்.CM அண்ணா
http://viyaa-ninaivugal.blogspot.com/ வியா
http://puthiyavaarppugal.blogspot.com/ பூர்ணிமா சரண்
http://panithuliyaai.blogspot.com/ இவன்
http://yesuvadian.blogspot.com/ நசரேயன்
http://yaavatumnalam.blogspot.com/ சுசி
சுசி மறுபடியும் எனக்கு பட்டாம்பூச்சி விருது கொடுத்து இருகாங்க நன்றி சுசி
Thursday, July 16, 2009
விழியில் கைதானேன்
முகம் மூடி என்னை கொள்ளை கொள்ள வந்த
முகமூடி கொள்ளைகாரி நீ தானோ
உன் கண்களை மட்டும் எதற்க்கு திறத்து
வைத்திருக்கிறாய் உன் இதயத்தை
திருடிய குற்றத்திற்காக இமைகளால்
என்னை கைது செய்து உன் மன சிறையில்
என்னை ஆயுள் கைதியாக்கி நித்தம் நித்தம்
முத்த தண்டனை கொடுபதற்காகவா
Wednesday, July 8, 2009
ஏக்கம்
Friday, July 3, 2009
வெட்கம்
Friday, June 26, 2009
நானும் பெங்குவினும்
Thursday, June 25, 2009
இதுவும் காதல்
போட்டுகிறாங்க
http://thulasidhalam.blogspot.com/2009/02/blog-post_04.html
இத படிச்சதுக்கு அப்பறம் இந்த பறவைக்கு இருக்க அன்பு, பாசம், காதல், ஏன் மனுசங்களுக்கு இல்லன்னு தோனுச்சி
உங்களுக்கு என்ன தோணுதோ அத சொல்லிட்டு போங்க
Thursday, June 18, 2009
உன்னோடு கலந்த என் காதல்

உன்னை பற்றிய ஆயிரம் ஆசைகள்
மனதில் சுமந்து கொண்டு
என்னை கடந்து செல்லும் ஒவ்வொரு
நொடியிலும் இந்தநொடி நீ
என்ன செய்து கொண்டு இருப்பாய் என்று
என் நிமிடங்களையும் உனக்காய்
செலவழித்து கொண்டு இருக்கிறேன்
நாளைய விடியலிலாவது உன்
முகம் காண மாட்டேனா
என்ற ஏக்கங்களுடன் விழி மூடுகிறேன்
உனக்காய் காத்திருந்த நொடிகள்
வீண் போகாமல் மாமன் மகன்
நி வர
நீ என்னை கட்டி அணைத்ததில்
காற்றுக்கும் மூச்சி திணறல்
ஏற்பட்டு விட்டது .
குளிர் காற்றும் என்னை திண்ட விடாமல்
உன்னையே எனக்கு
போர்வையாய் மாற்றினாய்
உன்னோடு நான் கொண்ட காதல்
நான் மண்ணோடு மறையும் வரை
என்னோடு கலந்திருக்க வேண்டும்
Tuesday, June 2, 2009
வேண்டுகிறேன்

குடை பிடித்தபடி
குடை இல்லாத நேரத்து
மரத்தடி நிழலில் ஒதுங்கி
கடலில் கால் நானைத்தபடி
கவிதை சொல்லியபடிஉன்னோடு
காதலித்தபடிஉன்னையே
ஹைய் பா நான் மறுபடியும் வந்துட்டேன் ஒகே
இனி எப்பவும் போல கும்மி அடிக்கலாம்:))))))))))
Tuesday, May 26, 2009
உன்னிடமிருந்து விடை பெறுகிறேன்

விழி திறந்து பார்க்கையில் நித்திறையை
போல் காற்றில் கரைகிறாய்.
நீ என்னை விட்டு விலகின பிறகு
என் நிழலும் எனக்கு அன்னியமாய் போனது.
நீ என்னை வெறுக்க உன் வீட்டு
பூனை குட்டியையும் அன்னியமாக்கதே.
உன் முழு அன்பு அதற்காவது கிடைக்கட்டும்
உன் மெளனத்தால் ஒவ்வொரு நாளும்
தீயில் விழுந்த புழுவாய் துடித்து கொண்டு இருக்கிறேன்.
உன்னை விட்டு பிரியும் நாள் நெருங்கி
கொண்டு இருப்பதை நினைக்கும் போதெலலாம்
வாழ்வின் கடைசி நொடியில் என் சந்தோசங்களை
நிறைவேற்றி கொள்வதை போல
உன்னிடம் என் ஆசைகளை சொல்ல நினைக்கிறேன்
என் மனம் தாங்கிய சுமைகளை கண்ணீரால்
கரைத்து கொண்டு இருக்கிறேன்.
இதயமே இல்லாத மிருகமாய்
உன்னிடமிருந்து என் நினைவுகளையும் ,
உன்னிடமிருந்து உன் நினைவுகளையும்
எடுத்து கொண்டு விடை பெறுகிறேன்
விடை கொடு
Sunday, May 24, 2009
என்னை பற்றி உங்களுக்கு

1.உங்களுக்கு ஏன் இந்தப் பெயர் வந்தது? உங்களுக்கு உங்க பெயர் பிடிக்குமா ?
என் ஜாதகப்படி முதல் எழுத்து “கா”வில் தொடங்குவதால் காயத்திரி என்ற இந்த பெயர் வந்தது.
ரொம்ப பிடிக்கும்.... எங்க அம்மா எனக்கு இன்னொரு பெயர் வச்சி இருக்காங்க அனிதான்னு அத பயன்படுத்திக் கொள்வேன்.
2.கடைசியாக அழுதது எப்பொழுது?
20/05/09 புதன்கிழமை மதியம் 1.45 க்கு அழுதேன்.:(((((
3.உங்களோட கையெழுத்து உங்களுக்கு பிடிக்குமா?
ம்ம்ம்ம்ம்ம்ம்ம் ரொம்ப பிடிக்கும்... அதான் 100 பக்கம் அசைன்மென்டுக்கு 125 பக்கம் எழுதி கொண்டுபோய் கொடுத்தேன் (ஆன நான் எழுதுனது அவங்களுக்கு புரியுமான்னு தெரியல?:)))))))))))
4.பிடித்த மதிய உணவு என்ன?
சாம்பார் சாதம் , அப்பளம் ( பிந்து அப்பளம் இல்ல எந்த அப்பளமா இருந்தாலும் ஒகே)
5.நீங்கள் வேறு யாருடனாவது உங்களோட நட்பை உடனே வச்சுக்குவீங்களா?
நம்ப கூட கடைசி வரைக்கும் வரப் போவது நட்பு தான் . அத வச்சிக யோசிக்கலாமா?
6.கடலில் குளிக்க பிடிக்குமா....அருவியில் குளிக்க பிடிக்குமா?
கடலில் அலையை இரசிக்க மட்டும் தான் பிடிக்கும் . அருவியில் குளிச்சா மூச்சி முட்டும் .அதனால எனக்கு ஆத்துல குளிக்க தான் பிடிக்கும் . (அதாவது எங்க ஆத்துல குளிக்கிறதை சொன்னேன் )
7.முதலில் ஒருவரைப் பார்க்கும் போது எதை கவனிப்பீர்கள்?
கண்கள் , முடி , உடை ,
8.உங்க கிட்ட உங்களுக்கு பிடிச்ச விஷயம் என்ன? பிடிக்காத விஷயம் என்ன ?
என் கை விரல்களில் நகம் வளர்ப்பது மிகவும் பிடிக்கும் .
என்னை பிடித்தவர்களை மிகவும் கோவப்படுத்துவது பிடிக்காது( இருந்தாலும் மாற்றிக்கொள்ள முடியவில்லை)
9.உங்க சரி பாதி கிட்ட உங்களுக்கு பிடித்த பிடிக்காத விசயம் எது?
என்னோட சரி பாதி என் கிட்ட முழுசா வந்ததுக்கு அப்பறம் இதப் பத்தி சொல்றேன்... ஒக்கே
10.யார் பக்கத்துல இல்லாம இருக்குறதுக்கு வருந்துகிறீர்கள் ?
என் ஃப்ரண்ஸ்
11.இதை எழுதும் போது என்ன வர்ண ஆடை அணிந்து உள்ளீர்கள்
மெரூன் கலர் சுடி
12.என்ன பார்த்து//கேட்டுக் கொண்டு இருக்குறீங்க ?
டைப் பண்ணறதால எங்க சார் வராரான்னு பாத்துக்கிட்டு இருகேன்.
அயன் படத்துல நெஞ்சே... நெஞ்சே...நீ எங்கே நானும் அங்கே( அந்த பாடல் கேட்டுகிட்டு இருக்கேன்)
13.வர்ணப் பேனாக்களாக உங்களை மாற்றினால் என்ன வர்ணமாக உங்களுக்கு ஆசை?
மெரூன் கலர் எனக்கு ரொம்ப பிடிச்ச நிறம். அப்பறம் எப்பவாவது கருப்பு
14. பிடித்த மணம் ?
மண் வாசம் இப்பவும் அத அனுபவிச்சுட்டு தான் இருக்கேன்..... அட இங்க மழை வருதுன்னு சொல்றேன் அவ்வளவு தான் .
அப்பறம் மாலை நேரம் மல்லிகை மலரும் வாசம்.புது புத்தக வாசம்
15.நீங்க அழைக்கப் போகும் பதிவரிடம் உங்களுக்கு பிடித்த விஷயம். அவரை அழைக்கக் காரணம் என்ன ?
சக்தி காதல் கவிதை மட்டும் இல்லாமல் மத்த எல்லா கவிதையும் அழகா எழுதுவாங்க.....வியா கவிதையில் இருந்து இப்ப புதுசா கதை எழுதுறாங்க... கொஞ்சம் நிஜம்... கொஞ்சம் ...கற்பனை கலந்து.
16.உங்களுக்கு இதை அனுப்பிய பதிவரின் பதிவில் உங்களுக்குப்பிடித்த பதிவு ?
என்னை இந்த பதிவிற்கு அழைத்தவர் அ.மு.செய்யது .அவருடைய பதிவில் எனக்கு பிடித்தது அந்த முதல் சந்திப்பு கதை எனக்கு ரொம்ப பிடித்து இருந்தது....
17. பிடித்த விளையாட்டு?
பிடித்த விளையாட்டுன்னு எதுவும் சொல்ல முடியாது. ஆன பாப்பாங்க கூட விளையாடறது பிடிக்கும்.
18.கண்ணாடி அணிபவரா?
இல்லை
19.எப்படிப் பட்ட திரைப் படம் பிடிக்கும்?
நல்ல காதல் திரைப் படங்கள், காமடி திரைப்படங்கள். ஜெயம் , கோவில், பருத்திவீரன், நெஞ்சிருக்கும்வரை.
20.கடைசியாகப் பார்த்த படம்?
வெண்ணிலா கபடி குழு அதுல கூட கடைசி சீன் பாக்கவில்லை...
21.பிடித்த பருவ காலம் எது?
இலையுதிர்க் காலம் முடிந்த பிறகு . மீண்டும் புதிதாக இலை வரும் காலம் . அத எப்படி சொல்றதுனு தெரியலை (நீங்க எல்லாம் ரொம்ப அறிவாளிங்க நீங்களே புரிந்துகொள்வீர்கள் என்று எனக்கு தெரியும்:)))))))))}]
22.என்ன புத்தகம் படித்துக் கொண்டு இருக்கீங்க?
இப்போதைக்கு பரிட்சைக்காக என்னோட புத்தகத்தை மட்டும் தான் படிச்சிட்டு இருக்கேன்.
23.உங்கள் டெஸ்க்டொப்-ல் இருக்கும் படத்தை எத்தனை நாளுக்கு ஒரு நாள் மாற்றுவீர்கள்?
எனக்கு எப்போதெல்லாம் தோனுகிறதோ அப்போதெல்லாம் மாற்றுவேன்.
24.பிடித்த சத்தம் ? பிடிக்காத சத்தம்?
பிடித்த சத்தம் : ஜெயம் படத்துல விசில் சத்தம் , வோடபோன் விளம்பரத்துல வர பொம்மைகள் பேசும் சத்தம் ரொம்ப பிடிக்கும்,
பிடிக்காத சத்தம் : நான் தூங்கன பிறகும் வர டிவி சத்தம்
25.வீட்டை விட்டு நீங்கள் சென்ற அதிக பட்ச தொலைவு?
5 நாள் அம்மாவையும் வீட்டையும் விட்டுட்டு ஊட்டி , கொடைக்கானல் போனது
26.உங்களுக்கு ஏதாவது தனித் திறமை இருக்கிறதா?
தனித்திறமைன்னு ஒன்றும் இல்லை ஆனால் நான் எழுதுற கவிதைகள் எப்படி வந்தது எங்க இருந்து வந்தது என்று தெரியலை (நீங்க ஒத்துக்கிட்டா வேணும்னா அத ஒரு திறமைனு வச்சிக்கலாம் என்ன சொல்றீங்க)
27.உங்களால் ஏற்றுக் கொள்ள முடியாத ஒரு விஷயம்?
அப்படி எல்லாம் எதுவும் இல்லை .எதா இருந்தாலும் அதன் போக்கிலேயே போய் பழகிட்டேன்.
28.உங்களுக்கு உள்ளே இருக்கும் சாத்தான்?
எல்லார் மேலேயும் அதிகமா அன்பா இருப்பது
29.உங்களுக்கு பிடித்த சுற்றுலா தலம்?
ஊட்டி , கொடைகானல், வேலுர் கோல்ட் டெம்புல்
30.எப்படி இருக்கணும்னு ஆசை?
இப்ப எனக்கு கிடச்சி இருக்க ஃப்ரண்ஸ் விட்டு போகாமல் எப்பவும் அவங்க கூடவே இருக்கனும் என்று ஆசை ( ஆசை பட்டதெல்லாம் நடக்குமா என்ன?)
31.மனைவி/ கணவர் இல்லாம செய்ய விரும்பும் ஒரே காரியம் ?
அதெல்லாம் அவங்க வந்ததுக்கு அப்பறம் பாக்கலாம!!!!!!
32)வாழ்வு பற்றி ஒரு வரி சொல்லுங்க?
நான் ரொம்ப சின்ன பொண்ணு நான் என்ன சொல்றது இதுக்கு......
ம்ம்ம்ம்ம்ம் கடவுள் கொடுத்த ஒரு லைப் அத நல்லா சந்தோஷமா வாழனும் அதான்.... .
Monday, May 18, 2009
நீயே வேண்டும் என்று வரம் கேட்பேன்

இறைவனிடம் போராடி மறுஜென்மம்
எடுத்து என்னை பெற்றெடுத்தாய்......
உன் இரத்தத்தையே எனக்கு உணவாக்கினாய்....
நான் உன் மார்பினில் எட்டி உதைக்கும் போதும்
பிஞ்சி பாதங்கள் என்று முத்தம் இட்டாய்.....
நான் நடை பழகும் போது கால் தடுமாறி
நான் கீழே விழ உன் மனம் பதறி...
என் கை பிடித்து நடை பழக கற்று கொடுத்தாய்
உன் ஆசைகளை துறந்து
என் சந்தோசங்களை நிறைவேற்றினாய்....
கண்கள் மோதலால் வந்த காதலால்
உனை மறந்து எண்ணவணை மணந்தேன்.....
உணை மறந்ததால் தான் என்னவோ
இன்று நூல் அறுந்த பட்டம் போல்
திசை தெறியாமல் தடுமாறி கொண்டு இருக்கிறேன்.....
இன்றும் என் கை பிடித்து
வாழ்கை பயணம் செய்ய
கற்றுக் கொடுத்து கொண்டு இருக்கிறாய்...
இந்த ஜென்மத்தில் மட்டுமல்ல
இனி என் எல்லா ஜென்மத்திலும்
நீயே என் தாயாக வேண்டும் என்று
இறைவனிடம் வரம் கேட்பேன்!!!!!!!
Friday, May 15, 2009
????
Friday, May 8, 2009
நன்றி விகடன்

http://youthful.vikatan.com/youth/gayathripoem05052009.asp
எனக்கு மிக மிக சந்தோஷமா இருக்கு.
என்னுடைய கவிதைகளுக்கு பின்னுட்டம் இட்டு என்னை ஊக்க படுத்திய என் நண்பர்களுக்கு நண்றியை தெரிவித்துகொள்கிறேன்
விகடனுக்கும் என் நண்றிகளை தெரிவித்துகொள்கிறேன்
என் கவிதைகூட வேற யாருடைய கவிதையோ ரெண்டு வந்து இருந்துச்சி அவங்க கவிதையும் நல்ல இருந்துச்சி அவங்க பெயர் இப்ப நியாபகம் இல்ல .இருந்தாலும் அவங்களுக்கும் நம்ப வாழ்த்துக்களை தெரிவிச்சுக்கலாம் என்ன் நான் சொல்றது சரிதானே. பெயர முக்கியம் கவிதை தானே முக்கியம்
Tuesday, May 5, 2009
சொல்லாத காதலும் காதல் தானே

சொல்லாத காதலும் காதல் தானே
சொல்லாத காதலும் காதல் தானே
உனக்கு பிடித்த உடையில் கண்களில்
Monday, May 4, 2009
இதற்கு என்ன பெயர்

Friday, May 1, 2009
யூத் ஃபுல் ஜூட் பிரிவில் என்னேடா கவிதை

வலை உலகில் முதன் முறையாக என்னேடா இதழ் தொட்ட பட்டாம்பூச்சி இந்த கவிதை யூத் ஃபுல் விகடனில் வந்து இருக்கு என்ன சொல்றதுனு தெரியல ரொமப ரொம்ப ரொம்ப சந்தோஷமா இருக்கு இந்த டைம்லா நான் யூத் ஃபுல் விகடனுக்கு என் நன்றிகளை தொறிவித்து கொள்கிறேன்.
அது மட்டும் இல்லாமா நீ எழுதுற கவிதைகளை யூத் ஃபுல் விகடனுக்கு அனுபுன்னு விகடன் ஐடி கொடுத்த சக்திக்கும். என்னோடா கவிதை விகடனில் பாத்து என்க்கு சொன்ன தமிழரசி அம்மாவுக்கும் என்னோட நண்றிகளை தெறிவித்து கொள்கிறேன்.
நான் எழுதுற கவிதைகளை படித்து எனக்கு ஊக்கம் அளித்த என் வலை உலக நண்பர்களுக்கும் தோழிகளுக்கும் நண்றிகளை தெறிவித்து கொள்கிறேன்.
இதுல எனக்கு இனொரு சந்தோஷமும் இருக்கு.
இங்கே..(மெல்லிய பூக்களிலெல்லாம)
(நிர்வாண இரவுகள்)
Tuesday, April 28, 2009
இதழ் தொட்ட பட்டாம்பூச்சி

பார்த்து பட்டாம் பூச்சி பறக்கவும்
நீ என்னை விட்டு போன பிறகு
என் இதய துடிப்பை பார்த்து
மீன்கள் தரையில் துடிக்கவும்
கற்றுகொண்டதடா
Friday, April 24, 2009
நாளை விடியலாவது நல்ல விடியலாய் அமையுமா இலங்கை தமிழ் மக்களுக்கு...

என் சகோதர சகோதரிகளே இன்னும்
உங்களின் ரத்தவெறி அந்த பிஞ்சு குழ்ந்தைகளை பார்த்துமா உங்களால் கொள்ள முடிகிறது
இல்லங்கை தமிழ் மக்களே உங்களை எண்ணி
இந்திய அரசாங்கமே இதற்கு நீ தான்
உன் அரசியல் போதைக்கு நம் மக்களையே
நீங்கள் எடுக்கும் முயற்சி எதுவானாலும்
அங்கே கூட்டம் கூடமாக எரிக்க படுவது
ஒரு நாள் நாடு தழுவிய வேலை நிறுத்தால் ithanaal
இப்போது இல்லங்கைக்கு அனுப்பி வைக்க
நாளைய விடியலாவது இலங்கை தமிழ் மக்களுக்கு நல்ல விடியலாய் அமையுமா என்று கடவுளிடம் பிராத்திப்போம்
Wednesday, April 22, 2009
என்ன சுற்றி வரும் பட்டாம்பூச்சி

தமிழுக்கே அரசியான தமிழரசி அம்மா http://ezhuthoosai.blogspot.com/ இவங்கள பத்தி நான் சொல்லறத விட நீங்களே போய் பாருங்களேன் கவிதை எல்லாம் அழக எழுதுவாங்க
வியா புதுசா கதை எழுத ஆரம்பிச்சி இருகாங்க http://viyaa-ninaivugal.blogspot.com/ அவங்க இன்னும் நெறைய கதை கவிதை எழுத என் வாழ்த்துக்கள்
Monday, April 20, 2009
இனிய திருமண நல் வாழ்த்துக்கள்

இன்று மாலை திருமணம் செய்ய விருக்கும் என் தோழி சுஜிக்கு
புது இல்லறம் நல்லறமாய் அமைய என் வாழ்த்துக்கள் .
ஹாய் டி செல்லம் இனிய திருமண நல் வாழ்த்துக்கள்
புது இல்லத்தில் புது மணமகளாய் அடி எதுத்து வைக்கும் என் குல விளக்கே
.
அறிமுகம் இல்லாத மனிதர்கள் , பரிச்சய படாத குணங்கள் என எல்லாம் கலந்து இருக்கும் உன் புகுந்த வீட்டில் நியும் அவங்கள மாதிரி அவங்க குணத்துக்கு தகுந்த மாதிரி நடந்துக்கோ .
எப்பவும் சந்தோசமா இரு .
இனி உன்னில் பாதிய இருக்க போற உன் கணவர் கிட்ட அன்பா இரு .
எந்த விஷயமா இருந்தாலும் விட்டு கொடுத்து போ. அதுக்காக நீ எதுக்காகவும் உன் தன்மானத்த விட்டு கொடுக்காத .
கணவரோட அம்மாவ உன் அம்மாவ நினசிகோ பெரியவங்க கிட்ட மரியாதைய நடந்துக்கோ . உன் நாத்தனார் கிட்ட ஒரு தோழி போல நடந்துக்கோ .எப்பொழுதும் கவலை இல்லாமல் சந்தோசமா இரு
மற்றவை நேரில்
வாழையடி வாழையாய் பூமலரும் சோலையாய்
நல்லதொரு வேளையில் புதுமனங்கள் சேர்ந்திட
தேவர்களும் வாழ்த்துவர் மாந்தர்களும் வாழ்த்துவர்
உன் தோழியான நானும் வாழ்த்துவேன் என் தோழைமையான என் ப்லோக் உலக நண்பர்களும் உன்னை வாழ்த்த
வாழ்க நிவீர் பல்லாண்டு பல்லாய்ரத்தாண்டு என்று இந்த உலகும் உன்னை வாழ்த்தும்
